தமிழ்நாடு அரசே!
தூத்துக்குடியில் மூடப்பட்ட நாசகர ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று.!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்துக் கொடு!
என்ற கோரிக்கையின் அடிப்படையில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் சென்னை ,மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இன்று 22.05.2025 , காலை 10:30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்..
அதனடிப்படையில் இன்று 22.05.2025 காலை 11 மணியளவில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி மற்றும் ஆலையை நிரந்தரமாக அகற்றக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்….
மே 22 2018 அன்று “இலட்சம் பேர் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம்” ! என்கின்ற முழக்கத்தோடு அமைதி வழியில் போராடிய, உயிர் வாழும் உரிமையை கேட்ட, சொந்த நாட்டு மக்களை தூத்துக்குடி மக்களை காக்கை குருவிகள் போல சுட்டுக் கொன்ற நாள் இன்று…. அதேநேரம் மக்கள் ஒன்றுபட்டால் உழைக்கும் மக்கள் சக்தியின் முன் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையும் அதன் ஆணவத்தையும் தகர்த்தெறிய முடியும் என நிலைநாட்டப்பட்ட தியாகிகள் நாளும் கூட…
திமுக அரசு உண்மையிலேயே மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறது போராடி உயிர் நீத்த மக்கள் தரப்பில் நிற்கிறது என்றால் தாமதிக்காமல் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை தரைமட்டமாக்கும் பணிகளை துவங்க வேண்டும். களப்பலியான தியாகிகளுக்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும். அனில் அகர்வாலுடன் கைகோர்த்து நிற்கும் கார்ப்பரேட் -காவி பாசிச மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசை அம்பலப்படுத்த வேண்டும்.
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி துப்பாக்கிச் சூடு நடத்திய கிரிமினல் குற்றவாளிகளான போலீசார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
1. ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து அகற்றுவது.
2. தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைப்பது.
3. மக்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட உயர் அதிகாரிகளை உடனடியாக தண்டிப்பது.
இம்மூன்று கோரிக்கைகளை செவி சாய்த்து திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். பாஜகவை எதிர்த்து களமாடும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் ஆலையை நிரந்தரமாக மூடவும் முழுமையாக பிரித்து அகற்றவும் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மீண்டும் ஒரு போராட்டத்தை நோக்கி நாட்டு மக்கள் நகர்வார்கள் என்பதையும் தமிழ்நாடு அரசு உணர வேண்டும் சடங்குக்காக மே 22-ல் ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி கடந்து செல்லாமல் அலட்சியம் காட்டும் ஆட்சியாளர்களை எச்சரிக்கும் வகையில் உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.
முதல் நிகழ்வாக….
ஸ்டெர்லைட் போராட்டத்தி உயிர்நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்த நிகழ்வாக…ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
தலைமை : செ.கார்க்கி. மாவட்ட செயலாளர் மக்கள் அதிகாரம் திருச்சி மாவட்டம்.
கண்டன உரை ;
1. தோழர் ஜீவா, மாவட்ட செயலாளர்,மக்கள் கலை இலக்கியக் கழகம்.
2. ஐயா சின்னதுரை, தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது).
3. தோழர் சண்முகசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், திருவாரூர்.
4. தோழர் தேவா, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம், தஞ்சை மாவட்டம்.
5. தோழர் காவிரி நாடன், மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்.
6. தோழர் செழியன், மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம்.
7. தோழர் லதா, மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
8. தோழர் மணலிதாஸ், மாவட்ட இணை செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி .
9. தோழர் சந்திரமோகன், பகுதி கிளை செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
10. நன்றி உரை : தோழர் வெங்கடேஷ், மாவட்ட இணை செயலாளர், மக்கள் அதிகாரம்.
இவ்வார்ப்பட்டத்தில் தோழமை அரங்கு மற்றும் ஜனநாயக சக்திகள் என பலர் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தகவல்:
செ.கார்க்கி.
மாவட்ட செயலாளர்.
மக்கள் அதிகாரம்
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு: 72002 09689