பார்ப்பன பயங்கரவாதி துக்ளக் குருமூர்த்தியை
நாடு கடத்து!
கடைந்தெடுத்த கம்யூனிச விரோதியும் ஆர்எஸ்எஸ் கும்பலை தமிழகத்தில் வளர்ப்பதற்கு பல்வேறு கீழ்த்தரமான உள்ளடி வேலைகளை செய்து வந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி, இறந்த பிறகு துக்ளக் பத்திரிக்கை நடத்தி வரும் எஸ்.குருமூர்த்தி என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி அவ்வப்போது தமிழர்களுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் தனது வாய்க்கு வந்தபடி வக்கிரத்தை காட்டிக் கொண்டிருந்தார்.
அந்த வரிசையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கொச்சைப்படுத்தி ’தண்டச்சோறு தின்பவர்கள்’ என்பதைப் போலவும், ’சோத்துக்காக போராட்டம்’ நடத்தியவர்கள் என்பதைப் போலவும் எழுதியும், துக்ளக் இதழின் அட்டையில் கருத்துப் படம் வெளியிட்டு இருப்பதன் மூலம் தனது பார்ப்பன சாதி திமிரையும், கொழுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் கிச்சன் கேபினட் என்று அழைக்கப்பட்ட ’சதியாலோசனை கும்பலில்’ முக்கியமானவர்கள் துக்ளக் சோ, குருமூர்த்தி, சங்கராச்சாரி, வெங்கட்ராமன், டி.என். சேஷன் உள்ளிட்ட பார்ப்பன கும்பல். இதில் பிறரது நடவடிக்கைகள் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓரளவிற்கு வெளியில் தெரிந்தது. ஆனால் ’ஆடிட்டர்’ குருமூர்த்தியின் நடவடிக்கைகள் ஜெயலலிதா இறந்த பிறகே வெளிவரத் துவங்கியது..
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களில் தலையிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு ஆரிய-பார்ப்பன நச்சுப்பாம்பு. தமிழ்நாட்டை பார்ப்பன நாடாக்க சதி செய்த பார்ப்பன மும்மூர்த்திகளான சங்கராச்சாரி, வெங்கட்ராமன் உடன் இணைந்து முக்கிய பங்காற்றியவர் தான் இந்த குருமூர்த்தி. மன்னார்குடி மாபியா கும்பல் பிடிக்குள் சிக்கியிருந்த ஜெயலலிதாவை அவர்களிடம் இருந்து மீட்டு, பார்ப்பனக் கும்பல் தமது பிடிக்குள் கொண்டுவர எத்தனித்தது.
இந்த சதி வேலையை 2011 ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி மூலம் அவரது நட்பு வட்டத்தில் இருந்த தெகல்கா பத்திரிக்கை மற்றும் அதனுடன் சுற்றிக்கொண்டிருந்த துக்ளக் சோ இவர்களைக் கொண்டு ரகசிய தொடர்புகளின் மூலம் அரங்கேற்ற துவங்கியது. இதன் மூலம் போயஸ் கார்டனை கைப்பற்ற முயற்சி செய்தது.
உளவுத்துறை மூலம் சசிகலாவிற்கு நெருக்கடி கொடுத்து போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றுவதற்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து விட்டதாக பிப்ரவரி 4, 2012 ஆம் ஆண்டு டெகல்கா பத்திரிக்கையில் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டது. இதன் மூலம் ஜெயா-சசி இருவருக்குள் இருந்த ’நட்புறவை’ பிரிக்க வேலை செய்தது. போயஸ்கார்டனில் சமையல் வேலை செய்பவர் முதல் ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர் வரை அனைவரும் குஜராத் மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வேலையில் அமர்த்தப்பட்டனர்.
ஜெயலலிதாவின் கிச்சன் கேபினட்டுகளில் முக்கியமானவரான ’நேபாள் புகழ்’ நடுளவால் சங்கராச்சாரி உடன் சொத்துக்களை அமுக்குவதில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் மீது பதிலடி கொடுக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் சங்கராச்சாரி மீது பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய சங்கரராமனை, 2004-ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராசர் கோவிலில் கூலிப்படை மூலம் போட்டு தள்ளினார் நடுளவால். சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி மீது போலீசு கண்காணிப்பாளர். பிரேம்குமார் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்தது ஜெயலலிதா அரசு. அதுமட்டுமின்றி ’தெய்வாதீனம் ஜகத்சர்வம்’ என்று கொட்டமடித்து வந்த லோக குரு சங்கராச்சாரியை காராக்கிரகத்தில் தள்ளி பாடம் புகட்டியது.
