தினம(ல)யிர்


கருவறை
கக்கூசை காணாத
உன் கண்கள்
என் வகுப்பறை
கக்கூசை கணக்கெடுக்குது
யாருக்கு வகுப்பெடுக்குது

பள்ளிகள்
பெருக்கெடுக்குது-அதில்
பாதிபடிப்பில் நின்ற பிள்ளைகள் மீண்டும் பிறப்பெடுக்குது-அதற்கு காலை உணவு திட்டம்
கை கொடுக்குது -இதனால்
தினம(யி)லர்க்கு மண்டை வெடிக்குது!!
****
உணவு
உனக்கு ருசிக்கானது
எனக்கு பசிக்கானது

புளித்த கஞ்சி சோறு
எனக்கு அமிழ்தம்!
மாடு கழித்த மூத்திர ம்
உனக்கு புனிதம்!!

என் ஆடை
அம்மனத்துக்கானது
உன் உடை
சாதி அடையாளத்திற்கானது

உழைப்பை சேரிக்குள் வைத்தாய்
உணவை ஊருக்குள் ஒளித்தாய்!!

விதைப்புக்கு நான்
விளைச்சலுக்கு நீ

மாட்டாங்கோல் எனக்கு
எழுதுகோல் உனக்கு

சானி கூடை எனக்கு
சாமி பூசை உனக்கு

காடு மேடு காவல்
நானானேன்
கல்வி கூடம் நீயானாய்

படைப்பு நானானேன்
பஞ்சாங்கம் நீயானாய்

ஆட்டையும் மாட்டையும் எனக்கு அவிழ்த்து கொடுத்துவிட்டு ஆட்சியையும் அதிகாரத்தையும் ஆட்டய போட்டுக் கொண்டாய்

எனக்கானது எல்லாம் உனக்கானதாய்
உனக்கானது எல்லாம் எனக்கானதாய் மாற்றினாய் …ஏமாற்றினாய்…

நான் எழாமலும்
நீ விழாமலும் இருப்பதற்கு கடவுளையும் கருவறையையும்
காவல் ஆக்கினாய்….

நீ முடிந்தது என்றாய்
நான் விடிந்தது என்றேன் !

எனக்கானது
எங்கு தொலைத்தேனோ
அவ்விடத்திலிருந்து தேடினேன் …

எவர் என்னிடத்தில்
பறித்துக் கொண்டார்களோ அவர்களிடத்திலிருந்து
எனக்கானதை எடுத்துக் கொண்டேன்

ஆயிரம்… ஆயிரம் ஆண்டுகள்
ஐயங்கார் ஆட்டம் போட்ட நாற்காலியில் இன்று நான்!

எங்கள் மாட்டாங்கோல்கள்
எல்லாம் எழுதுகோல்

படிக் கஞ்சிக்காக
பண்ணை படிக்கட்டில்
பகலெல்லாம் நின்றவர்கள்- இன்று பள்ளி படிக்கட்டில்
பகுத்தறிவாய் நிமிர்கிறார்கள்!!

சாக்குப் பையை
சுமந்த- எம்
தோள்கள் இன்று
புத்தகப் பையை
சுமக்கத் தொடங்கி விட்டது

இதனால் ….
சுடலை ஆண்டியின் மகன்
போலீஸ் சூப்பிரண்ட்

கருமாண்டியின் மகன் கலெக்டர் விதவை தாயின் மகன் விஞ்ஞானி

வீதிக்கு ஒரு வக்கீல்
வீட்டுக்கு ஒரு பட்டதாரி

படியாளி மகன் எல்லாம்
இன்று படிப்பாளிகள் -அதனால் பார்ப்பனியம் பாசிசத்தை விதைக்கிறது -அது
தினமலரில் முளைக்கிறது !!

எங்கள் நாத்தத்தை நக்காதே
நரேந்திரன் நரையை கக்காதே

000

நன்றி… 

 ஏ.சேரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here