ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு கொலையாளிகள் கைது – நிரந்தரமாக ஸ்டெர்லைடை மூட சிறப்பு சட்டம்!

எப்போது செய்யும் தமிழக அரசு?

இந்த வாரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இணைந்து 23-11-22 (புதன்)அன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களையும், 24-11-22 (வியாழன்) அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களையும் சந்தித்தோம்.

அவர்கள் கூறியதிலிருந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது இதுவரை எந்த ஒரு துறை ரீதியான மற்றும் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது. மேலும் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் 4 போலீசாரும், மூன்று தாசில்தார்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர் என்று ஊடகங்களில் வந்த செய்தியும் பொய்யானது என்பதுதான். அப்படி ஒருவர் கூட இது வரை சஸ்பென்ட் செய்யப்படவில்லை.

எனவே மக்களைக் கொன்ற போலீசார்-துணை போன அதிகாரிகளை பணி நீக்கம் செய்து, கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்!

சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும்!

என மேற்படி மூன்று அமைப்புகளும் இணைந்து “ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு” என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.

இதன் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக வருகின்ற 12-12-22 (திங்கள் கிழமை) மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட கட்சிகள் – அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்க ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

எனவே அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9940971599, 9751119005, 9789497542, 9965345695, 9994242519, 9894574817, 8870457518, 9003615889, 9942207921, 7548856166.

1 COMMENT

  1. மீண்டும் ஒருங்கிணைந்த போராட்டம் தான் வெற்றி பெற வைக்கும்.

    “ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டடைப்பு” – என்ற வார்த்தையில் எழுத்துபிழை. கூட்டமைப்பு என திருத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here