ஏலம் போகும் பொதுத்துறை நிறுவனங்கள்!
தேசிய பணமாக்கல் கொள்கையின் கீழ் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வாரி கொடுக்கின்ற தேசத் துரோக செயலை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடும் போது, அதை ஏலத்தில் எடுப்பதற்கு பிற பொதுத்துறை நிறுவனங்கள் முயற்சி செய்யக்கூடாது என்று பொதுத்துறை நிறுவனங்களை மிரட்டி உள்ளது பாஜக.
தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு எந்தவிதமான மனப்புழுக்கம் வந்துவிடக்கூடாது. வில்லாமல் விரியாமல் தேசத்தின் சொத்துக்களை தனது எஜமானர்களுக்கு வாரி வழங்க சட்டப்படியும், வேறு எந்த வகையிலும் எதிர்ப்பு வந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையாக கையாள்கிறது பாஜக.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கு தான் என்று தொடர்ந்து புளுகி வருகின்றனர் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள்.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பகாசுர நிதி மூலதன கொள்ளைக்கு இந்தியா ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகவும், பிரதமர் மோடி அதன் CEO ஆகவும் செயல்படுகின்றனர் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
செல்வம்.