CJP Protest ‘Chalo Sansad!

நீட் தேர்வு உள்ளிட்ட ஒன்றிய அரசால் நடத்தப்படும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்த சோனம் வாங்சுக் 20 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை(18 ஜூலை) வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்று மருத்துவமமனையில் அனுமதித்ததோடு யாரையும் பார்க்க அனுமதிக்காமல், மருத்துவமனையிலேயே சிறை வைத்துள்ளது பாசிச பாஜக அரசு.

இதனை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் திங்கட் கிழமை (ஜூலை 20) அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு அமைப்புகளில் இருந்து டெல்லியில் குவிந்தனர். இதனையடுத்து அவர்களை முடக்கும் விதமாக 5 இடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முடக்கியது ஒன்றிய பாஜக அரசு.

பாஜகவின் அனைத்து தடைகளையும் மீறி நாடாளுமன்றம் நோக்கிய ‘சலோ சன்சாத்’ பேரணியை இளைஞர்கள் நடத்தினர். பேரணியை கலைக்க கண்ணீர் புகைக் குண்டு வீசியும், காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியும் இளைஞர்களின் மண்டையை பிளந்தது பாஜக அரசின் அதிகார வர்க்க குண்டர் படை.

ஆனால் செய்தித் தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும் ஆளும் வர்க்க விசுவாசத்தின் காரணமாக லேசான தடியடி என்றும், காவல்துறை இளைஞர்களிடயே தள்ளுமுள்ளு என்றும் ஒளிப்பரப்புகின்றன.

அதேநேரம் மக்களுக்கு உண்மையை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் ஊடகங்களுக்கு உண்டு. விடிய விடிய நடைபெற்று வரும் போராட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், போலீஸ் துணை இராணுவப்படையின் அடக்குமுறையையும் காட்சிப்படுத்துகிறோம்.

டெல்லி காவல்துறை சீருடை அணியாமல், முகத்தை மறைத்து  தாக்குதவதை அம்பலப்படுத்தும் முகமது ஜூபைரின் பதிவு

நீட் முறைகேடுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், வாங்சுங்கிற்கு தார்மீக ஆதரவு அளித்தும் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும்  தாக்குதல்

   

“என்னை அடியுங்கள், அடித்துக் கொள்ளுங்கள் என துணிந்து நிற்கும் இளைஞர்”

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி நிறுவனர் அப்ஜி திப்கே, சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி, சமூக செயற்பாட்டாளர் சபானா ஹாஸ்மி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பயணித்த லாரியை சூழ்ந்துக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறை

நாடாளுமன்ற நுழைவாயிலில் சந்தி சிரிக்கும் ஜனநாயகம் 

கரப்பான் பூச்சிகளின் நாடாளுமன்ற முற்றுகையும், சோனம் வாங்சுக்கின் போராட்டமும்!

போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக கோவாவில் இரவில் நடைப்பெற்ற போராட்டம் 

உண்ணாவிரத போராட்டத்தை தொடருவதாக அறிவித்த சோனம் வாங்சுக்கின் கடிதம் 

இரக்கமற்ற கொடூர கும்பலின் தாக்குதல் 

மஹூவா மொய்த்ராவின் பதிவு  

“ஜே.பி. நட்டா எங்களிடம் பேசும்போது, ​​உயர்மட்டத் தலைவர்களுடன் பேசிவிட்டு எங்களிடம் திரும்பி வருவதாகக் கூறினார், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை” – CJP spokesperson Ashutosh Ranka. 

கூலிப்படைகளை கொண்டு போராடும் இளைஞர்களை தாக்கும் பாசிச பாஜக 

டெல்லி கரப்பான் பூச்சி ஜனதாவின் போராட்டக்களத்தில் போலீசார் நடத்திய தாக்குதல்..

 

போராடும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் துணைநிற்கும்!

செய்தி தொகுப்பு

  • மக்கள் அதிகாரம்
    ஊடகக்குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here