மெரிக்காவில் செயல்பட்டு வரும் 100க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து, “அமெரிக்காவில் இந்துத்துவம் அல்லது இந்து தேசியவாதம் என்றுஅழைக்கப்படும் இந்து மேலாதிக்கத்தின் ஆபத்தான எழுச்சி குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்துத்துவ வலதுசாரி வாதமானது, “இப்போது அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் பல்வேறு அம்சங்களுடன் ஆழமான வகையில் பொருந்தி உள்ளது” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கீழே கையொப்பமிடப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களாகிய நாங்கள், அமெரிக்காவில் இந்துத்வா அல்லது இந்து தேசியவாதம் என்று அழைக்கப்படும் இந்து மேலாதிக்கத்தின் ஆபத்தான எழுச்சி குறித்து எங்களின் கடுமையான கவலையை வெளிப்படுத்துகிறோம். இந்த அரசியல் சித்தாந்தம், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாசிசம், பாசிசம் மற்றும் பிற இன ஒடுக்குமுறை சித்தாந்தங்களின் நேரடி உத்வேகத்துடன் வெளிப்படுத்தப்பட்டது, இப்போது அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் பல்வேறு அம்சங்களுடன் ஆழமான கூட்டணியில் தன்னைக் காண்கிறது. இந்தியாவிலும், இங்கு, அமெரிக்காவிலும் ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் நீதி ஆகிய நமது முக்கிய மதிப்புகளுக்கு வளர்ந்து வரும் இந்து மேலாதிக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

அனைத்து வகையான மேலாதிக்க அரசியலையும் எதிர்த்திடுவதற்காக
மதம் கடந்த, பல இனங்களைக் கொண்ட, சாதி எதிர்ப்பு அமைப்புகள் செயல்பாட்டாளர்களை உள்ளடக்கிய savera –வுடன், உண்மையான இந்திய-அமெரிக்க பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஐக்கிய முன்னணியான Savera -வுடன் நாங்கள் ஒன்றுபட்டு உறுதியாக நிற்கிறோம்.

இந்து மேலாதிக்க அமைப்புகள் பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை என்ற முகத்துடன் மறைந்துகொண்டு இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவை சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையின் பிணைப்பை உடைத்து, சிவில் உரிமைக் குழுக்களைத் தாக்குவது உட்பட, பல்வேறு நிறகொண்ட சமூகங்களுக்குள் தீவிர வலதுசாரி அரசியலை சட்டப்பூர்வமாக்குவதற்கு உழைத்துள்ளன.

இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் சாதி வெறிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றம்! சட்டத்தை எதிர்க்கும் இந்து மத வெறியர்கள்!!

தீவிர வலதுசாரிகளுடன் ஒத்துழைத்தல் ; முஸ்லிம்களுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புதல் ; ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கான உறுதியான நடவடிக்கை மற்றும் சாதிப் பாதுகாப்புகளை எதிர்ப்பது; மற்றும் பேச்சு சுதந்திரம் மற்றும் கல்வி சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வேலை போன்றவற்றின் மூலமாக தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயன்றுள்ளன

இந்து மேலாதிக்கத்தின் ஆழமான முஸ்லீம்-விரோத திட்டம் ஒரு ஆதிக்க சாதித் திட்டமாகத் தொடங்கியதுடன் தொடர்ந்து செயல்படுகிறது. மேலும் அதன் வரலாறு முஸ்லீம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் , சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகளால் சிதறடிக்கப்பட்டுள்ளது . இந்து மேலாதிக்க இயக்கம் இந்திய, தெற்காசிய மற்றும் முஸ்லீம் அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், கூட்டு சுதந்திரத்திற்கான நமது மதிப்புகளை ஆழமாக எதிர்க்கிறது. மேலாதிக்க அரசியலை துணிச்சலுடன் எதிர்த்து, உண்மையான, பன்முகப்பட்ட ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுடன் ஒற்றுமையாக நிற்பது நமது பொறுப்பு. இந்து மேலாதிக்கம் நம் அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது, அதை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எனவே, நாங்கள் ஒன்றாக கீழ்க்கண்டவாறு உறுதியளிக்கிறோம்.

  • இந்து மேலாதிக்கம் உட்பட அனைத்து வகையான வெறுப்பு மற்றும் மேலாதிக்க அரசியலையும் நிராகரிக்க; இந்து மேலாதிக்க இயக்கத்தின் சித்தாந்தம் மற்றும் உலகளாவிய பரவல் மற்றும் பரந்துள்ள தீவிர வலதுசாரிகளுடன் அதன் தொடர்புகளைப் பற்றி நாமே கற்றுக்கொள்வது;
  • இசுலாமிய வெறுப்பு மற்றும் சாதியை ஒழிப்பதற்கான உலகளாவிய போராட்டத்துடன் உறுதியான ஒற்றுமையுடன் நிற்பதுடன், குறிப்பாக முஸ்லீம்-வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் ,அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டைத் தடுப்பதற்குமான இயக்கங்களை ஆதரிப்பது;
  • மோடி அரசுடனான அமெரிக்க அரசு உறவுகளில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மையப் பொருளாக வைக்க வேண்டும் என அமெரிக்க அரசிடம் வலியுறுத்துவது. மற்றும்
  • இந்திய அமெரிக்க அடையாளத்தின் மாறுபட்ட,(அனைத்து அம்சங்களையும்) உள்ளடக்கிய மற்றும் விடுதலைப் பார்வையை வெளிப்படுத்தும் அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் நிற்பது.

இந்தக் கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டவர்களின் பட்டியல்லை அறிந்து கொள்ள இந்தக் கட்டுரையின் மூலத்தை thewire இணையதளத்தில் பார்க்கவும்.

மொழிபெயர்ப்பு: ஆதிரா
மூலம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here