இவ்வாறு சங்கரராமன் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுத் துறை சூப்பிரண்ட் பிரேம்குமார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஆடிட்டர் குருமூர்த்தி வழக்கை திசை திருப்புவதற்காக உண்மைக்கு மாறாக பல்வேறு பொய் செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தார். இதனால் இவர் மீது பிணையில் வரமுடியாத படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மும்பைக்கு ஓடி ஒளிந்து கொண்ட சூரப்புலியான குருமூர்த்தி ஆர்எஸ்எஸ் உடன் தனக்கிருந்த செல்வாக்கையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி வழக்கை புதுச்சேரிக்கு மாற்றி தப்பித்துக் கொண்டார். துக்ளக் சோ மறைவுக்குப் பிறகு அந்த இதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாத நச்சுக் கருத்துக்களை தமிழர்கள் மத்தியில் விதைத்து வருகிறார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்ததை ஒட்டி சிலர் மீது ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டணி நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கையை விமர்சித்து ”ஓபிஎஸ் இப்பிஎஸ் ஆகிய பலவீனமான நபர்கள் 6 மாதங்கள் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் ஆண்மையற்ற தலைவர்கள் அவர்கள்“ என்று விமர்சித்தார். அவ்வாறு பேசியதற்கு Impotent என்றால் ஆண்மையற்றவர்கள் என்று பொருளில்லை, திறன் அற்றவர்கள் என்று அர்த்தம் என்ற புதிய விளக்கத்தை அளித்தார்..அதுமட்டுமின்றி இவ்வாறு தான் கூறியது அரசியல் ரீதியாகத்தான் என்றும் மழுப்பலாக பதில் கூறினார்.
இதுபோன்ற நாகரீகமான வார்த்தைகளை குருமூர்த்தி பேசுவதை இரட்டை அர்த்தக் காமெடியனான, எஸ்.வி சேகர் என்ற சின்ன அம்பியாலேயே சகித்துக்கொள்ள முடியவில்லை ”மகா பெரியவா படத்தை புரொபைல் பிக்சராக வைத்துக்கொண்டு இப்படி பேசுறேளே, உம்ம முகத்தை போட்டு பேச வேண்டியது தானே“ என்று புலம்பினார்..
துக்ளக் பத்திரிக்கையில் சோவுக்கு பிறகு இவர் ஆசிரியர் பொறுப்பை ஏற்பதற்கு அவரது சித்து வேலைகளே காரணம் என்று சிலர் வசை பாடினர். அதனால் ”1988ஆம் ஆண்டில் ராம்நாத் கோயங்கா, ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து துக்ளக்கை பேச்சுவார்த்தை நடத்தி வாங்குமாறு எனக்கு அறிவுறுத்தினார். நான் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். துக்ளக் இதழின் 50% பங்கு வாங்கப்பட்டது.
இராம்நாத் கோயாங்கா, நான் ஆடிட்டர் (சிஏ) என்பதால் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருக்க முடியாது என்கிற காரணத்தினால் என் மனைவியை சோவுடன் ஒரு கூட்டாளியாக மாற்றினார். என் மனைவி 1991-இல் இந்த நிறுவனத்தின் பங்கு தாரர் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த சமயத்தில் இருந்து தான் சோ என்னை தமிழில் எழுத ஊக்குவித்தார்.
என்னை தமிழ் பத்திரிக்கைக்கு உலகிற்கும் அறிமுகப்படுத்தினார். நான் துக்ளக் குழுமத்தில் நுழைந்தேன். சோவும், நானும் பல்வேறு அரசியல் உத்திகளில் இணைந்துப் பணியாற்றினோம்.. 2007 ஆம் ஆண்டு நான்தான் துக்ளக்கில் அவரது வாரிசாக வேண்டும் என்று சோ வலியுறுத்தினார் ஆனால் நான் அதனை மறுத்து வந்தேன். குறிப்பாக அதன்பிறகு யாரும் பத்திரிக்கையை வாங்க மாட்டார்கள் எனவே அதை மூடுவது நல்லது என்று நான் பதில் சொன்னேன்.
