கள்ளக்குறிச்சியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் அம்மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதும் குடிபோதையில் அவர் வீட்டிற்கு சென்று அலம்பல் செய்ததும் அதை கையாள்வதற்கு விர்ச்சுவல் வாரியர்ஸ் மூலம் பெண் கலெக்டர் மீது கேவலமான பதிவுகளை இடுவதும், வழக்கம் போல் முதல்வர் ஜோசப் விஜய் ‘க்யூட்டாக’ வலம் வருவதும் தமிழ்நாடு பொறுக்கி கும்பலிடம் சிக்கியுள்ளதை உணராமல் இளைஞர்கள் ரசிக வெறிக்கு பலியாக்கப்படுவதும் நடந்து வருகிறது.
தவெகவில் எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்கள் யார்?
ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்தவர்கள், பொருளாதார மேதைகள், மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த போராளிகள், பெண்ணியவாதிகள் இப்படி யாரும் தவெக-வில் எம்.எல்.ஏ வாக இல்லை. வேறு யார் இவர்கள்? செவ்வாய் கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நபர்களா? இந்த கேள்வியை நமக்குள் எழுப்பாத வரை நாமும் தற்குறிகள் தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை தற்போது பெண் கலெக்டர் விவகாரத்தில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் உட்பட பலரும் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகர்களாக முதல் நாள் பட ரிலீஸ் அன்று விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தவர்கள் தான்.
ஓரளவுக்கு பண வசதிக் கொண்ட இந்த நபர்கள் குடிபோதையில் கூத்தாடிய காணொளிகளும் சமூக வலைதளங்களில் வெளிவந்து நாறியது. மனிதவளத்துறை அமைச்சரான ‘கில்லி’ சரத் ஐபிஎல் நிகழ்ச்சியில் போதைப் பொருள் பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கியதும் நடந்தது. தவெக அமைச்சரான ஜெகதீஸ்வரி விஜய் புகைப்பிடிக்கும் படத்தை கையில் பச்சைக் குத்திக் கொண்டு அதற்கு கேவலமான விளக்கம் அளித்த வீடியோவும் சமீபத்தில் வைரலானது. துணை சபாநாயகர் ரவிசங்கர் சமீபத்தில் தனது பகுதி பிரச்சினையை பேச வந்த நபரை கடுமையான வார்த்தைகளால் பேசி தாக்கிய காணொளி வைரலானது.
நடிகர் விஜய் தான் நடித்த படங்களில் போதைப் பொருள் பயன்படுத்திய போதும், பெண்களை இரட்டை அர்த்த வசனங்களில் பேசிய போதும் குதூகலித்து கைத்தட்டி ரசித்த நபர்கள் தான் இன்று தவெக எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய்யும் திரையில் தன்னை அடிமைத்தனமாக பார்த்து ரசித்து மண்டியிட்டு வணங்கிய நபர்களுக்கே எம்.எல்.ஏ சீட் வழங்கினார். அதை தவிர்த்து அவர்கள் யாரும் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொள்ள எந்த அருகதையும் இல்லாதவர்கள். நடிகர் விஜய்யின் ரசிக அடிமைகளே. நடிகர் விஜய் சினிமாவில் செய்த ‘சாதனைகளை’ தான் இவர்கள் நிஜத்தில் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
படிக்க: அரசியலற்ற அரசியலும் கார்ப்பரேட் பின்னணியும் கலந்த கலவையாக பாசிசக் கோமாளி விஜய்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்ட கட்சிகளின் மீதுள்ள வெறுப்பால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் ஒருபுறம் என்றால் ‘க்யூட் அண்ணன் விஜய்’ முதல்வராக வேண்டும் என்ற ரசிக அடிமை மனோபாவத்தில் வாக்களித்தவர்கள் தான் அதிகம். அதனால் தான் நடிகரும் தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய்யும், அவரது அடிமை அமைச்சர்களும் தவறு செய்யும் போதெல்லாம் முரட்டுத் தனமாக முட்டுக் கொடுத்து காப்பாற்ற முயல்கிறார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். அப்படி தான் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு எதிராக அவர்கள் போடும் பதிவுகளும் உள்ளன.
முட்டுக் கொடுக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும்
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதை மறைக்க அமைச்சர்கள், காவல்துறை, அரசு ஆதரவு பத்திரிக்கையாளர்கள் உட்பட தீயாக வேலை செய்கிறார்கள். இதில் சில செய்தி தொலைக்காட்சிகள் தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முதல்வர் விஜய் கடும் கோபத்தில் பேசியது போலவும், எம்.எல்.ஏக்கள் அஞ்சி நடுங்கியது போலவும் சித்தரித்து முகப்பு வைத்து பதிவுகள் போடுவது கேவலத்தின் உச்சம். தவெக எம்.எல்.ஏக்கள் மீதான புகார்கள் அதிகமானவுடன் அவசரமாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டிய முதல்வர் விஜய், அந்த கூட்டம் நடைபெறும் ஹோட்டலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து ஒரு பத்திரிக்கையாளரை கூட அண்ட விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் முதல்வர் அந்த கூட்டத்திற்கு வந்தாரா என்று கூட பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படியான நிலையில் பத்திரிக்கைகளின் இந்த விளம்பரங்களில் அடிமையின் வாடையே அடிக்கிறது.
