ந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நக்சல் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் நக்சல் தொடர்பான வழக்குகளில், போலீசாருக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில், நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த இரு மாநிலங்களில் உள்ள ஹைதராபாத், குண்டூர், நெல்லூர், திருப்பதி, ஸ்ரீகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

திருப்பதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கிராந்தி குமார் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் வீடுகளிலும், என்.ஐ.ஏ., அதிரடி சோதனை நடத்தியது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இடதுசாரி பயங்கரவாத வழக்குகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்”

அதேபோல், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழக கூலிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆஜராகி வாதாடிய திருப்பதி வழக்கறிஞர் சைதன்யா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது”. என்று தினமலர் நாளேடு குதூகலத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி வருகின்ற ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார குண்டர் படை அமைப்புகளான விசுவ இந்து பரிசத், சனாதன சன்ஸ்தான், இன்னமும் பல பெயர்களில் இயங்குகின்ற ரகசிய கொலை குழுக்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் இன் தலைநகரான நாக்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

சமீபத்தில் மணிப்பூரில் பயங்கரவாத வெறியாட்டம் நடத்திய ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அரம்பை தொம்பன் அமைப்பின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தனது உணவு பழக்கத்திற்காக மாட்டுக்கறி வைத்திருந்தார்கள், மாட்டுக்கறி உண்கிறார்கள் என்பதற்காகவே பெரும்பான்மை மக்களின் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது பசு பாதுகாப்பு குண்டர் படை. இத்தகைய கொலைகார, பயங்கரவாத கும்பலின் மீது சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் நக்சல்பரி இயக்கத்தின் மீது மட்டும் தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது.

சுய நிர்ணய உரிமை கேட்டு போராடும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள போராளி குழுக்கள், காஷ்மீரில் உள்ள அமைப்புகள், நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்திய, மேல்நிலை வல்லரசுகளின் கொள்ளையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று போராடுகின்ற நக்சல்பரி இயக்கங்கள் போன்றவற்றின் மீது ஆர்எஸ்எஸ் கொண்டுள்ள வெறுப்பானது சித்தாந்த ரீதியிலான பகை உணர்ச்சி கொண்டது.

இன்று நாட்டின் மீது மறுகாலனியாக்கத்தின் தீவிர தன்மையை, திணிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத வெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது. நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கடல்வளம், காட்டுவளம் அனைத்தும் ஏகாதிபத்தியங்கள் மற்றும் தேசங்கடந்த தரகு முதலாளிகளின், கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்கு திறந்து விடப்பட்டு சூறையாடப்பட்டு வருகிறது.

இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான பழங்குடி மக்களை அவர்கள் வசிக்கின்ற காடுகள், மலைகளில் இருந்து விரட்டி அடிக்கின்ற கொடூரமும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழுது பயிரிட்டு உணவளித்து வந்த விவசாயிகளை அவர்களின் விவசாய நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கும் கொடூரமும், தன் உயிரை பணயம் வைத்து கடலில் அலைகளுக்கும், புயல்களுக்கும் நடுவில் மீன்பிடித்து நாட்டு மக்களுக்கு அளிக்கின்ற மீனவர்களை அவர்களது கடல் பரப்பிலிருந்து விரட்டி அடிக்கின்ற கொடுமையும், ஒரு நூற்றாண்டு காலம் போராடி பெற்ற பணி பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை போன்ற அனைத்தையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு அற்ப கூலிக்கு சுரண்டப்படும் கூலி அடிமைகளாக தொழிலாளி வர்க்கம் மாற்றப்படுகின்ற கொடூரத்தையும் எதிர்த்து போராடுகிறது நக்சல்பரி இயக்கம்.

சமத்துவ உரிமை கோரி போராடுகின்ற அம்பேத்கரிய இயக்கங்கள், தேசிய இனத்தின் உரிமைகளை நசுக்குகின்ற இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுகின்ற தேசிய இன உரிமை அமைப்புகள், கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் புதிய மாற்றம் ஒன்றை கோரி போராடுகின்ற நக்சல்பரி இயக்கங்களை பயங்கரவாத, தீவிரவாத பீதியூட்டி ஒழிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சி என்ற போர் தந்திரத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான செயல்தந்திரங்களை வகுத்து முன்னேறுவதில் நக்சல் குழுக்கள் மத்தியில் குறைபாடுகளும், திசைவழி தவறுகளும் இருப்பினும், நாட்டை புரட்சிகர பாதையில் தான் விடுவிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் போராடுகின்றனர். நாட்டு மக்களின் உண்மையான விடுதலைக்காக. பல்வேறு அடக்குமுறைகளையும், உயிர் தியாகங்களையும் எதிர்கொண்டு கம்யூனிச சித்தாந்தத்தின் கீழ் உறுதியாகப் போராடி வருகிறது நக்சல்பரி இயக்கம்.

இதையும் படியுங்கள்:

இத்தகைய இயக்கங்களின் மீது அரசு பயங்கரவாத ஒடுக்குமுறை ஏவப்படும் போதும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் என்கவுன்டர்கள் நடத்தி படுகொலை செய்யும்போதும், அதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற மனித உரிமை அமைப்புகள், நீதிமன்றங்களில் சட்டரீதியான உரிமைகளுக்கு போராடுகின்ற வழக்கறிஞர்கள், செய்திகளை வெளியில் கொண்டு செல்லும் ஊடகவியலாளர்கள் மீது ஒருங்கிணைந்த முறையில் தாக்குதல் தொடுப்பதன் மூலம் அச்சுறுத்தி அவர்களை பின்னடைய செய்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் அதன் ஏவல் படையான NIA..

அதுவும் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தாத தெலுங்கானா, மற்றும் ஆந்திராவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியதன் மூலம் அந்த மாநில அரசுகள் நக்சல்களை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை, தாங்கள்தான் அக்கறையுடன் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

“வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று அச்சத்துடன், காரியவாதமாகவும், சுயநலமாகவும் வாழ்கின்ற அற்ப வாழ்க்கையை தூக்கியெறிந்து, நாட்டுப்பற்றுடன் கம்யூனிச லட்சியத்தில் உறுதியுடன் போராடுகின்ற நக்சல்பரி இயக்க தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படுகின்ற, தேடுதல் வேட்டை என்ற அரசு பயங்கரவாத ஒடுக்கு முறையை எதிர்த்து குரல் கொடுப்போம்.

நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையான எதிரிகளான ஆர்எஸ்எஸ் என்கின்ற பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்பை தடை செய்ய  போராடுவதும், NIA என்ற கொலைகார படையை கலைக்க கோரி போராடுவோம்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here