62% சைனிக் பள்ளிகளை சங்பரிவார் கும்பலுக்கும் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு ஒப்படைத்துள்ளது.
சைனிக் பள்ளிகள்
1961 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி கே மேனனால் உருவாக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இப்பள்ளிகள் சைனிக் பள்ளி சங்கத்தால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இது ஒரு தன்னாட்சி அமைப்பு.
சைனிக் பள்ளிகள், இந்திய ராணுவத்தின் அதிகாரி கேடரில் உள்ள பிராந்திய, சாதி மற்றும் வகுப்பு வேறுபாட்டை களைய செய்து தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய பாதுகாப்பு அகாடமியில் நுழைவதற்கு மாணவர்களை தயார்படுத்தும் பள்ளியாகும்.
சைனிக் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. தற்போது நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி 33 பள்ளிகள் உள்ளன.
சைனிக் பள்ளிகளை நடத்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
2021 பிப்ரவரி ஒன்றிய பட்ஜெட்டில் மாணவர்கள் தேசிய பாதுகாப்புக் அகாடமியில் நுழைவதற்கு தயார்படுத்தவும் சிபிஎஸ்சி+ வகை கல்வியை அவர்களுக்கு வழங்குவதற்காகவும் 100 புதிய சைனிக் பள்ளிகளை நிறுவுவதாக அறிவித்தது ஒன்றிய பாஜக அரசு. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அப்பள்ளிகளை நடத்த அனுமதித்தது.
2021 அக்டோபரில் சைனிக் பள்ளிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதான பிரத்யேக பள்ளிகளை நடத்துவதற்கான மற்றொரு திட்டத்திற்கு மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
The reporters collective RTI மூலம் பெற்ற பதில்களின்படி மே 05 2022 முதல் டிசம்பர் 27 2023 வரை குறைந்தது 40 பள்ளிகளாவது சைனிக் பள்ளிகள் சங்கத்துடன் MOA-யில் கையெழுத்திட்டுள்ளன.
இதில் 11 பிஜேபி தலைவர்கள் நேரடியாகவும், 8 பள்ளிகள் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணையமைப்புகளால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. 6 பள்ளிகள் இந்துத்துவ அமைப்புகள் மற்றும் வலதுசாரி கலவர கும்பல்களுடனும் மற்றும் பிற உறுப்பினர்களுடனும் தொடர்புடையவாகள்ளன. அதானி குழும அறக்கட்டளை நடத்தும் பள்ளியும் கூட இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது.
இந்த பட்டியலில் ஒன்று கூட மத சிறுபான்மையினரால் (கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களால்)நடத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது பாஜக ஆளக்கூடிய குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளே பெரும்பாலும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளனர்.
தீவிர இந்துத்துவவாதியும் துர்கா வாஹினியின் நிறுவனரும் (VHP மகளிர் பிரிவு) ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கிய நபராக இருந்த சாத்விக் ரிதம்பரா, சாத்விக் குருகுலம் பெண்கள் சைனிக் பள்ளி என்ற பெண்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளியானது உத்தரப்பிரதேசத்தில் உள்ள விருந்தாவனத்தில் உள்ளது. இதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராஜலட்சுமி சம்வித் குருகுலமும் 40 பள்ளிகள் உள்ள பட்டியலில் இணைந்து விட்டன.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராமஜென்மபூமி இயக்கத்திற்கு ரிதம்பராவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டி பேசுகிறார்.
ஜூன் 21 2023 அன்று ஆளுமை மேம்பாட்டு முகாமில் சம்வித் குருகுலம் பெண்கள் சைனிக் பள்ளி மாணவர்களிடம் உரையாற்றிய சாத்விக் ரிதம்பரா இந்தியாவின் மகள்கள் ஆண் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். உடையில் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். இவர்களை பார்க்கும் பொழுது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றே தோன்றுகிறது என பெண்களை பார்ப்பனிய பண்பாட்டின் படி அடக்க ஒடுக்கமாக வாழவில்லை என வருந்தப்பட்டுள்ளார்.
சாத்விக் ரிதம்பரா போன்ற இந்துத்துவவாதிகள் கையில் சைனிக் பள்ளிகள் செல்வது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்து மதவெறியர்களாகவே வளர்க்கப்படுவார்கள்.
ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விப் பிரிவான வித்யா பாரதி அகில் பாரதிய சிக்ஷா சன்ஸ்தானுக்கு 7 சைனிக் பள்ளிகள் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்துத்துவாவுக்கு அர்ப்பணிப்புள்ள தேசபக்தியுடன் ஊறிப்போன இளைய தலைமுறையை உருவாக்க விரும்புகிறது’ இந்த பள்ளியின் இணையதளத்தின் முகப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
1937ல் இந்துத்துவவாதியான ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களில் ஒருவரான பி.எஸ்.மூஞ்சேவால் நிறுவப்பட்ட நாசிக்கில் உள்ள போன்சாலா இராணுவப்பள்ளி இப்போது மத்திய இந்து இராணுவக் கல்விச் சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இது சைனிக் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது என ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் அறிக்கை கூறுகிறது.
போன்சாலா இராணுவப்பள்ளியில் பயிற்சிப்பெற்றவர்கள் தான் 2006 ஆம் ஆண்டு நான்டெட் மற்றும் 2008-ல் மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள் என்று மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தரமான கல்வியை வழங்குவதே 100 சைனிக் பள்ளிகளை உருவாக்குவதன் நோக்கம் என்று பாசிஸ்ட் மோடி அரசு கூறியிருக்கிறது. ஆனால் தரமான கல்வி என்றால் அவர்களை பொறுத்தவரையில் இந்துத்துவ கல்வி என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். மலேகான் குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளை உருவாக்குவது தான் நாளை சைனிக் பள்ளிகளின் நோக்கமாக மாறலாம்.
இதையும் படியுங்கள்:
10 ஆண்டுகளில் அரசு நிறுவனங்களில் அதிகாரிகளாக ஒரு புறம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளை அமர்த்தியதும் மறுபுறம் அரசு நிறுவனங்களையே இந்துத்துவமயமாக்கியதும் என ஆட்சியதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவத்தை நிறுவனமயமாக்கியுள்ளது பாசிச பாஜக.
சைனிக் பள்ளிகள் இந்திய இராணுவ கேடர் பதவிக்கு 20 முதல் 25 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இனிவரும் காலங்களில் இராணுவ அதிகாரிகளாக இந்துமதவெறியர்கள் பதவியில் அமர்த்தப்படலாம். நாளை பாஜக ஆட்சியதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டாலும் இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ் கையில் என்ற அபாயம் உள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், பள்ளி குழந்தைகளுக்கு சாகா பயிற்சி அளிப்பதன் மூலம் முளையிலேயே மதவெறி நஞ்சை விதைத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் பாடப்புத்தகங்களில் அறிவியலுக்கு பதிலாக பிற்போக்குதனத்தை திணிக்கிறது. வரலாற்றை திரித்து எழுதிகிறது.
தற்போது சைனிக் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் இந்துமத வெறியர்களின் ஆயுத பயிற்சி களமாக மாற்ற முனைகிறது. அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளது. பாஜக ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டாலும் தெருவில் இறங்கி போராடினால் மட்டுமே சைனிக் பள்ளிகளை அரசுடமையாக்கலாம். மாணவர்களை இந்து மதவெறியர்களிடம் இருந்து மீட்கலாம்.
- நலன்