பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 154 வது பிறந்த தினம் தமிழ்நாடு முழுவதும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆலைவாயிலில் கொடியேற்றி தோழர் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை முழக்கமாக முழங்கினார்கள்.

இந்திய தொழிலாளி வர்க்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்தின் பிடியில் சிக்கி நவீன அடிமையாக்கப் பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் பலவீனங்களை அறிந்த முதலாளித்துவம் அதனை பயன்படுத்தி காவி பாசிசத்தின் துணையுடன் மத, இன, சாதி ரீதியாக பிளவுபடுத்தியுள்ளது.

மறுபுறம் நிரந்தர தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி, பயிற்சி தொழிலாளி என தொழிலாளி வர்க்கத்தை ஆலைக்குள்ளும் இணைய விடாமல் பிளவுபடுத்தியுள்ளது முதலாளித்துவ கும்பல். கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்களின் சம்பளம் குறைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கம் இதனை உணர விடாமல் உழைப்பு சுரண்டலை தீவிரப்படுத்துகிறது முதலாளித்துவம்.

இந்தியாவை ஆளும் காவி பாசிச கும்பலோ மக்களை வறுமையில் ஆழ்த்தி பிணந்திண்ணி கழுகுகளாய் வரிக்கு மேல் வரி போட்டு சுரண்டுகிறது. ஒருபுறம் கார்ப்பரேட்டின் உழைப்புச் சுரண்டலும் மறுபுறம் காவி பாசிஸ்டுகளின் வரிச் சுரண்டலும் என இரு பக்க இடியாய் உழைக்கும் வர்க்கம் வாழ வழியற்று நிற்கிறது.

உழைக்கும் மக்களை அரசியல்படுத்த வேண்டிய கம்யூனிச அமைப்புகளோ மக்களிடம் நெருங்காமல் அவர்களை அரசியல் படுத்தாமல் நிற்கின்றன. இந்த நிலையில் சோவியத் புரட்சியின் நாயகன் தோழர் லெனினை மக்களிடம் நினைவு கூற வேண்டியதின் அவசியத்தை 154 வது பிறந்த நாள் நமக்கு உணர்த்துகிறது.

இந்தியா மட்டுமல்ல் உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையும், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமும் தவிர்க்க இயலாமல் நிகழும். அதற்கு முன்னணி படையான தொழிலாளி வர்க்கத்தினை தயார் செய்ய வேண்டிய புரட்சிகர இயக்கங்களின் கடமை. அதனை உணர்ந்து செயல்படுவோம்.!

திருவள்ளூர் மாவட்டம்

M.H.H கிளை

ஆசான் மாமேதை லெனின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு M.H.H கிளையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளுர் மாவட்ட தலைவர் தோழர் ராஜேஷ் கொடியேற்றி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் புஜதொமு மாநில இணைச்செயலாளர் தோழர் விகந்தர் கலந்துக் கொண்டார்.

கெமின் கிளை

ஆசான் மாமேதை லெனின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு கெமின் கிளையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளுர் மாவட்ட பொருளாளர் தோழர் .சரவணன் கொடியேற்றினார்.மாநில இணைச்செயலாளர் தோழர்.கே.எம் விகந்தர் உரையாற்றினார்.

GROBEST மற்றும் HERRENEST கிளைகள்

ஆசான் மாமேதை லெனின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு GROBEST மற்றும் HERRENEST கிளைகள் சார்பில் சங்க தொழிலாளர்கள் ஆசான் லெனின் படத்திற்கு மலர் தூவிமரியாதை செய்தனர்.

வேலூர் மாவட்டம்

தோழர் ஆசான் லெனின் அவர்களின் 154வதும் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் விதமாக அண்ணா கலையரங்கம் தரைக்கடை கிளையில் இன்று காலை 9 மணி அளவில் கிளைச் செயலாளர் தோழியர் எஸ். நிர்மலா அவர்கள் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் பின் தலைமை தோழர் எஸ்.சேட்டு அவர்கள் அவரைத் தொடர்ந்து சிறப்புரை பொதுச் செயலாளர் தோழர் பி. சரவணன் மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் ஆர். செல்வம் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.திருமலை நன்றியுரை கிளை பொருளாளர் தோழர் குமார். மற்றும் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் தொடர்புக்கு :புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வேலூர் மாவட்டம் 97 91 707062

திருச்சி

திருச்சியில் மாமேதை தோழர்‌ லெனின் பிறந்தநாள் நிகழ்வு !

ஏப்ரல் 22 கம்யூனிச ஆசான் மாமேதை தோழர் லெனின் அவர்களின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நேற்று (22.04.2024) காலை தில்லைநகர் காந்திபுரம், ரயில் நிலையம், N.S.B ரோடு மற்றும் B.H.E.L ஆகிய இடங்களில் ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு சார்பாக தோழர் லெனின் அவர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி புகழ்வணக்கம் செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்ணனி , திருச்சி B.H.E.L மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், மக்கள் அதிகாரத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துக் கொண்டு மாமேதை லெனினின் உருவ படத்திற்கு மலர் தூவி நிகழ்வை சிறப்பிக்க செய்தனர்.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

திருச்சி மாவட்டம்.

தொடர்புக்கு: 80986 04347

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here