ஆர்.எஸ்.எஸ்-ம் அதானியும் ஒன்னு!
அறியாதவன் வாயில மண்ணு!
கொலைகார ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்!
கொள்ளைக்கார அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் வருகிற மே 1ஆம் தேதி சென்னையில் உள்ள அதானியின் அலுவலகத்தை மக்கள் அதிகாரம் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் கலந்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் – அதானி கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்போம்.

இதனை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும்  விதமாக மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரங்கள், சுவரெழுத்துக்கள் செய்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் சுவரெழுத்துக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:

ஆனால் கோவையில் மட்டும் காவி கும்பல் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவரெழுத்தை ஓவியர்கள் துணைக் கொண்டு அழித்துள்ளது காக்கி கும்பல். ஆர்.எஸ்.எஸ் அதானியை எதிர்த்து மக்கள் பணத்தை கொண்டு எழுதுவதை அழிக்கும் அதிகாரம் கோவை காக்கி கும்பலுக்கு யார் கொடுத்தது? சங்கிகள் கட்டளைக்கு கீழ் படிந்து நடக்கிறதா கோவை காவல்துறை?

000

காவிகளுக்கு துணையாக காக்கி!

RSS – அதானியை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் எழுதிய சுவரெழுத்தை கோவையில் மட்டும் அழித்த போலிசு!

சங்கிகள் சொன்ன உடனே கருத்துரிமையை பறிக்கும் காவல்துறை!

உண்மையில் கோவை இருப்பது தமிழ்நாடா – தனி நாடா?

மக்கள் அதிகாரம் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள்…

1 COMMENT

  1. இப்படியே உளரீட்டு திரி….
    (அர மெண்டல் முழு மெண்டல் ஆவதற்கான நல்ல அறிகுறி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here