தில்லை கோயில் தீட்சிதர் சொத்தல்ல – அரங்க கூட்டம்!

தீட்சிதர்கள் தாங்கள் மட்டுமே தில்லை கருவறையில், சிற்றம்பல மேடையில் நுழைய முடியும் என்கின்றனர்.

0

“தில்லை கோயில் தீட்சிதர் சொத்தல்ல” என்று 1885 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஐகோர்ட் கூறி 138 ஆண்டுகள் ஆகிறது.

தில்லை கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்கும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த 140 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறிவிட்டனர்; அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டுவிட்டது; சாதி, மதம், இனம், பாலினம், மொழி என அனைத்து வகையிலான தீண்டாமையும் சட்டப்படி குற்றமாக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இன்னமும் சாதி, மொழி தீண்டாமை கடைபிடித்து வருகின்றனர் தீட்சிதர்கள்! நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் தீண்டாமைச் சுவர் இன்னும் இருக்கிறது.

‘ஆகம’ கோயில்களில்கூட “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஆனால், தீட்சிதர்கள் தாங்கள் மட்டுமே தில்லை கருவறையில், சிற்றம்பல மேடையில் நுழைய முடியும் என்கின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டப்படி எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் அரசு சோதனை செய்ய அனுமதி உண்டு. ஆனால், தில்லை நடராஜர் கோயிலுக்குள் அரசு அதிகாரிகள் சோதனை செய்யக்கூடாது என கொழுப்பெடுத்துப் பேசுகின்றனர் தீட்சிதர்கள்.

இந்த போராட்டத்தில் வெல்வது எப்படி?

மக்கள் அதிகாரம் நடத்தும் அரங்குக் கூட்டத்தில் மேனாள் அறநிலையத்துறை அமைச்சர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, களத்தில் போராடியவர்கள் பேசுகிறார்கள்.

அனைவரும் வாரீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here