இந்து போலீசாக மாற்றப்பட்டு வரும் டெல்லி போலீஸின் வக்கிரம்!

இந்து போலீசாக மாற்றப்பட்டு வரும் டெல்லி போலீஸின் வக்கிரம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல நாளை அனைவர் மீதும் பாய்ந்து குதறும் என்பதே நிதர்சனம்!

0

இதுதான் இன்றைய இந்தியா!

காவி பாசிசம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. சொல்லிக் கொள்ளப்படும் ஹிந்து மதத்தில் உள்ள பெண்களை அடிமைப்படுத்தி, அவர்களை வீட்டுக்குள்ளே அடக்கி வைத்து, ஏறி மிதிக்கும் ஆணாதிக்க வக்கிரத்தையும் உள்ளடக்கியதுதான் காவிப் பாசிசம்! அதன் மறுபெயர் பார்ப்பன பயங்கரவாதம்.

வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று பச்சையாக ஆணாதிக்கத் திமிரை வெளிப்படுத்தினான் சங்கராச்சாரி. சங்கரனின் அரசியல் வாரிசு தான் ஆடிட்டர் குருமூர்த்தி.

சங்கரன் போன்ற லோக குருக்களை ஆன்மீக தலைமையாகவும், ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களை அரசியல் ஆலோசகர்களாக கொண்டு செயல்படுவதே ஆர்எஸ்எஸ்.

அவர்கள் கட்டுப்பாட்டில் பாசிச மயமாக்கப்பட்டு வரும் அதாவது இந்து போலீசாக மாற்றப்பட்டு வரும் டெல்லி போலீஸின் வக்கிரம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல நாளை அனைவர் மீதும் பாய்ந்து குதறும் என்பதே நிதர்சனம்!

ஒருபுறம் மசூதி இடிப்பு முதல் குண்டுவெடிப்புகள் வரை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றம் புரிந்தவர்கள் முதல் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தி குற்றம் புரிந்தவர்கள் வரை அனைத்திலும் நம்பர் ஒன் கிரிமினல்களாக குற்றம் சுமத்தப்பட்ட அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆயுத பாதுகாப்புடன் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் வலம் வருகிறார்கள்.

மற்றொருபுறம் ஒடுக்கப்பட்ட மக்கள், மதச் சிறுபான்மையினர், எந்த மதத்தை சார்ந்த ஆளும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அவமானப்படுத்தப்படும் இழிவுபடுத்தப்பட்டு அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள்!

பார்ப்பன மேலாதிக்கத்தை நிபந்தனையின்றி ஏற்கச் சொல்லும் சனாதன தர்மம் தான் ஆர்எஸ்எஸின் வழிகாட்டும் கொள்கை!

இதுதான் இன்றைய இந்தியா!

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here