நான் நீதிபதியாக இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளேன் அவருடன் பணியாற்றும் சகாக்களாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளேன். இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் போராடியும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. என்ன ஆனது என்று யாரும் கேட்கவில்லை. ஏன் கவலையாக இருக்கிறேன் என்று கண்டு கொள்ளவில்லை. நான் ஒரு குப்பையை போல நடத்தப்பட்டுள்ளேன். தேவையற்ற ஒரு புழுவைப் போல உணர்கிறேன். இதுவரை முன்வைக்கப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கைகள் எல்லாம் போலியாகவே இருந்துள்ளன.” என்று துயரை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இல்லாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிமன்றங்களை அணுகினால் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சில பத்து ஆண்டுகள் ஆகலாம் அல்லது நீதியே கிடைக்காமல் கூட போகலாம். தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட எத்தனையோ வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தியாவில் நீதிபதிகள் மீதும் நீதிமன்றங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் பெரும்பாலும் பார்ப்பனர்களும் உயர்சாதிகாரர்களுமே அமர்ந்துள்ளார்கள். நீதிபதிகளை கடவுள் போல் பாவிக்கும் அடிமை பண்பாடு இன்றும் நீடித்துக் கொண்டே இருக்கிறது அதனால் தான் என்னவோ நீதிபதிகளும் தங்களை கடவுள் என நினைத்துக் கொள்கிறார்கள்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அப்பட்டமாக இந்துத்துவ சங்பரிவார் கும்பலுக்கு ஆதரவாக அவர்களின் இந்துத்துவ நிகழ்ச்சிகளுக்கு அடித்தளம் போடும் விதமாக ஒரு தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு மக்கள் மத்தியிலும், பல்வேறு அமைப்புகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு இருந்தாலும் கூட அதை சிறிதும் கண்டுகொள்ளாத நீதிபதிகள் இந்துத்துவ கும்பலுக்கு சாதகமாகவே தீர்ப்புகளை வழங்கினார்கள்.

அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ பாசிச பாஜக ரத்து செய்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. குஜராத் கலவரம் உட்பட பல வழக்குகளில் பாசிஸ்டுகளுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்காக நீதிபதிகள் பெற்ற பரிசு, ராஜ்யசபா எம்பி பதவியோ அல்லது கவர்னர் பதவியாகவோ இருக்கக்கூடும்.

உச்ச நீதிமன்றம் இப்படி அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக செயல்படும் பொழுதே மற்றொருபுறம் ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த நீதிபதிகளையும் கொண்டுள்ளது. அதன் ஒரு வெளிப்பாடு தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் பெண் நீதிபதியின் பாலியல் சீண்டல் புகார் குறித்த குமுறல்.

உத்திரபிரதேசம் என்றாலே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு ‘புகழ்பெற்ற’ ஒரு மாநிலம். இந்துத்துவ தீவிரவாதி யோகி ஆதித்யநாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம். கடந்த காலங்களில் இங்கு உன்னாவ் படுகொலை ஆகட்டும் அல்லது ஹத்ராஸ் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு செய்யப்பட்ட பிரச்சினையாகட்டும், இவையனைத்தும் பாஜகவுக்கே உரித்தான ‘சாதனை’கள். பாலியல் வன்கொடுமை கொலைக்காக உபி பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் சிறைக்கும் சென்றதும் இதில் அடங்கும்.

இதுவரை வறியவர்கள் மீது பாலியல் தாக்குதல் தொடுத்த கும்பல் இன்று பெண் நீதிபதியையும் விட்டுவைக்கவில்லை என்பதே  மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படிக்க: 

♦ ஹத்ராஸ் சிறுமியை மீண்டும் கொன்ற நீதித்துறை

♦ பாலியல் குற்றவாளிகளை மக்கள் மத்தியில் தண்டிக்கவேண்டும்!


உத்திரபிரதேச பெண் நீதிபதியின் தற்கொலை செய்ய அனுமதிக் கேட்டு எழுதிய கடிதத்தால் தான் இது வெளியுலகிற்கு வந்துள்ளது. இதனை GODi மீடியாக்கள் விவாத பொருளாக்க விரும்புவதில்லை. மாறாக அந்த பெண் நீதிபதியின் மீது ஏதாவது அபாண்ட பழி சுமத்த கதை தேடிக்கொண்டிருப்பார்கள்.

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகள் கடந்த காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கொடிப்பிடித்த நிகழ்வும் காஷ்மீரின் கத்துவா சிறுமி பாலியல் வன்புணர்வு படுகொலையில் நிகழ்ந்துள்ளது.

நீதிபதிகள் யோக்கிய சிகாமணிகளோ அல்லது அப்பழுக்கற்றவர்களோ கிடையாது. ஏற்கனவே பல நீதிபகள் மீது பாலியல் வழக்குகள் வந்துள்ளது. இதில் ஒரு ஆகக்கேடான விசயமும் நீதிமன்றத்தில் வந்துள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் அவர் மீது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அந்த பெண் கூறியது பொய் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் வழக்கு முடிந்ததும் அவரை பணியில் இருந்தும் துரத்தினார்கள். இவ்வளவு தான் நீதிமன்றங்களின் யோக்கியதை.

இன்று உபி பெண் நீதிபதி எழுப்பியிருக்கும் புகாரும் இன்னும் சில நாட்கள் பரப்பரப்பாயிருக்கும் அதன் பின்னர் யாரும் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் ஆளும் பார்ப்பன பாசிஸ்டுகளும் அதன் நிறுவனங்களும் முழுக்க ஆர்.எஸ்.எஸ் மயமாகியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி பக்கம் பாசிச கும்பலோ அல்லது நீதிபதிகளோ நிற்க போவதில்லை. மாறாக கேடுகெட்ட பாலியல் குற்றவாளிகள் பக்கமே இவர்கள் நிற்க போகிறார்கள்.

இவர்களிடமா நாம் நீதி கேட்க முடியும்?

 

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here