கார்ப்பரேட் – காவிமயமாகும் மாநில உரிமைகளை பறிக்கும்
பல்கலைக்கழகம் மானிய குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்பப்பெறு!
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் நேரலையில்…
நேரலையில் பாருங்கள்… பகிருங்கள்…
கார்ப்பரேட் - காவி காவிமயமாகும், மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழகம் மானிய குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்பப்பெறு!
நேரலையில் பாருங்கள்… பகிருங்கள்…
ஒன்றிய அரசின் கீழ் தரமான UGC வரைவு விதிகளுக்கு எதிரான அதைத் திரும்பப் பெற
வலியுறுத்தி “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி” சென்னை வள்ளுவர் கோட்டம் முன் நடத்திய எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். தோழமை மாணவர் அமைப்புகள், கல்வியாளர், ஊடகவியலாளர், தோழமை அமைப்பினர் – எனப் பலரும் பங்கேற்று எழுச்சிமிகு தண்டன உரை நிகழ்த்தியது வெகு சிறப்பு. மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் என பலரும் உள்ளக் கிளர்ச்சியுடன்
பங்கேற்று தமது பங்களிப்பை செலுத்தியது பாராட்டிற்குரியது. அனைத்து அரசியல் இயக்கங்கள் மற்றும் மாணவ அமைப்புகள் பொதுமக்கள் அடங்கிய விரிவான அய்க்கிய முன்னணியைக் கட்டி UGC வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரை ஓயாது போராடுவோம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டுமெனில் தனித்தனியாக போராடுவது என்பது தீர்வை தராது..பாசிசத்தை எதிர்க்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் ஓர் அணியில் ஒன்றிணைந்த போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் அதற்கு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..