ஆபரேஷன் காகர் என்ற பெயரில் பழங்குடியின மக்களையும், மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடும் கார்ப்பரேட் – காவிப் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி மாவோயிஸ்ட் பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து என்ற முழக்கத்துடன் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) லிபரேசன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு இணைந்து கண்டன பொதுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது.
இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தம்முடைய கடமையை நிறைவேற்ற அணித்திரண்டிருந்தார்கள். மக்கள் நிறைந்த இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஆப்ரேஷன் காகரில் வேட்டையாடப்படும் பழங்குடிகள் குறித்தும் இதில் கார்ப்பரேட்டின் பங்கு என்ன என்பது பற்றியும் விளக்கி பேசினார்கள்.
பொதுக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆங்காங்கே நின்று கவனித்து சென்றார்கள். கண்டன பொதுக்கூட்டத்தில் பேசியவர்களின் கருத்துக்கள் மக்களிடம் சென்று சேரும் பொழுது நம்முடைய நோக்கம் நிறைவேறியதாய் அர்த்தம். அந்த வகையில் இந்த கண்டனப் பொதுக்கூட்டம் அதன் தேவையை நிறைவேற்றியுள்ளது என்பதை அறிகிறோம்.