உபநயனம் 

வேதம் படிப்பதற்கு முன் உபநயன சடங்கு நடைபெற வேண்டும் என்பது தர்ம சாஸ்திர சட்டம். இந்த உபநயன சடங்கு, பிராமணர்களுக்கு 8 ஆவது வயதிலும், சத்திரியர்களுக்கு 11வது வயதிலும், வைசியர்களுக்கு 12வது வயதிலும் செய்யப்பட வேண்டும் என்று அனைத்து சாஸ்திரங்களும் கூறுகிறது.

யஜ்னவாக்கிய ஸ்ம்ரிதியின் 14ஆம் சுலோகத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது.

இதே கருத்து மனுஸ்ம்ரிதியின் 2ஆம் அத்தியாயம் 36வது சுலோகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது

https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc145623.html

சூத்திரர்களுக்கு உபநயனம் கிடையாது. ஆகவே, எந்த வயதில் செய்யப்பட வேண்டும் என்று எந்த ஸ்ம்ரிதியிலும் குறிப்பிடப்படவில்லை.

வர்ணம் பிறப்பால் கிடையாது, கர்மாவால் மட்டுமே என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய் என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். 8 வயதில் ஒரு சிறுவன் செய்த கர்மாவை வைத்தா இவன் பிராமணன் இவன் சத்திரியன் என்று தரம் பிரித்து அதற்கு ஏற்றாற்போல் உபநயனம் செய்ய முடியும்?

இதையே, காஞ்சி சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் நூலில், பிறப்பை வைத்தே ஜாதி/வர்ணம் என்று அழுத்தம் திருத்தமாக விவரிக்கிறார்.

மேலே காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் கருத்துக்கள், காஞ்சி சங்கர மடத்தின் வலைதளத்தில் இருக்கிறது. லிங்க் http://kamakoti.org/tamil/2dk68.htm

மேலும் இன்ன ஜாதியில் பிறந்தவனுக்கு இன்ன குணம்தான் இருக்கும். ஆகவே, அவரவர் பிறந்த ஜாதிக்கு உரிய தொழிலையே செய்ய வேண்டும் என்று வாதிடுகிறார். அதையே பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணனும் கூறுவதாக மேற்கோள் காட்டுகிறார். Link http://kamakoti.org/tamil/2dk69.htm

ஒருவன் பிறக்கும் போதே பிராமணனாகவோ சூத்திரனாகவோதான் பிறக்கிறான் என்பதை பூரி சங்கராச்சாரியார் எப்படி விளக்குகிறார் கேளுங்கள். இந்த காணொளி பூரி சங்கர மடத்தின் யூட்யூப் சேனலிலும் இருக்கிறது. அவர்களே கொடுத்த சப்டைட்டில்கள்தான் இவை.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு: ஜாதி என்ற சொல்லே ஜன்ம(பிறப்பு) என்ற சொல்லில் இருந்து வந்ததுதான். சென்ற பிறவியில் செய்த கருமங்களின் பலனாகவே இந்த பிறவியில் குறிப்பிட்ட ஜாதியில் பிறக்கிறான். இந்த பிறவியில் தான் பிறந்த ஜாதிக்கு விதிக்கப்பட்ட கருமங்களை செய்பவனுக்கு அடுத்த ஜென்மத்தில் அதன் பலன் கிடைக்கும். ஒரு பசு பிறக்கும் போதே பசுதான். அது பசு மாதிரி நடந்து கொள்வதை வைத்தா அதை பசு என்கிறோம்?

அதாவது, ஒரு சூத்திரன் பிறக்கும் போதே சூத்திரன்தான். எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த ஜாதிக்கு உரிய குணமே அவனுக்கு இருக்கும். அந்த குணங்களுக்கு ஏற்பவே அவர்களுக்கான கர்மங்கள் விதிக்கப்படுகிறது. இதுதான் பகவத் கீதையில் சொல்லப்படும் “சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ”.

