“தமிழ்நாடு முழுவதும் 128 இடங்களில் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பித்திருந்தது.
ஊர்வலம் செல்ல திட்டமிடப்பட்ட பாதைகளில் பிற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் இருப்பது, பகுத்தறிவுச் சிந்தனையாளர்களின் சிலைகள் இருப்பது, போக்குவரத்து நெரிசல், ஒலிபெருக்கிகளின் பயன்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, காவல்துறை அதிகாரிகள் இந்த விண்ணப்பங்களை நிராகரித்தனர். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஜெகதீசன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகள் இருந்தபோதிலும், அணிவகுப்புகளுக்கு அனுமதி மறுக்க தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து அதே காரணங்களையே முன்வைப்பதாக நீதிபதி வி. லட்சுமிநாராயணன் குறிப்பிட்டார்.” என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாடு முழுவதும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை துணிச்சலுடன் செயல்படுத்தி வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஒரு பாசிச பயங்கரவாத அமைப்பு என்பதை பலமுறை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் மற்றும் புதிய ஜனநாயகம் தினசரி எழுதி உள்ளது.
இத்தகைய பயங்கரவாத அமைப்பு மக்கள் மத்தியில் இயல்பாக நிலவுகின்ற சாதிய உணர்வுகளை சாதி வெறியாக மாற்றுவதில் திட்டமிட்டு செயல்படுகிறது. பார்ப்பன (இந்து) மதத்தில் உள்ள பட்டியலின மக்கள், பழங்குடிகள் முதல் பார்ப்பனர் சங்கம் வரை பல்வேறு சாதி சங்கங்களை பெரும் நிதி கொடுத்து ஆதரித்து, ஊக்குவித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
படிக்க: ஆர் எஸ் எஸ் அமைப்பின் மீது தடை விதிக்க வேண்டும்! USCIRF அறிக்கை!
“சதுர் வர்ணம், மயா சிருஷ்டம்” என்ற வர்ண கோட்பாட்டை, “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்ற கிருஷ்ணனின் போதனைகளை முன்வைத்து சாதி இயல்பானது, ஏற்றத்தாழ்வு என்பது நிரந்தரமானது என்பதை நியாயப்படுத்தி வரும் ஆர்எஸ்எஸ் சாதிகளை கடந்து மக்கள் வர்க்கமாக ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே சாதி சங்கங்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி, அவர்களுக்குள் நிரந்தரமாக பகை உணர்ச்சியை உருவாக்குவதை திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர்.
“நான்கு வர்ணங்களில் பார்ப்பனர்கள் அனைத்து விதமான உரிமையும் பெற்றவர்கள்; இன்னும் சொல்லப்போனால் பூமியில் தோன்றியுள்ள கடவுளர்கள்; பூதேவர்கள்” என்று ஆர்எஸ்எஸ் பிதாமகன்களான கோல்வால்கர், சாவர்க்கர் முதல் மோகன் பகவத் வரை தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இத்தகைய வர்ணாசிரம கோட்பாடுகளையும், இந்து என்று சொல்லிக் கொள்ளப்படும் மதத்திலேயே பிரிவினைக் கொள்கையையும் தீவிரமாக பேசி வரும் ஆர்எஸ்எஸ் இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கமாகும். அந்த பயங்கரவாத இயக்கம் தன்னை மக்கள் அடித்தளத் தன்மை கொண்டதாக மாற்றிக் கொள்வதற்கு தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.
அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் இரகசிய வலைப்பின்னல்களைக் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு துணை அமைப்புகளை நிறுவி விரிவுபடுத்தி வருகிறது. இந்து என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்ற சனாதனத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், பார்ப்பன மேலாதிக்கத்தையும் நிலை நாட்டுவதற்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடத்துகின்றனர்.
படிக்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி எதற்கு? பார்ப்பனப் பாசிஸ்டுகளை மோதி வீழ்த்து!.
“அவர்கள் நாவிலே ராமனையும், கையில் கூர்வாளையும் வைத்திருப்பார்கள். யோகியைப்போல் பேசி கொலைகாரனைவிட கோரமாய் நடப்பார்கள்.” என்று டாக்டர் அம்பேத்கர் அவரது சமகாலத்தில் இருந்த ஆன்மீகவாதிகள் மற்றும் ஆன்மீகத்தின் பெயரால் பார்ப்பன மதத்தை பரப்பிய ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் குறித்து கருத்துகளை முன் வைத்திருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிராகவும் பிரச்சாரத்தை மேற்கொள்வது மட்டுமின்றி பெண்களுக்கு எதிராகவும் பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகிறது.
இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.எஸ்.எஸ் பற்றி ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் முன்வைத்த வாதங்களையே தற்போது ஆட்சி செய்து வரும் பாசிச கோமாளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகமும் நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளது என்பதால் தான் நீதிமன்ற ‘நீதியரசர்கள்’ ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுப்பதற்கு, இந்த கட்டுரையின் துவங்கத்தில் உள்ள வாதங்களை முன்வைத்து அனுமதி கொடுத்துள்ளனர்.
படிக்க: அரசு ஊழியர்கள் இனி ஆர் எஸ் எஸ்-சில் சேரலாம். தடை நீக்கமும், அதன் தாக்கமும்.
நாடு முழுவதும் உள்ள அரசு கட்டமைப்பு; அதிகார வர்க்கம்; நீதித்துறை; போலீஸ்; இராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் படிப்படியாக ஆர்எஸ்எஸ் மற்றும் நாக்பூர் தயாரிப்புகளால் நிரப்பப்பட்டு வருகிறது என்பது தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்ற போதிலும், அதனை எதிர்த்து கூர்மையாக போராடுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் மட்டும் இன்றி எந்த விதமான ஓட்டு கட்சியும் தயாராக இல்லை.
பாசிச பாஜகவிற்கும், இதர கட்சிகளுக்கும் அரசியல் ரீதியிலேயே வேறுபாடு உள்ளது. பல கட்சிகளை போல பாரதிய ஜனதா கட்சி ஒரு கட்சி அல்ல! அது ஒரு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் அரசியல் பிரிவு என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி பெரும்பான்மை மக்களை அதன் போதையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக அவர்களுடன் கூட்டு சேர்ந்து பொறுக்கித் தின்பதற்கும், நாட்டின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், கார்ப்பரேட்டுகளுக்கு வாரி கொடுத்து கமிஷன் பெற்று தனது வயிறு வளர்ப்பதையும் குறிக்கோள்களாக கொண்டு செயல்படுகின்றனர்.
இத்தகைய சமரசமான அணுகுமுறை கொண்ட ஊசலாட்ட பேர்வழிகளை அதாவது தனது கட்சியின் பின்னே திரண்டுள்ள தொண்டர்களை சரியாக வழி நடத்துவதற்கு திறனற்ற சமரசத் தலைமைகள் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்து வீதிகளில் திரண்டு போராட மாட்டார்கள். அதிகபட்சமாக சட்டரீதியிலாக வழக்கு போடுவது, மனு கொடுப்பது ஆகியவற்றின் மூலம் அவர்களை தடுத்து விடலாம் என்று கனவு காண்கின்றனர்.
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததிராய் போன்றவர்களே, “ஆர்.எஸ்.எஸ் பாஜக பாசிசத்திற்கு எதிராக கருத்தரங்குகளிலும், கருத்து பிரச்சாரங்களிலும் ஈடுபடுவதை காட்டிலும் தெருவில் இறங்கி வீழ்த்துவதற்கு தயாராக வேண்டும்” என்று அறைகூவல் விடுக்கின்றனர் என்ற அளவிற்கு நாடு பாசிச பயங்கரவாதத்தின் கீழ் கொடூரமான துன்பங்களை அனுபவித்து வருகிறது.
படிக்க: தேர்தல் பத்திரங்கள்: சட்டபூர்வமாகக் கொள்ளையடித்த ஆர் எஸ் எஸ்-பாஜக!
எனவே, ஆர்.எஸ்.எஸ் பாசிச பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்பது மட்டுமின்றி அவர்கள் நடத்துகின்ற பேரணிகளை எதிர்த்து களமாடுவதற்கு தயாராக வேண்டும். இதனால் ஏற்படும் இழப்புகள், சிறைக் கொடுமைகள், அடக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு முறியடிக்காமல் பாசிசத்தை வீழ்த்துவதற்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது.
அவர்கள் ஷாகா பயிற்சி மேற்கொள்வதைப் போல பாசிசத்தை வீழ்த்த போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அவர்கள் எடுத்து வருகின்ற அனைத்து ஆயுதங்களையும் எடுத்து வருவதற்கு உரிமை உள்ளது என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நிலை நாட்ட வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை நீதிமன்றமோ அல்லது அதிகார வர்க்கத்தினரோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது மட்டுமின்றி இவற்றை பயங்கரவாத அணுகுமுறை என்ற முத்திரை குத்தி அடக்குமுறைகளை ஏவுவதற்கு தயாராவார்கள் என்பது தான் நாட்டில் உள்ள பாசிச பயங்கரவாதத்தின் தற்போதைய நிலைமை. எதிர் கொள்ள தயாராவோம்.
- பார்த்தசாரதி.
புதிய ஜனநாயகம் தினசரி