படிக்க: பாசிச கோமாளி விஜய்யின் மக்கள் விரோத ஆட்சி!
அடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைச்சர் நிர்மல் குமாரின் அசிங்கமான பேட்டி. பத்திரிக்கையாளர்கள் அருள் விக்னேஷ் குறித்து கேள்வி எழுப்புகையில், கனிமொழி சமூக ஊடகங்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் கருத்து தெரிவித்திருக்கிறார். கனிமொழி கூறியது தவறானது. அருள் விக்னேஷ் அவர் தவறே செய்யவில்லை என்று கூறினார். அவர் தவறே செய்யவில்லை என எந்த அடிப்படையில் சொன்னார் தெரியுமா? நான் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று அருள் விக்னேஷே சொன்னாராம்.
சரி, தவெகவினர் பாலியல் பொறுக்கி எம்.எல்.ஏ வை பாதுகாக்க போராடுகிறார்கள் என்றால் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களையெல்லாம் மிஞ்சிவிட்டார். திமுகவை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு “வாட்ஸ்அப் வதந்திகளை மட்டும் வைத்து ஒருவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்கக் கூடாது. அருள் விக்னேஷ் ஏற்கெனவே தனது விளக்கத்தை அளித்துள்ளார். ஆதாரமில்லாமல் ஊடக விசாரணை நடத்துவது தவறு என்றவர், அருள் விக்னேஷ் பாவம் என்று ஆதரவாகப் பேசியுள்ளார்.
விசிகவின் அமைச்சர் வன்னியரசோ, “பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களையும் அரசு பணியில் இருக்கும் பெண்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. விசிக எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்கும். இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் விசாரித்து அறிக்கை அளிக்கச் சொன்னால் தான் கருத்து தெரிவிக்க முடியும்” என்றார். எப்படியிருந்த வன்னியரசு இன்று அதிகாரத்திற்கு சென்ற பிறகு பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க கூட தயங்குகிறார். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட கலெக்டரிடம் சமாதானம் பேச சென்றதாகவும் செய்திகள் வருகின்றன.
படிக்க: ‘அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் விஜய்’ தான்! தற்குறிகளின் அலம்பல்!
இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கடந்த காலத்தில் கலெக்டர் குறித்து சில விரும்பத்தகாத, முறையற்ற கருத்துகளைப் பேசியதாக டிஐஜி தெரிவித்துள்ளார். கலெக்டர் இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகள் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகமும் மூத்த அமைச்சர்களும் அருள் விக்னேஷை அழைத்து கடுமையாக எச்சரித்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதாவது கலெக்டர் புகாரளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அவர் தவறு செய்துள்ளார் என்று எங்களுக்கு தெரியும் என்று காவல்துறை சொல்கிறது. இப்படிதான் சாமானியர்களின் பிரச்சினைகளையும் அணுகுவீர்களா? அல்லது பாத்ருமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போட வைப்பீர்களா? அதிகார வர்க்கத்தின் காலை நக்கி பிழைப்பதற்கு எதற்கு காவல்துறை. அடியாள் படையாகவே இருந்துவிடலாமே.
பாதிக்கப்பட்ட கலெக்டர் தரப்பில் கலெக்டரின் கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைச் செயலர் சாய்குமாரிடம் புகார் அளித்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. தலைமைச் செயலரிடம் அளித்த புகாரின் நகலை ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு (DoPT) அனுப்பியுள்ளதாக நவம்பர் 13, 2026 அன்று செய்தி வெளியாகியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ வின் இந்த பாலியல் பொறுக்கித் தனத்திற்கு காரணமே முதல்வர் ஜோசப் விஜய் தான். தூத்துக்குடி எம்.எல்.ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்தது, அருள் விக்னேஷ் போன்ற பாலியல் பொறுக்கிகளுக்கு ஊக்கமாக இருந்துள்ளது. இதுபோல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என குற்றவாளிகளின் கூடாரமாய் வளர்ந்திருக்கும் தவெக தான் தமிழகத்தில் மாற்றம் கொண்டுவரப் போகிறதா என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தான் சிந்திக்க வேண்டும். உண்மையாகவே மக்கள் மீது அக்கறையும் பெண்கள் பாதுகாப்பில் உறுதியாகவும் இருக்க விரும்பும் தவெகவினர் அக்கட்சியில் இருந்து வெளியேறுவதும், பாலியல் பொறுக்கிகள் மீது நடவடிக்கை எடுக்க போராடுவதுமே தமிழ்நாட்டை பாதுகாக்கும் ஒரே வழி.
- நந்தன்