நான் அவருடைய வாரிசாக இருக்க விரும்பவில்லை என்றாலும் அப்போது சோவுக்கு சொந்தமான NPPL நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை ஆவது வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே 2008-ஆம் ஆண்டில் நான் NPPL நிறுவனத்தில் 50 சதவீத மூலதனத்தை முதலீடு செய்தேன்.
அவர் இறந்த பிறகு துக்ளக் குழுமத்தில், மொத்தக் குழுவும் என்னை வலியுறுத்தியதால் சோவுக்கு பிறகு துக்ளக் இதழை நான் நடத்த வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் தமிழகம் மிகப்பெரும் அரசியல் மாற்றங்களை கண்டு கொண்டிருந்ததால் நான் அதில் இணைந்து ஆசிரியராக பணியாற்ற துவங்கினேன். 1986 முதல் துக்ளக்கில் எழுதத் தொடங்கியபோது ஒரு ரூபாய் கூட பெறாமல் எழுதினேன், தற்போது எனது நேரத்தில் 50 சதவீதத்தை துக்ளக்கிற்கு ஒதுக்குகிறேன். ஆனாலும் இப்போதும் ஒரு பைசா கூட வாங்கவில்லை எனவே நான் துக்ளக்கை கைப்பற்ற வில்லை“ என்று போகிறது அவரது சுயபுராணம்.
துக்ளக் சோ பல்வேறு பார்ப்பன கம்பெனிகளில் பங்குதாரராக இருந்த காரியக் கோமாளி. அவர் இந்த ’ஆரிய மலத்தை’ நம் தலையில் கட்டி விட்டு போனார். அந்த கிரகச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் அரைவேக்காட்டு அரசியல் பேர்வழிகளின் ஆதர்ச பத்திரிகையான துக்ளக் மூலம் தமிழகத்தின் அரசியலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளே புகுந்து பல சித்து வேலைகளைச் செய்து வருகிறார்.
அதில் பிரபலமான ஒன்று, ஆன்மீக அரசியல்வாதியான ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் ஆக்க முயற்சி செய்தது. அரசியல் ஞானியான குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கூலிப்படையில் இருந்துக் கொண்டு தமிழகத்தில் அவ்வப்போது அரசியல் வாய்ஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் ரஜினியை தமிழகத்தின் முதல்வராக ஆக்கினால் தான் தமிழ்நாடு உருப்படும் என்று திருவாய் மலர்ந்தார். ’அய்யங்கார் வீட்டு அழகில் சொக்கிய’ ரஜினியே முதல்வர் பதவி என்ற இந்த டிவிஸ்டை எதிர்பார்க்காமல், புழுவைப்போல் நெளிந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று அதிமுகவிற்கு மேலே நின்று வழிகாட்டினார். ஓபிஎஸ் இபிஎஸ் இருவரைப் பற்றி பொது மேடையிலேயே “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட இக்கட்டான சமயத்தில் தமிழகத்திற்கு திசை காட்டியது நான் தான், சசிகலாவை முதல்வராக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது ஓபிஎஸ் என்னை சந்தித்து புலம்பினார். அவரிடம் நான் பேசிய விதம் குறித்து இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது. அவரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்தேன்” என்று தனது மறைமுக அதிகாரத்தை போட்டு உடைத்தார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பாஜக அரசின் கைக்கூலிகளாக தமிழகத்தை ஆண்ட ஓபிஎஸ் – இபிஎஸ் இரட்டையருக்கு நிழல் முதல்வரை போல செயல்படுகிறார் என்ற செய்திகள் வெளியானது.
2021 ஜனவரியில் துக்ளக் இதழின் 51 வது ஆண்டு விழாவில் பேசிய பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா “தமிழகத்திலும் தாமரை மலரும் இந்த மண்ணையும் மாற்ற நாங்கள் விரும்புகிறோம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியை தக்க வைத்திருப்பது பழனிச்சாமியின் ஆளுமையை காட்டுகிறது. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார்.
