சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் ஆர்ப்பாட்டம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்று புற்றுநோயை பரப்பும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமாக வேதாந்தா கம்பெனியின் கைக்கூலியாக அதிமுக அரசின் போலீசு சுட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் 13 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனை ஒட்டி இந்த ஆலையை மூடுவதற்கு அதன் பின்பு வந்த திமுக அரசும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்த நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வேலைகளை ஸ்டெர்லைட் கைக்கூலிகள் செய்து வருகிறார்கள்.

இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மூன்று மையங்களில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் வேதாந்தவை கண்டித்தும் 13 பேரின் படுகொலைக்கு காரணமான தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளை கைது செய்கிறோம் என்று சொன்ன அரசு பதவி உயர்வு கொடுப்பது அம்பலப்படுத்தி முழக்கமிட்டனர்

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆய்வு அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளை சிறையில் தள்ள வேண்டும் என்றும் உடனடியாக ஸ்டெர்லைட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் படுகொலையான தியாகிகளுக்கு 13 பேருக்கும் நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும் தோழர்கள் பதாகையுடன் முழக்கமிட்டனர்.

இவ்வார்ப்பட்டத்திற்கு…

தலைமை:-
தோழர் ஆனந்தன்
சென்னை மாவட்டச் செயலாளர்
மக்கள் அதிகாரம்

கண்டன உரை:-

தோழர் து. ரவிச்சந்திரன்.
சென்னை மாவட்ட தலைவர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தோழர் பெரியசாமி
திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்

தோழர் சரவணன், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்
மக்கள் அதிகாரம்

தோழர் வழக்கறிஞர் ராஜு,
தலைமைக் குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

நன்றி உரை:-
தோழர் வெண்ணிலா
சென்னை மாவட்டப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
7305227416

கோவை, நீலகிரி நினைவேந்தல்

கோவை பாப்பநாயக்கன் பாளையம்

காய்கடை மைதானத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயர்நீத்த தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்வு மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ஜூலியஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில், தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி முழக்கமிடப்பட்டது.

நினைவேந்தல் உரையாக :

தோழர்.சித்தார்த்தன், மாநில பொருளாளர், ம.க.இ.க.
தோழர். ஆரோக்கியராஜ், பு.ஜ.தொ. மு.
தோழர் கணேஷ், மாவட்ட துணைச் செயலாளர், மக்கள் அதிகாரம்.
தோழர்.மூர்த்தி, மாவட்ட இணைச் செயலர், மக்கள் அதிகாரம்.

ஆகியோர் உரையாற்றினர்.

அங்கிருந்த பொதுமக்கள் பலரும் நாம் முழக்கமிட்டது தொடங்கி தோழர்கள் உரையாற்றியது வரை அனைத்தையும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தனர். தியாகிகளின் படங்களுக்கு அங்கிருந்த ஆட்டோ தொழிலாளி, பக்கத்தில் ரேஷன் கடைக்கு வந்தஒரு நபர், அருகே பூ விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணி என தாமாக முன்வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தகவல்:மக்கள் அதிகாரம்
கோவை மாவட்டம்.

நீலகிரியில் நினைவேந்தல் நிகழ்வு!

இன்று மே -22 -2025 கார்ப்பரேட் பாசிசத்தை தூத்துக்குடி, தமிழக மக்கள் போராடி உயிர்த்தியாகம் செய்து வீழ்த்திய ஏழாம் ஆண்டின் நினைவஞ்சலி நாள்…..

ஸ்டெர்லைட் பாக்டரியை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து முழுமையாக அகற்றக் கோரியும்… ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்த 15 தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க கோரியும்… துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும்…

இன்று 22.05.2025 கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் மற்றும் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

தகவல்: மக்கள் அதிகாரம்
நீலகிரி மாவட்டம்.

 

1 COMMENT

  1. வேதாந்தவை விரட்டி அடிப்போம்!ஸ்டேர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here