`பொன்னியின் செல்வன்` கதையின் அடித்தளத்தினையே ஆட்டம் காண வைக்கும் வரலாற்றுண்மையினை வெளிக் கொண்டு வரும் இரு முகன்மையான கல்வெட்டுகள்:-
இக் கல்வெட்டிலுள்ள செய்தி என்னவென்றால் சுந்தர சோழனின் மனைவியான வானவன் மாதேவி இறந்த செய்தி கூறப்படுகின்றது. வானவன்மாதேவி இறந்தபோது தலைமகன் (ஆதித்த கரிகாலன்) இறந்து விட்டதாகவும் , முலை மகனாக (பால்குடி மறவாத மகனான இராசராச சோழன்) அருள்மொழி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதாவது ஆதித்த கரிகாலன் இறந்த போது இராசராசன் ஒரு சிறு குழந்தை.
கதையிலோ ஆதித்த கரிகாலன் உயிரோடு இருக்கும் போதே அரு(ள்)மொழி இலங்கையில் சண்டை இடும் இளைஞனாகக் காட்டப்படுவான். இது ஏன்? {இராசராசன் சிறு வயதில் இலங்கைக்குச் சென்று சண்டையிட்டதாக வேறு சான்றுகள் கூட எங்குமில்லை}.இதற்கான விடையினைத் தெரிந்து கொள்ள முன் மற்றொரு கல்வெட்டினைப் பார்ப்போம்.
இக் கல்வெட்டானது ஆதித்தகரிகாலனைக் கொன்றதற்காக பார்ப்பனர்களான (பிராமணர்களான) சோமன், ரவிதாசன், பிரமாதிராயன் ஆகியோரதும் அவர்களது உறவினர்களதும் (எல்லோருமே பார்ப்பனச்சேரியினைச் சேர்ந்தவர்கள்) சொத்துக்கள் பறிக்கப்பட்டு விற்கப்பட்ட செய்தி கூறப்படுகின்றது. இதிலிருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றது பார்ப்பனர்களே என்பது தெளிவாகின்றது.
இக் கொலைப் பழியிலிருந்து பார்ப்பனர்களைக் காப்பாற்ற கல்கி புனைந்த கற்பனை மாந்தர்தான் நந்தினி. வரலாற்றில் அப்படி ஒரு மனிதர் வாழ்ந்ததில்லை. கதையின் சுவைக்காக `நந்தினி` என்ற வேடம் படைக்கப்பட்டதாகச் சொன்னாலும் , அதன் உள்நோக்கம் வேறு. நந்தினியினை மட்டுமல்லாது இராசராசன், வந்தியத்தேவன் ஆகியோர் மீதும் கொலைப் பழி /ஐயம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே ஆதித்தகரிகாலன் உயிரோடு இருக்கும் போதே இராசராசன் ஈழத்தில் போர் செய்ததான வரலாற்றுப் புரட்டினைக் கல்கி படைத்திருப்பார். (ஆதித்தகரிகாலன் இறக்கும்போது இராசராசன் குழந்தை எனின் கொலைக்கான ஐயம் இராசராசன் மீது ஏற்படாது அல்லவா?)
திரைப்படத்துக்கு வருவோம் . படத்தில் ரவிதாசனும் அவனது உடன்பிறப்புகளும் காட்டப்படுவார்கள். அவர்களின் உடம்பில் பூநூல் இருக்காது. அடையாளத்தினை மறைப்பதற்காகச் செய்வதாயின், பார்ப்பனச்சேரியில் வாழ்ந்து கொண்டு ஏன் பூநூலை மட்டும் மறைப்பான்? சோழர் தலைமுறையினையே கருவறுக்கச் சூளுரை ஏற்கும் காட்சியிலாவது பூநூல் இருந்திருக்குமே! சோழர் ஆட்சியில் இவர்கள் முகன்மையான பொறுப்புகளில் இருந்த பார்ப்பனர்களாயிற்றே! அவ்வாறான காட்சி எதுவுமே படத்தில் இல்லையே! இது எல்லாம் கல்கி முதல் மணிரத்தினம் வரைச் செய்த திருகு தாளங்கள். செயமோகனும் தன் பங்குக்கு `என்னைக் கொல்வதாயின் அது என் தம்பி அருண்மொழியால் மட்டுமே முடியும்` என ஆதித்த கரிகாலன் வாயாலே பேசுவதற்கு ஒரு வசனம் எழுதியுள்ளார். மிகுதி பொ.செ 2 ம் பகுதி வரும்போதுதான் தெரியும்.
பாண்டியர்களுக்காக பார்ப்பனர் ஆதித்தகரிகாலனைக் கொன்றார்களா? எனின் இல்லை தமது நலன்களுக்காகவே கொன்றிருப்பர். இதற்கான இரு காரணங்கள் வருமாறு.
1) பார்ப்பனருக்கும் பாண்டியருக்குமான பகை சோழருடனான பகையினை விடக் கடுமையானது. அது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கும் முற்பட்டது.
2) பார்ப்பனருக்கு (பிற சாதிப் பற்றாளருக்கும் பொருந்தும்) நாட்டுப் பற்று என்பது எப்போதுமே முகன்மை வகித்தது இல்லை, சாதிப்பற்றே முகன்மையானது.
முடிவாக: கல்கி என்ன சொன்னாலும், மணிரத்தினம் எதனைக் காட்டினாலும், ஆதித்தகரிகாலனைக் கொன்றது பார்ப்பனியமே. பார்ப்பனிய ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட ஆதித்த கரிகாலனுக்கு வீரவணக்கம்.
- குகநாதன்.வி.இ
முகநூல் பதிவு