பத்திரிக்கைச் செய்தி!
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.


21.0.2025

திண்டுக்கல் – தாடிக்கொம்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர்கள் மீது பாஜக இந்து முன்னணி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்!

வன்மையாகக் கண்டிக்கிறோம்!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலவரம் செய்தது மட்டுமின்றி ரவுடிகளைப் போல இந்து முன்னணி, பாஜக குண்டர் படையினர் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாசிச பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளையும், காவி பாசிச நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்வதை தடுப்பதற்கு தமிழகத்தில் பாஜக இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் குண்டர் படையினர் களத்தில் இறங்கி உள்ளனர் என்பதன் வெளிப்பாடுதான் திண்டுக்கல்லில் நடந்த இந்த தாக்குதல்.

தனக்கு எதிராக வருகின்ற விமர்சனங்கள், கருத்துக்களை ஜனநாயக ரீதியில் இவர்கள் அணுகுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. ஏனென்றால் பாசிச பாஜக பிற கட்சிகளைப் போல ஒரு கட்சி கிடையாது என்பதை மக்கள் கலை இலக்கியக் கழகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

வடமாநிலங்களில் தனக்கு எதிராக போராடுகின்ற, கருத்து தெரிவிக்கின்ற பத்திரிக்கையாளர்கள் – செய்தியாளர்கள் துவங்கி சமூக செயல்பாட்டாளர்கள் – வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் போன்றவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்துவது, படுகொலை செய்வது என்று கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்து முன்னணி குண்டர் படையினர் தமிழகத்திலும் தங்களது வெறியாட்டத்தை துவக்கி உள்ளனர்.

நிகழ்ச்சி நடந்த இடத்தில் கலவரம் செய்தது மட்டுமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தோழர்களை பார்க்க சென்றவர்களின் மீதும், பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முறையாக அனுமதி பெற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் வன்முறை வெறியாட்டத்தை நடத்திய ஆர்எஸ்எஸ்- பாஜக – இந்து முன்னணி குண்டர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக இரண்டு தரப்பினர் மீதும் வழக்குகளை போட்டுள்ளது திமுக போலீசு.

வழக்கமாக இரண்டு பிரிவினருக்கிடையில் நடந்த மோதல் என்பதைப் போல சித்தரிக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தமிழ் இந்து உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்கள் பாஜகவினர் தாக்கப்பட்டது போல செய்தி வெளியிட்டுள்ளனர். இதுதான் இவர்கள் முன்வைக்கின்ற ஜனநாயகத்தின் யோக்கியதை.

படிக்க:

🔰 சங்கிகளின் முருகன் மாநாடு: தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம்!

பாசிச குண்டர் படையினர் தமிழகத்தில் தங்களது வெறியாட்டத்தை துவக்கி விட்டனர். அதற்கு எதிராகப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் மற்றும் பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய சூழலை எதிர்கொண்டுள்ளோம்.

மார்க்சிஸ்ட் தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி குண்டர் படையினரை கொலைக் குற்ற வழக்கில் கைது செய்து சிறையிலடை!

மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற மார்க்சிஸ்ட் அமைப்பினருக்கு உரிய பாதுகாப்பு கொடு!

என்று போராடுவோம் என்பதை மக்கள் கலை இலக்கியக் கழகம் தனது அறைகூவலாக முன்வைக்கிறது.

இப்படிக்கு:

தோழர்.கோவன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.
தொடர்புக்கு: 8903005636.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here