ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி எங்கே?

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு முழுமையாக ஏற்காதது ஏன்?

நமக்காக உயிர் துறந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நீதி கோரி அரசிடம் மனு கொடுக்க அணி திரள்வோம்!
————————————————————————————
நாள்: 12-12-22 (திங்கள்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
————————————————————————————மைதியாக நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது பட்டப்பகலில் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை சுட்டும், இரண்டு பேரை அடித்தும் கொலை செய்த கொலைகார போலீசு17 பேர், துணை போன வருவாய்துறை அதிகாரிகள் 4 பேர் மீது குற்றவியல் & துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்து கடந்த மே மாதம் 18ம் தேதி தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்.

ஆணைய அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக கூறினார் மாண்புமிகு தமிழக முதல்வர். ஆனால் கடந்த 17-10 -22 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் அரசு மேற்கொள்ளும் என்று கூறி கிரிமினல் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டுள்ளது.

19-11-22 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது கிரிமினல் நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவிக்கவில்லை.


இதையும் படியுங்கள்: ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம்! எப்போது செய்யும் தமிழக அரசு?


தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மட்டுமின்றி, இப்போதும் கூட ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று உறுதியளித்து வருகிறார். ஆனால் மாண்புமிகு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், பல நூறு சாட்சிகளை விசாரித்து, சிசிடிவி, வீடியோ, போஸ்ட் மார்ட்டம் அறிக்கை, காயச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து, “காவல் துறையினர் சட்ட விரோதமாக சுட்டுக் கொன்றுள்ளனர்” என்று விரிவான அறிக்கை சமர்பித்த பின்பும் உரிய குற்ற விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக முதல்வர் தயங்குவது ஏன்? குற்றவியல் நடவடிக்கை இல்லை என்றால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்?

எனவே, தமிழக முதல்வரின் வாக்குறுதிப்படி, துறை ரீதியான நடவடிக்கை மட்டும் எடுக்கப்படும் என்ற அரசாணை G.O.No.SS ll/320-16/2022ஐ திரும்ப பெற்று, ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகளை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும்,

இதற்கு முன்பு தமிழக அரசால் மூடப்பட்ட ஆலை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று ஓரிருமுறை திறக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பெருவீத தாமிர தொழிலுக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது என்று கொள்கை முடிவு எடுத்து, சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியரின் மூலம் மனு கொடுக்க தூத்துக்குடி மக்கள் அணி திரள்வோம்!

போராடாமல் ஒருபோதும் கிடைக்காது நீதி!

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு
7333911076, 9443584049, 9488478955, 9843412669, 9791123059, 7305172352.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here