கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி அழைப்பு விடுத்திருந்த நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களையும் மாணவர்களையும் டெல்லி காவல்துறை, துணை ராணுவப்படை, ஆர்பிஎப், மற்றும் பாஜக குண்டர்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளது பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசு.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலையுலகைச் சார்ந்த டோவினோதாமஸ், ப்ரீத்தி ஜிந்தா, நந்திதா தாஸ், ஜெனிலியா, ஷபானா ஹாஸ்மி உட்பட பலர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் போராட்ட களத்திலேயே உள்ளார். தமிழ்நாட்டில் இயக்குனர் பா ரஞ்சித் மாணவர்களுக்கான தாக்குதலை கண்டித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல கோடிகள் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர், நடிகை கூட இதுவரை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பேசவில்லை. குறைந்தபட்சம் சமூக வலைதளங்களில் பதிவு கூட செய்யவில்லை. தற்போது தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பவரும் நடிகர் தான். மேடைகளிலும் சட்டசபைகளிலும் ஸ்கிரிப்ட் எழுதி வீரவசனம் பேசும் திரு ஜோசப் விஜய் அவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கொள்கை எதிரியை இதுவரை கண்டிக்கவில்லை.
திரு ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கட்சியின் எம்எல்ஏ-க்களோ அல்லது அமைச்சர்களோ கூட இதுவரை மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து வாய் திறக்கவில்லை. அந்த அளவுக்கு தாங்கள் யார் என்பதை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். TVK Official IT Wing என்ற பக்கத்தில் மட்டும் ‘மோதல்’ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என எழுதியுள்ளார்கள். அரச பயங்கரவாத தாக்குதலை ‘மோதல்’ என சிறுமைப்படுத்தி பாஜகவிற்கு சாமரம் வீசியுள்ளார்கள்.
நாடே பரபரப்பாகியுள்ள நிலையில் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு தவெகவினர் பிஸியாக உள்ளார்களா என தேடிப் பார்த்ததில், ஆம் அவர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்க முடிந்தது. பரபரப்பு என்றவுடன் ஏதோ அரசியல் பரபரப்பு, மக்கள் சேவை என கருத வேண்டாம் அவர்களுக்கு அதில் எல்லாம் நாட்டமில்லை.
படிக்க:
🔴 “ஜனநாயகன்” ரிலீஸ் செய்தார்களா? திருடி வெளியிடப்பட்டதா?
🔴 நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!
முதல்வரும் நடிகருமான ஜோசப் விஜய் நடித்துள்ள நடித்து சென்சார் கிடைக்காததால் வெளியாகாமல் காத்துக் கொண்டிருந்த ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23 அன்று ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே இணையத்தில் வெளியாகிய படத்தை மீண்டும் தியேட்டரில் வெளியிடுகிறார்கள். தேர்தலில் செலவு செய்த பணத்தை ரசிகர்களிடமிருந்து கறக்க வேண்டாமா?
சரி விஷயத்திற்கு வருவோம். இப்படித்தான் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறது மொத்த தவெகவும். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தேர்வு துறை அமைச்சர் விக்னேஷ் ஜனநாயகன் படம் பார்ப்பதற்காகவே லீவு போட்டேன் என்ற பேட்டி அளித்துள்ளார் “படம் பார்க்கும் 3 மணி நேரம் மட்டும் பொறுப்பை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு மீண்டும் பழைய ரசிகராக செயல்பட அனுமதி வேண்டும் என்று அவர் கிட்ட கோரிக்கை வைத்திருக்கும் இன்னும் ஒத்துக்கல” என கூறியுள்ளார். தனக்கு பிடித்த நடிகரின் படத்தை விரும்பினால் போய் பார்க்கலாம் அதனை டிவியில் பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு. இதிலிருந்தே ஜனநாயகம் படத்திற்கு பிரமோஷன் வேலை பார்க்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது.
