இலங்கை மக்கள் எழுச்சி!
அதிபர் கோத்தபய தப்பியோட்டம்!
மக்கள் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி மாளிகை!


லங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாதங்களாக மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது. இன்று இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே வீட்டை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டனர். இது தெரிந்த கோத்தபயா தப்பியோடினான்.

இலங்கை மக்களுக்கு என்ன தேவை என்பதை அந்த மக்கள் தீர்மானித்துக் கொள்ளும் அரசியல் உரிமைதான் நிரந்தரமானது. வெளியில் இருந்து ஆயிரம் ஆலோசனைகள் வரலாம். அதைக் கேட்டு கொண்டு 30 ஆண்டுகால தமிழ் ஈழ கோரிக்கை முடிவுக்கு சென்றதைப் போல முடித்துக் கொள்வதா? அல்லது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முற்றாக வீழ்த்தி சுயசார்பு பொருளாதாரம் கொண்ட நாட்டை உருவாக்குவதா என்பதை அந்த மக்களே தீர்மானிப்பார்கள்.

உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் தன்மைக்கேற்ப புரட்சியை முன்னெடுத்து செல்வதை பற்றி தான் மார்க்சி ஆசான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புரட்சியை ஏற்றுமதி செய்வதோ, புரட்சி பற்றி வெளியிலிருந்து வழிகாட்டுதல் கொடுப்பது மார்க்சிய லெனினியத்திற்கு விரோதமானது.

இதோ எழுந்து நிற்கும் இலங்கை மக்கள், மக்கள்
மட்டுமே மாபெரும் வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர்.

மக்கள் திரள் ஜனாதிபதி மாளிகையின் பின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறது.

வாயிலில் நிற்கும் இளைஞர் உள்ளே நுழையும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்; “உள்ளே இருந்தவர்கள் நாட்டையே திருடியிருக்கலாம். நாம் எந்தப் பொருளையும் தொடக்கூடாது. நாம் அவர்களைப் போல டொலர் திருடர்களல்ல”

ஒருவர் சொல்கிறார் “இன்று நாங்கள் சிவப்புக் கம்பளத்தில் படுத்துத் தூங்கப் போகிறோம்.”
மக்கள் ஜனாதிபதியின் நீச்சல் குளத்தில் பாய்ந்து குளிக்கின்றனர். கண்ணீர்ப்புகையில் கண்கள் கரிக்க வந்த சனம் குளிக்கட்டும்.
கால்கள் கடுக்க நடந்து வந்த சனம் ஜனாதிபதி மாளிகைக் கட்டிலில் படுத்திருக்கிறது.

மக்களே.. என் மக்களே…
நாம் தான் வரலாற்றை மாற்றும் சக்தி.

ஜனாதிபதி மாளிகைக்குள் எம்மக்கள்.

2019 ம் ஆண்டு கோட்டாபய பதவியேற்ற போது சிங்கள மக்கள் மனதிலிருந்து இந்த பிம்பத்தை அகற்ற இன்னும் இருபது ஆண்டுகளாவது ஆகுமென நினைத்தேன்.
அவர்கள் சாதாரண சிங்கள மக்கள் மனதில் கட்டமைத்திருந்த இனவாதம் அப்படி.

ஆனால் இரண்டு ஆண்டுகளில் அந்த கோட்டை வீழ்ந்தது.
90 நாட்கள் போராட்டத்தில் ராஜபக்ஷ சகோதரர்களை இலங்கை அரசியலிலிருந்து முழுமையாக அகற்றியாகிவிட்டது

மக்களே.. என் மக்களே..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here