பாரதிய ஜனதா கட்சியின் உள்துறை அமைச்சரான அமித்ஷா, ஏப்ரல் 9ஆம் தேதி அன்று  அஸ்ஸாம் மாநிலத்தின் லக்கிம்பூர்  நகரில்,  பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது
“சீனாவால் ஒரு இன்ச் இந்திய நிலத்தை கூட  ஆக்கிரமிக்க  முடியாத அளவிற்கு  ஒரு மிகச்சிறந்த ஆட்சியை நரேந்திர மோடி அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று அடித்து விட்டிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான பொய்.

அமித்ஷா இப்படி பொய் சொல்வதை பார்த்தவுடன் கடந்த பிப்ரவரி மாதத்தில் பாட்காஸ்ட் – ல் ஒரு ஊடகவியலாளருக்கு கொடுத்த பேட்டியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், “பாருங்கள், அவர்கள் (சீனா) பெரிய பொருளாதாரம். நான் என்ன செய்ய போகிறேன்?  ஒரு சிறிய பொருளாதாரமாக, நான் பெரிய பொருளாதாரத்துடன் மட்டும்தான் சண்டையிடப் போகிறேன்? இது பிற்போக்குத்தனமானது அல்ல. மாறாக அறிவுப்பூர்வமானது”என்று  கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது.

இதன் பொருள் என்ன? இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவுடன் இந்தியாவால் ராணுவ ரீதியாக மோத முடியாது. அது முட்டாள்தனமானது எனவே  நான்(ஜெய்சங்கர்) பொருளாதார ரீதியாக மட்டுமே  சீனாவுடன் மோத போகிறேன் என்கிறார்.

இப்படி,  இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறிக் கொண்டிருக்கும் பொழுது, அமித்ஷாவோ சீனாவுடன்  பிரதமர் மோடி ராணுவத்தைக் கொண்டு மோத தயாராக இருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார்.

ஜூன் 2020இல் சீன ராணுவம் லடாக்கில் நிலங்களை கைப்பற்றியது மற்றும் சீனாவுடனான சண்டையில் 20 இந்திய ராணுவத்தினர் இறந்தது குறித்து டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் பொழுது,   சீனாவின் பெயரை குறிப்பிடாமல்  “அவர்கள் நமது பகுதிக்குள் ஊடுருவவோ நமது நிலைகளை ஆக்கிரமித்துக் கொள்ளவோ இல்லை. நமது இந்திய   வீரர்கள் 20 பேர் தியாகிகள் ஆனார்கள். ஆனால், பாரத மாதாவின் மீது கை வைக்க துணிந்தவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது” என்று மோடி (வழக்கம்போல பொய்தான்) கூறியிருந்தார்.

ஜூன் 10ஆம் தேதி அன்று நடந்த கூட்டத்தில் “இன்றைக்கு  (எந்த நாடும்) யார் ஒருவரும் நமது நிலத்தின் மீது ஒரு கண்ணைக் கூட வைக்க முடியாத அளவிற்கு நாம் திறன் பெற்று இருக்கிறோம். ஒரே நேரத்தில் பல துறைகளில் நுழையும் அளவிற்கு இந்திய ராணுவம் பலத்தைப் பெற்று இருக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மோடி உத்தரவாதம் அளித்திருந்தார்.

மோடி இப்படி சீனா காரர்கள் நமது எல்லைக்குள் நுழையவோ நமது இடங்களை பிடிக்கவோ இல்லை என்று பொய் உரைத்த சில நாட்களுக்குள்
மூலயுத்தி விவகார நிபுணர் (strategic affairs expert) கலோனல் (Colonel) அஜய் சுக்லா “சீன மக்கள் விடுதலை ராணுவம் இந்திய நிலப்பகுதியில் இருந்து வெளியேற மறுத்து விட்டது…. ஏனெனில் சீன ராணுவம் ஏற்கனவே 2 லிருந்து 4 கிலோமீட்டர் வரையில் இந்தியா உரிமை கோரும் பகுதிக்குள் ஊடுருவி விட்டது” என்று உண்மையை  கூறியதால் மோடியின் மூக்கு உடைந்து விட்டது.

