“ஒரு அரசு சாராத அமைப்புச் செய்யும் வகுப்பு மற்றும் இலக்கு வன்முறையை அதன் தலைவர் தடுக்கத் தவறினால் அவரின் தொண்டர்கள் செய்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் அவரும் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்”. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளின் பெருவாரியான தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். குறிப்பாக பாஜகவில் இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள். ( பக்கம் 56, 60) ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர். அரண் எழுதிய நூலில் இருந்து…

இதுவரை அமலில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் சிறப்பு பிரிவினை உள்ளடக்கிய ஊபா சட்டம், பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்வைக்கின்ற பல்வேறு ஆள் தூக்கி சட்டங்கள் ஆகியவை நடைமுறையில் உள்ள போதே ஆர் எஸ் எஸ் அமைப்பை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை.

தமிழகத்தில் வன்முறைக் காடாக மாற்ற நினைக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் விஜயதசமி நாள் கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு ஆர் எஸ் எஸ் அனுமதியை பெற்றுள்ளது.

“அக்டோபர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ஏற்கனவே 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 6 இடங்களிலும் அனுமதி அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட 4 இடங்களில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 2 இடங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஒரே நாளில் 4 இடங்களிலும் பாதுகாப்பு அளிக்க இயலாது. தசரா விழா காரணமாக தூத்துக்குடி, சாயர்புரம் மற்றும் கோவை மாவட்ட ரத்தினபுரியில் அக்டோபர் 6ம் தேதி பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதேபோல, மேடவாக்கம் மற்றும் சேலையூரிலும் அனுமதி அளிப்பதில் சிரமங்கள் உள்ளன என்றார்.

படிக்க: கொலைகார ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தடையை நீக்கிய பாசிச கும்பல்!

இதையடுத்து மீதமுள்ள 6 இடங்களுக்கும் அனுமதி வழங்க உத்தரவிட்ட நீதிபதி, மேற்கொண்டு எந்த நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் இருக்கும் பகுதி மற்றும் கொள்கை கொண்ட கட்சியினர் அலுவலகம் இருக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கக் கூடாது. எதிர்காலங்களில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்”. என்று உத்தரவிட்டுள்ளார்.

படிக்க: அகண்ட பாரதமும் ஆர்எஸ்எஸ்-ன் ஆண் குறியும்.!

விஜயதசமி என்ற மத ரீதியிலான பண்டிகையை பயன்படுத்திக் கொண்டு ஆர் எஸ் எஸ் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு தமிழக காவல்துறையிடம் அனுமதி கேட்டது. ஆனால் அவர்கள் அதனை மறுத்துவிட்டார்கள் என்ற காரணத்தினால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து ஊர்வலத்திற்கான அனுமதியை பெற்று விட்டார்கள்.

ஆர்எஸ்எஸ் என்ற மூன்று முறை தடை செய்யப்பட்ட பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்பை மேலும் மேலும் வளர்வதற்கு உகந்த வகையிலேயே நீதித்துறை சட்டத்தை பயன்படுத்தி அனுமதி வழங்குகின்றது. இந்த சூழ்நிலையை தான் எழுத்தாளர் அரண் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

மதத்தின் பெயரால் அரசியல் செய்கின்ற பிற அமைப்புகளை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள், ‘ஆன்ட்டி இந்தியன்கள்’ என்றெல்லாம் முத்திரை குத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் நடத்தும் வன்முறையை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கோருகின்றது..

ஜனநாயக ரீதியாக தாங்கள் செயல்படுவதாகவும், தங்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்றும், நீதித்துறையிடம் முறையிட்டு தனது நோக்கத்தை சாதித்துக் கொள்கிறது.

ஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய் என்றும், பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்று போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீது ஒடுக்கு முறையை ஏவுவது மட்டுமின்றி நேரடியாகவே RSS குண்டர்கள் கைகலப்பிலும், படுகொலையிலும் இறங்குகிறார்கள்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் முதல் பிற அரசு நிறுவனங்களான போலீஸ், ராணுவம், நீதித்துறை, சிறைச்சாலை, அதிகார வர்க்கம் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்தும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு செயல்படுகிறது என்று நாம் கருதிக் கொண்டால் அது தவறாகும். அது மட்டுமல்ல மிகப்பெரிய பேரழிவை தற்போதைய சமூகத்தின் மீதும், எதிர்கால தலைமுறையின் மீதும் சுமத்துகின்ற குற்றவாளிகளாக மாறி விடுவோம் என்பதுதான் மேற்கண்ட நீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பெரிய பாடமாகும்.

  • பார்த்தசாரதி.

5 COMMENTS

  1. நீதிமன்றங்கள் காவிமயமானதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இது..

    வர்ணாசிரம கோட்பாட்டை வேகமாக நிலைநாட்டப் துடிக்கும் நீதிமன்றங்கள்…

    காவிகளை வீழ்த்தாமல் மக்களுக்கு விடுதலை இல்லை..

  2. ஆர் எஸ் எஸ் அமைப்பு என்ன கோரிக்கைக்காக ஊர்வலம் போகிறது ஒரு வெங்காயமும் கிடையாது தடை செய்யப்பட்ட அமைப்பை அனுமதி கொடுத்து வளர்க்கின்றது நீதித்துறை….

  3. நீதி மன்றங்கள் மட்டுமா கவி மயம் ஆகிறது தேர்தல் ஆணையம் இடி, ஐடி, சிபிஐ, சிஏஜி, ராணுவம் மத்திய ரிசர்வ் போலீஸ், பல்வேறு விதமான அரசு சார்ந்த துறைகள் என அனைத்திலும் காவி மையம் சிறகடித்து பறக்கிறது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட எப்படி பாஜக தில்லுமுல்லுகள் செய்து ஆட்சியைப் பிடித்தது?- என்பது அறிவு சார்ந்தோர் மட்டுமல்ல; பாமர மக்களும் உணரத் தளைப்பற்றுள்ளனர். ஆக, ஆர்எஸ்எஸ் இன் வழிகாட்டுதல்படி ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே கல்விக் கொள்கை, ஒரே கார்ப்பரேட்….என்ற திசையை நோக்கி அனைத்துமே காவி மையம் என்பதை நான்கு கால் பாய்ச்சலில் – வெறி கொண்ட மிருகமாக நாடு முழுவதும் பரந்து விரிந்து கொண்டு செல்ல இந்து மத வெறி பாசிச அமைப்புகள் அனைத்தும் முனைந்து நின்று செயல்படுகின்றன. அதனால் தான், இதனை நாம் காவி பாசிசம் என வரவேற்கிறோம். வெகுவாக நீதித்துறையில் புகழப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களே தனது வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றில் பாசிச மோடியையே வரவழைத்து மதவெறிக் பயணத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். இவ்வாறாக அனைத்து பன்முக தன்மைகளையும் ஆய்ந்து நாம் நமது நாட்டை கொளுத்துவது கார்ப்பரேட் காவி பாசிசம் என வரையறுத்து இருக்கிறோம். நாட்டு மக்களின் பெரும் அபாயகரமான இந்த சக்திகளை வீழ்த்துவதற்கு புரட்சிகர இயக்கங்கள் முனைந்து நின்று அனைத்து விதமான ஜனநாயக சக்தியையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, இந்த கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்த வேண்டிய கடமை நம் முன்னே காத்துக் கிடக்கிறது. தியாகமின்றி
    வெற்றி சாக்கியமில்லை! ஒன்றிணைவோம்! களம் புகுவோம்! வெற்றி காண்போம்!!

  4. கண் பார்வை கோளாறு மற்றும் பதிவுகள் செய்யும் பொழுது ஏற்படும் தவறுகளை நுணுக்கமாக திருத்துவதற்கான ஆற்றல் இன்மை இவைகள் காரணமாக மேலே உள்ள எனது கருத்து பதிவில் பல்வேறு பிழைகள் ஏற்பட்டுள்ளன, அன்பு கூர்ந்து பிழைகளைத் திருத்தி வாசிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். தவறுகளுக்கு வருந்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here