மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருமண மண்டபம் இடிப்பு! சூத்திரன் மீது தடையின்றி பாயும் நீதி!

“சூத்திரனுக்கு ஒரு நீதி! தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி”, என்று பாரதியார் பாடியது போல தான் இங்கே நடந்து கொண்டுள்ளது.

0

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருமண மண்டபம் இடிப்பு!
சூத்திரன் மீது தடையின்றி பாயும் நீதி!


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் திருமண மண்டபம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக நிரூபிக்கப்பட்டு இடித்து தள்ளுவதற்கு ஏற்பாடு நடந்து கொண்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மருவத்தூரை சார்ந்த ராஜா என்ற சமூக செயல்பாட்டாளர் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மாவட்டத்தில் 93 இடங்கள், நீர்நிலைகள் உட்பட ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

உடனே நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர்..உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகிறோம் என்ற போர்வையில் சாதாரண உழைக்கும் மக்களின் மீது தாக்குதல்களை துவக்கி விட்டனர் அரசு அதிகாரிகள்.

படிக்க:

ஆக்கிரமிப்பு அகற்றம்: திமுக அரசுக்கு சவால்!
♦ ஈஷா யோகா ஜக்கி: மலை முழங்கி மகாதேவன்!

அதேசமயம் நெருக்கடி முற்றியதால் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் 80% நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று நிரூபணமாகியுள்ளது. அதையும் இடிக்க முடிவாகியுள்ளது.

இதேபோல பொது சொத்துக்களையும் அரசாங்கத்தின் நிலங்களையும் கைப்பற்றி அதில் தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றார் ஜக்கி வாசுதேவ் மற்றும் காஞ்சி சங்கர மடம் போன்ற பார்ப்பன மடாதிபதிகள்.

இந்த இருவரும் ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள். ஆனால் அவர்கள் பிறப்பால் பார்ப்பனர்கள் என்பதால் அவர்களின் ஆக்ரமிப்புகளின் மீது சட்டம் உடனே பாயவில்லை. உறுதியான ஆதாரங்கள் இருந்தாலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுகிறது.

“சூத்திரனுக்கு ஒரு நீதி! தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி”, என்று பாரதியார் பாடியது போல தான் இங்கே நடந்து கொண்டுள்ளது.

நம்மை பொருத்தவரை பொதுச் சொத்துக்களை ஆக்கிரமித்து மாடமாளிகைகளையும், பள்ளி, கல்லூரி வளாகங்களையும் அரசு அதிகாரிகளின் துணையுடன் கட்டியுள்ள எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அரசியல்வாதிகள், கல்வி வியாபாரிகள், ஆன்மீக விவியாபாரிகள் மட தலைவர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை நடத்துவதும் அந்த நிலங்களை அரசு கைப்பற்றி மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதும் காலத்தின் கட்டாயம்.

  • ஆதவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here