னவரி இரண்டாம் வாரம் இலங்கை குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அரசு, பாதி – அரசு, தனியார் துறைத் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அது. அங்கே அவர் பேசியதாவது : ” நமது பொருளாதாரம் நொறுங்கிவிட்டது. இது எல்லோருக்கும் தெரியும். வேலைவாய்ப்பு குறைந்துபோய்விட்டது. கல்வி, மருத்துவம் உட்பட ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு. பணவீக்கம் எல்லோர் தலைமீதும் விழுந்துவிட்டது. மக்களின் அன்றாடச் செலவு விஷம்போல ஏறிவிட்டது. அதனால் மக்கள் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறிவிட்டது.ஆனால், எப்படியாவது ஏதாவது நிவாரணம்தர நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்…..”

இதன்பொருளென்ன ? ஒருபுறம் கைவிரிப்பு ; மறுபுறம் யாரும் நம்பவேமுடியாத அளவுக்குப் பொய்வாக்குறுதிகள் ; மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்த சமாதானத்தையே வேறு மசாலாவில் தோய்த்து பஜ்ஜி போடும் முயற்சிகளும் செய்து தோல்வி மேல் தோல்வி — படுதோல்வி.

மேலும் அவர் பேசிக்கொண்டே போனார் : ” கடன்கள் அடைப்பது பற்றி பல வழிவகைகளை, திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஜப்பானோடு பேச்சுவார்த்தை வெற்றியாக முடிந்தது. அந்த நாடு நமக்கு முதன்மையான கடன் கொடுக்கும் நாடு ; ஏற்கெனவே சீனா, இந்தியாவிடம் நிறையக் கடன் வாங்கிவிட்டோம்…..இலங்கை மட்டுமா, உலகில் இன்று ஐரோப்பா, அமெரிக்காவில்கூட பொருளாதார வளர்ச்சி மந்தமாகிவருகிறது. இதனால் இலங்கை ஏற்றுமதிச் சந்தை அடுத்த வருசம் விழத் தொடங்கிவிடும். அதைச் சரிக்கட்ட சுற்றுலாத் தொழில்துறையை விரிவாக்கப் போகிறோம்……”

அவர் சொல்லவந்ததெல்லாம் எங்களோடு கூட்டுச் சேருங்கள், எல்லாவற்றிலும் பங்கு தருகிறோம் என்பதுதான். சுரண்டல், ஊழல் எல்லாவற்றுக்கும் இப்படி உத்தரவாதம், உறுதி கேட்டார் ரணில். நாடு ஏன் அழிவுக்குப் போகிறது என்று நாட்டில் எல்லாத் தரப்பு மக்களிடமும் ஓயாமல் விவாதம் வளருகிறது, தீவிரமாகிறது. இதை எப்படியாவது மடை அடைக்கவேண்டும், நீங்களும் என்னோடு
” கள்ளக்கூட்டுச் ” சேருங்கள் என்று கூச்சநாச்சமில்லாமல், ஈவிரக்கமில்லாமல் பேரம் பேசினார் நாட்டின் முதல்குடிமகன்.

அவர் எந்த ரகசியமும் பேசவில்லை, எல்லாமே வெளிப்படைதான். அவர் பிரதிநிதிகளிடம் பேசினார் : ” பொருளாதாரம் நொறுங்கிப் போனதற்கு மூல வேர்க் காரணம் என்ன என்று இந்த நேரத்தில் அலசி ஆராய்கிறார்கள். அதில் பலனில்லை ; நடந்தவை ஏற்கெனவே நடந்துவிட்டன. நடந்தது நடந்துவிட்டது. இனி ஐ.எம்.எஃபிடம் போய்நின்றால்தான் விடிவுகாலம், நாட்டை நாம் மீட்கமுடியும்.”

இதையும் படியுங்கள்: மகிந்தவுக்கு பதிலாக ரணில் என்ற முகமூடி!

கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள். காரணம் என்ன என்று தேடாதே என்று வாய்மேலேயே போடுகிறார் ரணில். ” பழசை மற ! நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் ! ” என்கிறார் ரணில். தமிழர்களின் விவசாயிகளின் மீனவர்களின் ரத்தம் குடித்த காட்டு ஓநாய் மகிந்த ராசபக்சே மக்களிடம் கிடைத்திருந்தால் தெருவில் அடித்துக் கொன்றுபோட்டிருப்பார்கள். அந்த நாட்களில் பயண அனுமதி கொடுத்து வெளிநாட்டுக்கு ஓட அனுமதித்த, மகிந்த உசுரை மட்டுமல்ல அந்தக் குடும்பத்தையே நெருக்கடி நேரத்தில் காப்பாற்றிய கொலைகாரக் கூட்டாளி இந்த ரணில், இதை நீங்கள் மறக்கக் கூடாது. இப்படி அவர் வைக்கும் நியாயம் இனி ஏதும் வழியில்லை, யூதர்களை விஷவாயு அறைகளிலே தள்ளிக் கொன்றுவிடுங்கள் என்று சொன்ன ஹிட்லரின் ஆளும்வர்க்க நியாயம், இதையும் நீங்கள் மறக்கக்கூடாது.

“…இனி என்ன ? கீதையிலே கண்ணன் சொன்னதுபோல பழங்கணக்குப் பார்க்காதே, அது நடந்ததாகவே இருந்து தொலையட்டும், இனி நடக்கப் போவதாவது நல்லதாக நடக்கட்டும்,”என்பது ரணில் வாதம்.
ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் அவர் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் விழுந்து கும்பிடாமல் போனதேயில்லை ! கோயிலிலிருந்து அப்படியே கீதையின் உபதேசங்களைக் கடன் வாங்கி மக்களுக்குச் சொல்லி ஏமாற்ற !

அன்றாடம் செத்துவிழும் சொந்த ரத்த உறவுகள் பற்றி ஆராயாதே என்று சொல்பவன் எத்தனைக் கொடூரனாக இருப்பான் ?

யோசிக்காதே, ஆராயாதே, முரண்பாட்டைக் குடைந்து துருவாதே, மூலவேர்க் காரணம் என்ன என்று தேடி அலையாதே, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அதுஇதுவென்று மண்டையைக் கசக்கி அலசி ஆராய்ந்து தீர்வைத் தேடாதே என்கிறார் ரணில். எத்தனை வக்கிரம் ?

தூக்கி எறிந்துவிட்டு வராமல், ரணில் மற்றும் அதிகார பரிவாரங்களோடு பேசிக் குலாவுகிறார்களே இந்தத் தொழிற்சங்கப் புரோக்கர்கள், இது இலங்கை மக்களுக்குச் செய்யும் எத்தனைப் பெரிய பச்சைத் துரோகம்?

மூல வேர்க்காரணம் தேடி மூளையைத் தீட்டிக் கொந்தளிப்பதும், சிந்திப்பதும், இலங்கை வகைப் பாசிசத்தை எதிர்க்கும் திட்டத்தோடு எழுச்சியை முன்னெடுப்பதும் தானே தீர்வாக இருக்கமுடியும் ? அதுஒன்றுதானே ஒரேவழிமுறையாக இருக்கமுடியும் ? கள்ளக்கூட்டுச் சேருவதுயாருடய வேலை , எந்த வர்க்கத்தின் வேலை ?

கட்டுரைக்கு ஒட்டுவால் :


27.1.23 டைம்ஸ் நௌ மோடியின் எடுபிடி ஆள் ஒருத்தரின் கட்டுரையில், ” 2019 தேர்தல் பிரச்சாரத்தின்போதே , மோடி , ஆட்டம்போட்ட பாகிஸ்தானுக்கு உண்டான இடத்தைக் காட்டிவிட்டோம் என்று பேசினார். இன்று அது உண்மையாகிவிட்டது. பாகிஸ்தான் பிச்சைஓட்டை எடுத்துக்கொண்டு உலகம் பூரா சுற்றுகிறது ” என்று பகிடி செய்திருந்தார். ஆனால், இங்கே என்ன வாழுதாம் ? வங்கிகளில் பல லட்சம்கோடி கடன் தள்ளுபடி, அதானிக்குப் பல லட்சம்கோடி உதவி என்று வாரிஇறைக்க கஜானாவில் ஏதய்யா பணம் ? பாகிஸ்தானைக் கேலி செய்யும் மூடமந்திரியே, கடைசியில் ஐஎம்எஃபிடமும் உலகவங்கியிடமும் தானே திருவோடு ஏந்துகிறாய் ? இங்கேயே கீழே காத்தடிக்குது, உலகக் கடன் பிச்சைவரிசையில் அடுத்த ஆப்பு ஒமக்குத்தான்யா !

ஆதாரம் : NDTV ஆசிய உலகச் செய்திகள்., 15.1.2023.

ஆக்கம் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here