தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் 25 பேர் கைது!

தஞ்சையில் நடைபெற்ற கன்டண ஆர்ப்பாட்டம் 25 பேர் கைது!

சிபிஐ (எம்) மக்கள் சந்திப்பு இயக்கத்தில் புகுந்து கலவரம் செய்து தாக்குதல் நடத்திய பாஜக-இந்து முன்னணி – ஆர் எஸ் எஸ் அமைப்பினரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தஞ்சை இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் 22-06-2025 அன்று அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. . தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணிக்கு தடையைமீறி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஐஎம் மாநகர செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட நோக்கத்தை கூறுவதற்குகூட காவல்துறை அனுமதிக்கவில்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றதில் திண்டுக்கல் அருகே நடைபெற்ற சந்திப்பு இயக்கத்தில் சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் மற்றும் தோழர்கள் மீது பாஜக,ஆர் எஸ் எஸ் அமைப்பினர்கள் கலவரம் ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்தாததால் அவர்கள் எளிதாக கலவரத்தை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழ்நாடு காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிபிஐஎம் தோழர்களை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கில் பதிவு செய்து, குண்டர்கள் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுருத்தியும், சமீபகாலமாக பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்புகள் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்து வருவதை கண்டித்தும் . தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கு எந்த விதத்திலும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க கூடது என்பதை வலியுருத்தியும், பாஜக ஆர்எஸ்எஸ் இந்து அமைப்பினர்களின் நாச வேலைகளை முறியடிக்க அறைகூவல் விடுத்தும்
ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

 

ஆர்ப்பாட்ட தலைவர சிபிஐ (எம்) மாநகர செயலாளர் எம்.வடிவேலன் மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சீனிவாசன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச் செயலாளர் ராவணன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் அருள்,
சிபிஐ (எம்) மாவட்ட செயலர் சின்னை பாண்டியன் மற்றும் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார் , என்.சரவணன், என்.குருசாமி, இ. வசந்தி, இந்திய மாணவர் சங்கம் மாநகர குழு உறுப்பினர்கள் வீ.கரிகாலன், வி.கணேசன், சி ஐ டி யு மாவட்ட பொருளாளர் பேர்நீதியாழ்வார், மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு, ஆட்டோ சங்க மாநகர செயலாளர் ஏ.ஜெயராஜ் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்:
மக்கள் கலை இலக்கிய கழகம்
தஞ்சை

22-06-2025

1 COMMENT

  1. மகிழ்ச்சி தோழர். இவ்விதம் பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவா காவி(லி)க்
    கூட்டத்தை ஒன்றுபட்ட ஐக்கிய முன்னணி மூலமாக வீதியில் இறங்கி நேருக்கு நேர் மோதி அழிக்க வேண்டியது இன்றைய காலக் கட்டத்தின் முக்கிமத் தேவை என்பதை தஞ்சையில் நடைபெற்ற மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டச் செய்தி உணர்த்துகிறது.

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கிராமத்தில் CPI(M) சார்பில் காவலாதுறை அனுமதியுடன் நடைபெற்ற தெருமுனைப்
    பிரச்சாரக் கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி பாஜக கலவரக் காவிக் கும்பல்
    உட்புகுந்து கொடும் தாக்குதல் நடத்தியது அனைத்து ஜனநாயக சக்திகளாலும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
    அந்தக் காலிகளை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். கடுமையாக தண்டிக்கப்படல் வேண்டும்.
    மாறாக ‘திராவிட மாடல் அரசின்’ காவல்துறை இரு தரப்பையும் சமமாக பாவித்து வழக்கு பதிவு செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது இழிவானது. அவமானகரமானது.

    இப்பிரச்சனைக்காக தஞ்சையில்ம. ம.க.இ. க. சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களை
    காவல்துறை கைது செய்தது மேலும் அவ மானகரமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here