வேதம் படிப்பது, யாகம் செய்வது போன்றவை பிராமணருக்கு விதிக்கப்பட்ட தர்மம். சூத்திரனாக பிறந்தவனுக்கு அடுத்தவருக்கு அடிபணிந்து நடக்கும் குணமே இருக்கும் என்பதால் பிராமணர்களுக்கு பணிவிடை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம். இதுதான் வர்ணாஸ்ரம தர்மம்! பகவத் கீதையின் 18ஆம் அத்தியாயத்தின் 44ஆம் சுலோகத்தில் இது சொல்லப்படுகிறது,

 

பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பு லிங்க் https://ebooks.tirumala.org/downloads/Adisankarar%20Aruliya%20Geethai%20Perurai.pdf

வர்ணாஸ்ரம தத்துவத்தை ஏற்றுக்கொள்கிற சிலர் ஜாதியை ஏற்றுக்கொள்வதில்லையே என்ற கேள்விக்கு “ஜாதியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு பகவத் கீதையின் முதல் அத்தியாயம் கூட தெரியவில்லை” என்று பூரி சங்கராச்சார்யா நக்கலாக அளிக்கும் பதிலை கேளுங்கள். பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தின் 43ஆம் சுலோகத்தில், தனது ஜாதிக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை செய்ய வேண்டும் என்று இருப்பதை மேற்கோள் காட்டுகிறார்.

மேலே உள்ள காணொளியில் அவர் கூறும் பகவத் கீதை சுலோகம் இதுதான்.

பார்ப்பனீயத்தின் பார்வையில் இந்து மதம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள, இந்த காணொளியை பாருங்கள். ஒரு இந்து பிறக்கும் போதே அவனுக்கென்று ஒரு தொழிலோடு பிறக்கிறான் என்று இவர் கூறுவதை கேட்டால், பார்ப்பனீயத்தின் பார்வையில் இந்து மதம் என்பது அவரவர் சாதிக்கு உரிய தொழிலை அவரவர் செய்ய வேண்டும் என்பது புலப்படும்.

வெவ்வேறு வர்ணங்களில் பிறந்தவர்கள் கலந்து விடக்கூடாது என்பதில் பார்ப்பனர்கள் மிக கவனமாக இருந்தார்கள். தங்கள் சந்ததியினர் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்கிற பேராசை. ஆகவே, பகவத் கீதையில், இதை ஒரு சுலோகமாகவே வைத்தார்கள். முதல் அத்தியாயத்தின் 41ஆம் சுலோகத்தில் அர்ஜுனன் இவ்வாறு கூறுகிறான்: “குலமகளிர் கெடுவதினால் வர்ணக்குழப்பம் உண்டாகிறது”. இந்த வர்ணக்குழப்பம் என்பதை சமஸ்கிருதத்தில் வர்ண சங்கரக என்பார்கள்.

இதை சுலோகத்தின் விளக்கத்தையும் அவர்கள் வாயாலேயே கேட்போம். அடுத்து வரும் காணொளியில், வர்ணக்கலப்பு ஏற்புடையது அல்ல என்றும், அது பகவத் கீதையின் சுலோகங்களில் சொல்லப்பட்டிருப்பதையும் கூறுகிறார். அதையும் மீறி அவன் வேறு சாதியில் திருமணம் செய்தால், அவன் செய்யும் பித்ரு காரியங்கள் முன்னோர்களை சென்று சேருவதில்லை என்றும் கூறுகிறார்.

இந்த காணொளியின் இறுதியில் “அவங்கவங்க குல தர்மத்தை அவங்கவங்க பாதுகாக்கணும். அதுதான் சனாதன இந்து தர்மம்” என்று முடிக்கிறார். இதிலிருந்தே, பார்ப்பனீயத்தின் பார்வையில் இந்து மதம் என்றால் என்ன என்பது விளங்கும்.

பகவத் கீதை பற்றிய சொற்பொழிவில் சுவாமி ஓம்காரனந்தா இதே கருத்துக்களை வலியுறுத்துகிறார். மேலும் தொழிலை பிறப்பிலிருந்தே பழக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

(தொடரும்..)
  • பூதம்

முந்தைய பதிவு லிங்க் 

இந்து மதம் – பார்ப்பனீயம் | பகுதி 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here