ந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு அனைத்து உரிமைகளையும் வழங்கி வருவதைப் போலவும், தற்போது வரை “ஒரே நாடு ஒரே தேர்தல் இல்லை” என்பதால்தான் நாடு சீரழிந்து கிடப்பதை போல பார்ப்பன கும்பலின் ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டன.

கடந்த 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எட்டு கட்டங்களில் தேர்தலை நடத்திய பாசிச பாஜக கும்பல், நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்தினால் பல்லாயிரம் கோடி மிச்சமாகும் என்று பசப்புகிறது.

இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வரலாமா என்று பாஜக யோசித்துக் கொண்டிருக்கும் போதே பார்ப்பன கும்பலின் ஊடக முகமான இந்து பத்திரிக்கை ஊரை முந்திக்கொண்டு   “ இந்த தேர்தல் முறையால் இந்தியாவுக்கு கிடைக்கும் பல்வேறு பலன்களும் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் மட்டும் சுமார் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதில், மத்திய அரசின் செலவுடன் அரசியல் கட்சிகளின் செலவும் அடங்கும். இதில் சட்டப்பேரவை தேர்தல்களையும் சேர்த்தால் தேர்தல் செலவு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும். இந்த செலவுத் தொகையில் பெரும்பகுதி இந்தியாவுக்கு மிச்சமாகும்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களால் கல்வி பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தவிர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்திற்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களும் குறையும். அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தலாம். இதன் பலன் பொதுமக்களுக்கு வந்து சேரும்.  தேர்தல் எனும் பெயரில் பொதுமக்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் பல சேவைகள் தொடரும்.

மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில காவல் துறைகளின் உழைப்பு விரயமாவது தவிர்க்கப்படும். மாநில மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சினைகளை விட தேசிய அளவிலான பிரச்சினைகள் புதிய தேர்தல் முறையில் ஓங்கி நிற்கும். பொதுமக்களுக்கும் தேசிய உணர்வு அதிகரிக்கும்.” என்று “ஒரே நாடு ஒரே  தேர்தலால்” கிடைக்கும் பலன்கள் என்ன என்று பட்டியலிடத் துவங்கி விட்டது.

இந்தியா என்பதே பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதும், பல மொழிகள், பல மதங்கள், பல தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான் அதன் சிறப்புத்தன்மை ஆகும். இந்த வரலாற்று ரீதியான உண்மையை மறைத்து விட்டு அனைத்திலும் ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்று பாசிச முறையில் சிந்திக்கிறது ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா கட்சி.

ஏற்றத்தாழ்வுகள் என்பது வர்க்க ரீதியாக மட்டுமல்ல, இயற்கை வளங்கள், கல்வி அறிவு, மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி என்று அனைத்திலும் ஏற்றத்தாழ்வு நீடிக்கின்ற நிலையில், “ஒரே நாடு” என்ற கோஷம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் பாஜகவின் புரவலர்களான குஜராத்தின் பார்ப்பன பனியா முதலாளிகளான அதானிகள், அம்பானிகள் விரும்புகின்ற “ஒரே சந்தை” உருவாக்க துடித்துக் கொண்டிருப்பதுதான் முக்கிய காரணம்.

தேர்தல்களை நடத்துவதற்கு 60 ஆயிரம் கோடி செலவாகிறது என்று கணக்கு போட்டால் நாளை இப்படியும் பேசலாம். தேர்தலே இல்லாமல் பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்தினால் இன்னும் பல ஆயிரம் கோடி மிச்சமாகும். அதற்கான தொகை மக்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறிக் கொண்டே அந்த பணத்தையும் வாரி அதானிகளின் கைகளில் வழங்கலாம் என்பதுதான் இதன் உள் கிடக்கையாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தாரளவாத கொள்கைகள் அமல்படுத்த துவங்கிய பிறகு தேசிய கட்சிகளின் மீது ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த மக்களுக்கு நம்பிக்கை குறைந்திருக்கிறது தங்களது மாநிலத்தைச் சார்ந்த பிராந்திய கட்சிகள் மட்டுமே தங்களுடைய நலனை பிரதானமாக கொண்டு செல்லும் என்று கருதுகிறார்கள் விதிவிலக்காக சில மாநிலங்களை தவிர இந்தியாவில் பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி உள்ளது.

தான்விரும்பிய இந்து இந்தி இந்தியா என்ற அகண்ட பாரத தன்மை கொண்ட ‘இந்துராஷ்டிரத்தை’ அமைப்பதற்கு இந்த நாட்டில் நிலவும் பல்வேறு தேசிய இனங்களில் பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவை பெரும் தடையாக உள்ளது என்று ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:

 உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
 கர்நாடகா: தேர்தல் அரசியலில் வீழ்த்தியது மட்டுமின்றி நிரந்தரமாக ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு முடிவு கட்டுவோம்!

“ஒரே நாடு” என்ற கோஷத்தின் பின்னணியில் பார்ப்பன கும்பலில் கேள்விக்கிடமற்ற ஆதிக்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் நீண்டகால திட்டமாகும். பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளையும், பொருளாதாரத்தையும் அடக்கி ஒடுக்கி, எதிர்ப்பில்லாத ஒரே நாடு உருவாக வேண்டும்” என்பதை தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இந்து ராஷ்டிர கவிஞர் பாரதியாரின் வார்த்தைகளில் சொன்னால் “சேதம் இல்லாத இந்துஸ்தானம் தனை தேசம் என்று கும்பிடடி பாப்பா” என்பதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை முழக்கம்.. பிராந்திய நலன்களை ஒழித்துக் கட்டுவது, நாடு முழுவதும் ஒரே சந்தையை மையப்படுத்தி, தேசங்கடந்த தரகு முதலாளிகளின் அதிகாரத்திற்கு நாட்டை ஒப்படைப்பது, ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்க போர்த்தந்திரத்தின் கீழ் இந்தியாவை இணைப்பது என்று நீண்ட கால நோக்குடன் முன்வைக்கப்பட்டுள்ள “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பதை அனுமதிக்கவே கூடாது. தொடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சலம் என்பதைப் போல முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதைப் பற்றி ஆய்வு செய்வார் என்று ஆரவாரமாக அறிவிக்கிறது ஆர் எஸ் எஸ் பாஜக.

இது தேர்தலில் பங்கு பெறும் கட்சிகளின் பிரச்சனை என்று சித்தாந்தம் பேசிக் கொண்டிருந்தால் பாசிச பயங்கரவாத அடக்குமுறையின் கீழ் நாடு மீள முடியாத படுகுழியில் விழுந்து விடும் என்பதை நாம் எச்சரிக்கையாக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

நாட்டை கார்ப்பரேட் காவி பாசிசத்தின் கீழ் கொடூரமான அடக்குமுறை நிறைந்த பிரதேசமாக மாற்றுவதற்கு எத்தனித்து வரும் ஆர்எஸ்எஸ்-இன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கண்காணித்து எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here