சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM)

செய்தி அறிக்கை

புது தில்லி

12 பிப்ரவரி 2024


  • விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான, சர்வாதிகார அடக்கு முறைகளைக் கைவிடுங்கள்!
  • போராட்டக்காரர்களை நாட்டின் எதிரிகளாகக் கருதாதீர்கள்!
  • அனைத்து அரசியல் கட்சிகளும், பாஜக அரசின் மேலாதிக்க போக்கினை கண்டிக்க வேண்டும் என்று SKM வேண்டுகோள் விடுக்கிறது!
  • பிப்ரவரி 16, 2024 நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் கிராமிய பந்த் பற்றி முன்னதாக ஏன் பாஜக அரசு விவாதிக்கவில்லை?

பஞ்சாப் மற்றும் டெல்லி எல்லையில் உள்ள நெடுஞ்சாலைகளில் இரும்பு ஆணிகள், கம்பி சுருள்கள் மற்றும் கான்கிரீட் தடுப்புகளை அமைத்து விவசாயிகளின் ஜனநாயகப் போராட்டத்தை, மோடி அரசு கையாளும் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தனது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கம், டெல்லி, அரியானா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பொதுமக்களுக்கு எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் 144 தடையை விதித்து, போக்குவரத்தை வேறு வழிகளில் மாற்றியமைத்து, மக்களைப் பயமுறுத்தும்பொருட்டு, ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்குகிறது. போராட்டக்காரர்களைத் தேச விரோதிகள் போல் மோடி அரசு நடத்துகிறது.

மத்தியப் பிரதேசத்தில், விவசாய சங்கத் தலைவர் ராம் நாராயண் குராரியா, அவரது மனைவியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவருமான அஞ்சனா குராரியா உட்பட SKMஇன் ஐந்து மாநில தலைவர்கள் மற்றும் கிசான் சங்கர்ஷா சமிதி தலைவர் வழ.ஆராதனா பார்கவா, BKU(Tikait) தலைவர் அனில் யாதவ், NAPM தலைவர் ராஜ்குமார் சின்ஹா ஆகியோர் CRPC பிரிவு 151ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 13ஆம் தேதி டெல்லி சலோவுக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) அழைப்பு விடுக்கவில்லை என்றும், இந்த போராட்டத்துக்கும் SKMக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் SKM ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும், SKMஐ தவிர மற்ற அமைப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட உரிமை உள்ளது.

மேலும் இதுபோன்ற போராட்டங்களை அதிகப்படியான அடக்குமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கையாள்வது மற்றும் ஜனநாயக முறையில் எதிர்கொள்வது ஒன்றிய அரசின் கடமையாகும்.

2024 பிப்ரவரி 16 அன்று மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய கிராமப்புற பந்த் மற்றும் தொழில்துறை/அமைப்பு துறை சார்ந்த வேலைநிறுத்த அழைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணியில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டு மேடையுடன், ஒன்றிய அரசாங்கம் விவாதிக்க ஏன் தயாராக இல்லை என்பதை தெளிவுபடுத்துமாறு, பிரதமர் மோடியை SKM வலியுறுத்துகிறது.

இந்தியா முழுவதும் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், மக்களின் எதிர்ப்பை ஒடுக்க நினைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். குடிமக்கள் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோருக்கு SKM நினைவூட்டுகிறது. மோடி நிர்வாகத்தின் இந்த மேலாதிக்கத்தை கண்டிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் அனைத்து பிரிவு வெகுஜன அமைப்புகளுக்கும், வர்க்க அமைப்புகளுக்கும், SKM வேண்டுகோள் விடுக்கிறது.

பாஜக ஆட்சியின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறைகள், மக்களால் முறியடிக்கப்படும். விவசாயிகளும், தொழிலாளர்களும் அனைத்துப் பிரிவு மக்களின் ஆதரவுடன் 2024 பிப்ரவரி 16 தொழில்துறை வேலைநிறுத்தம் மற்றும் கிராமப்புற பந்த் ஆகியவற்றை மகத்தானதாக, துடிப்பானதாக மற்றும் வெற்றிகரமானதாக ஆக்குவார்கள்.

வழங்கியது:

மீடியா செல் | சம்யுக்தா கிசான் மோர்ச்சா தொடர்புக்கு: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு:

கே.பாலகிருஷ்ணன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here