பாசிச BJP யை தோற்கடிப்போம்! INDIA வை ஆதரிப்போம்! என்கின்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் தலைமையில் திருச்சியில் ஜனவரி 7 ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி மற்றும் மாநாடு நடத்த உள்ளோம்.

இம்மாநாட்டை விளக்கி தமிழகம் முழுவதும் பகுதி பிரச்சாரங்கள், சுவரெழுத்து விளம்பரங்கள், தெருமுனைக்கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

இந்நிலையில் BJP யின் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி என்கின்ற சத்தியநாதன் என்பவர் எமது அமைப்பின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் தோழர் வைகை சரவணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாசிச பிஜேபியை தோற்கடிப்போம் என எழுதுவியா அரை மணி நேரத்திற்குள் அந்த விளம்பரத்தை அழிக்கவில்லை என்றால் உன் கழுத்தை அறுத்து விடுவேன் என்றும் ஊரிலேயே இல்லாமல் செய்து விடுவேன் என்றும் உச்ச பச்ச தகாத வார்த்தைகளால் வன்மத்தைக் காட்டி, உயிர் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நான் பேசுவதை பதிவு செய்து கொண்டு காவல் நிலையத்தில் சென்று தஞ்சம் அடைந்து கொள் எனவும் பகிரங்கமாக கொலை மிரட்டல் செய்துள்ளான்.

இவனது கூட்டாளியான மேலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் கருப்பையா என்பவன் நீங்கள் எழுதிய சுவர் விளம்பரத்தால் அண்ணன் கடும் கோபத்தில் இருக்கிறார் நேற்று இரவு உன்னை தூக்கி தோட்டத்தில் முடிக்கலாம் என பேசினார்கள் பிரச்சனை பெரிதாகிவிடும் தேர்தலுக்குள் கொலை விழுந்து விடும் எனவே உடனடியாக அந்த சுவர் எழுத்தை அழித்துவிடு என்று இரு பாஜக சங்கிகளும் பேசிய கொலை வெறி பேச்சு நாடு முழுக்க தீயாய் பரவியது.

இந்த பிஜேபியின் ரவுடிகளை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும் என்று புகார் கொடுத்தும் சிவகங்கை மாவட்ட காவல்துறை இந்த இருவர் மீதும் சாதாரண வழக்கை பதிவு செய்து தப்பிக்க வைத்துள்ளது என்பதை கண்டிக்கின்ற வகையிலும் உடனடியாக இருவர் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு….

தலைமை:


தோழர்.கார்க்கி, மாநகர செயலாளர், மக்கள் அதிகாரம், திருச்சி.

முன்னிலை:


தோழர்.புல்லட் லாரன்ஸ், மேற்கு மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருச்சி.

தோழர்.தாஜூதீன், செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி.

தோழர்.செழியன், மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம், திருச்சி.

கண்டன உரைகள்:


தோழர்.விடுதலை, காந்திபுரம் பகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருச்சி.

தோழர்.ரவிக்குமார், தலைவர், சமூக நீதிப் பேரவை, திருச்சி.

தோழர்.சம்சுதீன், ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, திருச்சி.

தோழர்.மாணிக் முருகேசன், மாவட்ட செயலாளர், ஆதித் தமிழர் பேரவை, திருச்சி.

தோழர்.ராஜா, சிறப்புத்தலைவர், சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி.

தோழர்.லதா, பொறுப்பாளர், மையக் கலைக்குழு, ம.க.இ.க, தமிழ்நாடு.

தோழர்.மணலிதாஸ், மாவட்ட இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு, திருச்சி.

தோழர்.ஜீவா, மாவட்ட செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி.

தோழர்.முகமது ராஜா, மாவட்ட தலைவ,ர் மனிதநேய மக்கள் கட்சி, திருச்சி.

சிறப்புரை:

தோழர்.காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.

ஆர்ப்பாட்டத்தின் இடை இடையே பாசிச பா.ஜ.க வை கண்டித்து தோழர்கள் கண்டன முழக்க மிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here