அதுமட்டுமின்றி “தமிழகத்தில் பல்வேறு துறையினர் பாஜகவில் இணைகிறார்கள். எனவே விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும்“ என்று நாக்கில் எச்சில் ஒழுக ஜேபி நட்டா பேசினார். இதில் பேசிய ஆடிட்டர். குருமூர்த்தி “திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால், சசிகலா போன்றோரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்று ஆலோசனை கூறினார். அதாவது “தீப்பற்றி எரியும் போது கங்கையிலிருந்து நீர் வரும் வரை காத்திராமல் சாக்கடை நீரை கொண்டு அணைக்க வேண்டும்” என்று சசிகலாவை சாக்கடை என்பதைப்போல வர்ணித்து திருவாய் மலர்ந்தார்
துக்ளக் இதழில் 51 வது ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, “உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யார் மூலமாவது யார் காலையோ பிடித்துதான் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று நாக்கை சுழற்றினார். சென்னையில் ஒரு மருத்துவமனை திறப்பு விழாவின் போது “இந்தியாவில் 30% பெண்கள்தான், பெண் தன்மையுடையவர்கள்” என்று ஆணாதிக்க திமிருடன் பேசி பெண்கள் அமைப்புகளினால் கடுமையாக விமர்சிக்கபட்டவர். இவரையும் அரசியல் அனாமதேயமான சுப்பிரமணிய சாமியையும் நாட்டுக்குள் விட்டு வைக்க கூடாது.
இந்த குருமூர்த்தி சுதேசி விழிப்புணர்வு இயக்கம் என்ற ஆர்எஸ்எஸ் கும்பலின் பினாமி அமைப்பில் தேசிய இணை அமைப்பாளர் என்ற பொறுப்பில் செயல்படுகிறார். ஏகாதிபத்திய முதலாளித்துவம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை இந்தியாவின் மீது திணித்த போது, ஆர்தர் டங்கல் தயாரித்த டங்கல் அறிக்கைக்கு (Ghost of Dunkel) நிழலாக இருந்து செயல்பட்டவர் இந்த குருமூர்த்தி என்று 90-களில் இவரது முகத்திரையை கிழித்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து எழுதி வரும் குருமூர்த்தி, ஆர்எஸ்எஸ் நிறுவத்துடிக்கும் பார்ப்பனப் பேரரசின் ஆசிபெற்ற அரசியல் தரகர். இதுபோன்ற பார்ப்பனத் திமிர் எடுத்த கழிசடைகள் தமிழகத்தைப் பற்றி அவ்வப்போது பேசுவதும், தமிழக அரசியலுக்கு பாஜகவை கொண்டுவருவதற்கு பல்வேறு தகிடுதத்த வேலைகளை செய்வதையும் இத்தனை நாள் நாம் அனுமதித்துக் கொண்டிருந்ததே தவறு.
ஒராண்டுகாலம் பனியிலும், மழையிலும் குடும்பத்தை விட்டுவிட்டு, இந்திய விவசாயத்தை காக்க போராடிய விவசாயிகளை இழிவுபடுத்தி துக்ளக் வார இதழில் அட்டைப்படத்தில் போட்டுள்ள குருமூர்த்தியின் அடாவடிகளை பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் சகித்துக் கொள்ளக் கூடாது. பாசிச வக்கிர பேர்வழிகளை பேச அனுமதிக்கவும் கூடாது.
பிரம்மனின் ’முகத்தில் பிறந்த’ காரணத்தினால் இவர்களுக்கு மட்டும் யாரையும் விமர்சிக்கின்ற ஜனநாயக உரிமை வழங்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் தனது கருத்துகளை வெளியிடுவதற்கும் எந்தவிதமான உரிமையும் வழங்கப்படுவதில்லை வாட்ஸ்அப், முகநூல் பக்கங்களில் எழுதினால் கூட சைபர் என்று உளவாளிகளை வைத்து கருத்துகளை முடக்குகிறார்கள்
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் என்பதாலேயே தனக்கு எல்லாவற்றுக்கும் மேலே நின்று கருத்து கூறுவதற்கு உரிமை உண்டு என்று கொட்டம் அடிக்கின்ற குருமூர்த்தியை இந்தியாவிற்குள் விட்டு வைப்பதே ஆபத்தாகும். எனவே இவர்களின் மூதாதையர்களான சாவர்க்கர் போன்றவர்கள் வாடியதாக கூறப்படும் அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதாவது இந்தியாவை விட்டு நாடு கடத்தி, நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் சரியான முன்மொழிதலாக இருக்க முடியும். அவரது அடிப்பொடிகளை அடுத்தடுத்து அங்கு அனுப்பி சிரமப் பரிகாரம் மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
04-12-2021. சண். வீரபாண்டியன்.