56 இன்ச் மோடியின் மூக்கை உடைத்த, அவரது வீரத்தை கேள்விக்கு உள்ளாக்கிய முன்னாள் இந்திய ராணுவ உயர் அதிகாரியான சுக்லாவின் அந்தப் பேச்சை குறித்து பாஜக அரசு வாய் திறக்கவே இல்லை.

2020-லிருந்து தற்போது வரை கமாண்டர்கள் மட்டத்திலான 21 சுற்று பேச்சு வார்த்தைகள் சீனாவுடன் நடத்தப்பட்டு இருந்தாலும் 2020க்கு முன்பு இருந்த கட்டுப்பாட்டு கோட்டு ( Line of Actual Control – LAC))நிலையை மீண்டும் கொண்டுவர முடியவில்லை.

ஜனவரி 2023 இல் நடந்த வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பின் போது,
இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே அவர்கள்,  2020 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்த கட்டுப்பாட்டு கோட்டு நிலையை மீண்டும் அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு அந்த பேச்சு வார்த்தைகள் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் சீனர்கள் பிடிக்கவில்லை என்று சொன்னால் 21 சுற்று பேச்சு வார்த்தையில் சீனர்களுடன் எதைப்பற்றி மோடி அரசு பேசிக் கொண்டிருந்தது? எதைப்  புடுங்கிக் கொண்டிருந்தது?

தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்,  டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்களில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் இந்திய நிலங்கள் சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு செய்திகள் ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ளன.

இந்தியர்கள் தமது கால்நடைகளை பாரம்பரியமாக மேய்த்துக் கொண்டிருந்த மேய்ச்சல் நிலங்களில் மேய்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும், வழக்கமாக  ரோந்து சென்று கொண்டிருந்த  வழித்தடங்களில் இந்திய ராணுவத்தினர் காவலுக்கு செல்ல முடியாதது குறித்தும்,  இந்திய மக்கள் பாரம்பரியமாக தமது கால்நடைகளை மேய்த்துக்  கொண்டிருந்த மேய்ச்சல் நிலங்களில் தற்போது மேய்ச்சலுக்கு  சென்றால் சீன ராணுவத்தினர் கல்லால் அடித்து இந்தியர்களை விரட்டுவது குறித்தும்
அந்தப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இதையும் படியுங்கள்: சீனாவின் ஆக்கிரமிப்பை மறைப்பதற்காக கச்சத்தீவை பற்றி கூவிக் கொண்டிருக்கும் பாஜக !

இப்படிப்பட்ட செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது குறித்து மோடி அரசு அலட்டிக் கொள்வதே இல்லை. ஏன் பொய் செய்தியை வெளியிடுகிறீர்கள் என்று வழக்கும் போடுவதில்லை, நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஏனெனில், சீன ராணுவத்தினரின் ஆக்கிரமிப்புகள் குறித்தான செய்திகள் பொய்யானவை அல்ல. அவை உண்மையானவை என்பதால் தான் மோடி அரசு நவ துவாரங்களையும் இறுக்கி மூடிக் கொண்டிருக்கிது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இந்த விவரங்கள் வெளியில் வந்து பாசிச மோடி –  பிஜேபியின் தேசபக்த வேடம் மக்கள் மத்தியில் கிழிந்து, நாறி விடக்கூடாது என்பதற்காகத்தான் கச்சத்தீவு பற்றிய பிரச்சனையை தற்போது எழுப்பி விட முயன்று அதில் தோற்றும் போய் இருக்கிறார்கள்.

பாசிச மோடி, அமித்ஷா, பாஜக.,  ஆர் எஸ் எஸ் காரர்கள் தேசபக்தி மிக்கவர்கள் என்கிறார்கள் சங்கிகள்.

அயோக்கியர்களின் கடைசி புகலிடம்தான் தேசபக்தி.

குமரன்
செய்தி ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here