பத்திரிக்கை செய்தி:
மாரனேரி விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான கண்டன ஆர்பாட்டம்:
ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்ற பெயரில் 80 ஆண்டு காலமாக விவசாயம் செய்துவரும் மாரநேரி விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேற்ற நினைக்கும் தமிழக அரசு, பொதுப்பணித்துறையின் நடவடிக்கையை கண்டித்து 26.07.2021 காலை 10.30 மணி அளவில் தஞ்சை மாவட்டம் பூதலூர் நால்ரோட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காளியப்பன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர்,
மெய்யழகன், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசயிகள் ஒருங்கிணைப்புக் குழு
ராஜேந்திரன், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசயிகள் ஒருங்கிணைப்புக் குழு
சுகுமாறன், தமிழக மக்கள் முன்னேற்றம்,
மதியழகன், மாவட்ட செயலாளர் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி,
அருண்சோரி, மாவட்ட செயலாளர், தமிழ் தேச மக்கள் முன்னணி
துரை.மதிவாணன், ஒருங்கிணைப்பாளர்,இடது சாரிகள் பொதுமேடை
இராவணன், மக்கள் கலை இலக்கிய கழகம்
தேவா, மக்கள் அதிகாரம்
இந்திரா, நகர செயலாளார், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, தஞ்சை
ஆகிய அனைத்து கட்சியினர் ஆர்பாட்டத்தில் பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தனர்.
கோரிக்கை முழக்கங்கள்:

பறிக்காதே பறிக்காதே
மாரனேரி விவசாயிகளின்
வாழ்வாதரத்தை பறிக்காதே!

காட்டை மேட்டை கழனியாக்கி
ஊருக்கெல்லாம் சோறு போட்ட
மாரனேரி மக்களிடமிருந்து
விவசாயத்தை பறிக்காதே!

தமிழக அரசே, பொதுப்பணித்துறையே
மாரனேரி விவசாயிகளின்
80 ஆண்டு விவசாய உரிமையை
பிடுங்காதே பிடுங்காதே!

பதில் சொல் பதில் சொல்!
30 ஆண்டாய் ஏரியை
தூர்வாராமல் பாழாக்கியது
விவசாயியா? பொதுப்பணித்துறையா?
பதில் சொல் பதில் சொல்!

அதிக நீரை சேமிக்க
அய்யனார் ஏரியில்
தரிசாய் கிடக்கும் பகுதியினை
முறையாக பயன்படுத்து!

பட்டா இல்லாத விவசாயிகளுக்கு
உடனடியாக பட்டா வழங்கு!

ஒன்றிணைவோம் ஒன்றிணைவோம்!
விவசாயத்தை பாதுகாக்க
விவசாயிகள் ஒண்றிணைவோம்!

முறியடிப்போம் முறியடிப்போம்
விவசாயிகள் விரோத செயலை
ஒன்றுபட்ட போராட்டத்தால்
முறியடிப்போம் முறியடிப்போம்!

என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பெண்கள் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து கட்சிகள் அமைப்புகள் சார்ந்த முன்னணியாளர்கள், காட்சி ஊடகங்கள், செய்தி பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்:
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசயிகள் ஒருங்கிணைப்புக் குழு, மாரநேரி
தொடர்புக்கு: 9626210072

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here