தவெக அரசில் ஒரு அமைச்சரின் தகுதி அவ்வளவுதான். அவருக்கு மாணவர்கள் போராடினால் என்ன, காவல்துறையிடம் மிதிப்பட்டால் செத்தால் என்ன, எந்த கவலையும் இருக்கப் போவதில்லை. யாருக்கு தெரியும் ஜனநாயகம் படம் பார்ப்பதற்கு மொத்த தலைமைச் செயலகத்திற்கு லீவு விடவும் வாய்ப்பு உள்ளது
சரி அமைச்சர்கள் இப்படி என்றால் தொண்டர்கள் ரசிகர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஜனநாயகன் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்து விட்டார்களாம் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல முடியாது, இது தீய சக்திகளின் சதி என அழுது கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளம் முழுவதும் இதுபோன்ற செய்திகளையே அதிகம் பகிர்கிறார்கள். மற்றப்படி டெல்லியில் மாணவர்களின் போராட்டம் குறித்த எந்த செய்தியையும் பகிரவில்லை.
படிக்க:
🔴 நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?
🔴 தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும
இவர்களுக்கு டப் கொடுப்பது போல் தமிழ் செய்தி ஊடகங்களும் ஜனநாயகன் படத்தின் இயக்குனர் வினோத்தை பேட்டி எடுத்து ஜனநாயகன் படத்திற்கு பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறது. முதல்வர் விஜய் சிரித்தார், கையசைத்தார், க்யூட் லுக் கொடுத்தார், ஸ்டைலாக நடந்து வந்தார், ‘அவர் கையாலேயே அவர் சாப்பிடுகிறார்’ என்றெல்லாம் தரம் தாழ்ந்த செய்திகள் வெளியிடுகின்றன மீடியாக்கள்.
தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிரான களத்தில் நின்ற முதன்மையான மாநிலம். தற்போது இந்தியாவின் தலைநகர் டெல்லி நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களையும் இளைஞர்களையும் இணைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நடைபெறும் போராட்டங்களை சிதைத்து போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்துள்ளது இது விஜய் தலைமையிலான காவல்துறை.
“நீட் தேர்வுக்கு எதிராக உரிய அனுமதி பெற்று அறவழியில் மாணவர்கள் போராடினால் பிரச்னை இல்லை. தூண்டுதல் காரணமாக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் போராட்டத்தால் கைது நடவடிக்கை பாய்ந்தது”என்கிறார் கல்வி அமைச்சர் ராஜ்மோகன். ஆம் போராட தூண்டினார்கள் தான். நீட் தேர்வை கொண்டுவந்தவர்கள்; போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்தவர்கள்; அதை கண்டுக்கொள்ளாமல் சாமரம் வீசுபவர்கள் இவர்கள் தான் போராட தூண்டியுள்ளார்கள்.
ஜனநாயகம் டெல்லியில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் போராடியவர்களை கைது செய்ததன் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா என நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முக்கியமா என கைது செய்கிறது தவெக அரசு. இதுவும் மாற்றம் முன்னேற்றம்தான். இப்படித்தான் தமிழ்நாட்டில் இளைஞர்கள் கவர்ச்சி போதை கும்பலால் சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இனி தமிழ்நாட்டில் பாஜக தனது திட்டங்களை தவெக மூலம் நிறைவேற்ற போகிறது. பாசிச கும்பல் மக்களுக்கு எதிராக கொண்டுவரும் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக போராடினால் தமிழ்நாட்டில் ‘பாயாசம்’ கவர்மெண்ட் ஜனநாயக உரிமைகள் எல்லாம் இனி உங்களுக்கு இல்லை என அடக்குமுறையை செலுத்தும். அவர்களுக்கு ஜனநாயகன் படம் தான் முக்கியம். நமக்கு ஜனநாயகம் தேவை. அதற்கான போராட்டங்களை மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு செல்வோம். தமிழ்நாட்டில் மாணவர்களையும் இளைஞர்களையும் அரசியல் சக்தியாக்குவோம். அரசியலற்ற கும்பலிடமிருந்து அவர்களை மீட்போம்.
- நந்தன்








ஜனநாயகன் படத்துக்கு அனுமதி நீட்டு எதிரான போராட்டத்திற்கு தடை !
ஜனநாயகம் படம் ரிலீஸ் ரசிகர்களிடம் தேர்தலில் செலவிட்ட பணத்தை வசூல் வேட்டை
நீட் தேர்வு ரத்து செய்ய மாணவர்கள் போராடினால் மறுப்பு இந்த கட்டுரை எளிமையாக உள்ளது