லக வரலாற்றிலேயே முதல் முறையாக யாரும் கேள்வி கேட்க அனுமதி இல்லாத பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய மோடி “மணிப்பூரின் மகள்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மன்னிக்க மாட்டோம், குற்றவாளிகள் அனைவரையும் தண்டிப்போம், இச்சம்பவம் 140 கோடி இந்தியர்களுக்கும் அவமானம்” என்று  தனது திருவாய்    மலர்ந்தருளியுள்ளார். மணிப்பூரில் நடத்தப்பட்டுவரும் இத்தகைய கொடூரங்கள் நிச்சயம் அவமானகரமானதுதான், ஆனால் யாருக்காம்?

பா.ஜ.க.-வின் IT wing-ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு போலி வீடியோவை  முட்டாள்தனமாக நம்பி இதுநாள்வரை தனது தாயாகவும் சகோதரியாகவும் பழகிய பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூளைச்சுமை சங்கிகள் அவமானப்படமாட்டார்கள்.

மதவெறி சங்கிகளால் வீடுகள் எரிக்கப்பட்டு அடைக்கலம் தேடிய பெண்களை தமது வண்டியில் ஏற்றி பின்னர் கலவர சங்கிகளிடமே மீண்டும் அப்பெண்களை ஒப்படைத்த மணிப்பூர் மாநில காவல்துறை அவமானப்படாது.

நேற்றுவரைக்கும் உத்திரப்பிரதேசத்தில் ஒரு பாகிஸ்தான் பெண்ணை  புலனாய்வு செய்து கொண்டிருந்த ஊடகங்கள் மணிப்பூரில் இப்போதுதான் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளில் ஒரே ஒருவனை அரசு கைது செய்துவிட்டது அதுவும் 48 மணி நேரத்தில் கைது செய்துவிட்டது என்று நடந்தது ஏதோ ஒரு விபத்துபோல நாடகமாடும் செய்தி ஊடகங்கள் அவமானப்படாது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு “நாங்கள் மூன்று முறை கடிதம் எழுதி விட்டோம்” என்று  பொறுப்புத்துறக்கும் தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவி ரேகாசர்மா அவமானப்படமாட்டார்.

நூற்றுக்கணக்கான வீடியோக்கள் மிச்சம் இருக்கையில் இந்த ஒரே ஒரு வீடியோவுக்கே ராஜினாமாவைக் கோரினால் எப்படி என்று போராட்டத்திற்கு எதிர்போராட்டம் அறிவித்திருக்கும், பழங்குடியினர் மீதான இனப்படுகொலையை முன்னின்று நடத்தும் மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் அவமானப்படமாட்டார்.

இதையும் படியுங்கள்: மணிப்பூர்: மனிதத் தன்மையே இல்லாத 56 இன்ச்!

மணிப்பூரில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் கொடூரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமாறு எதிர்க்கட்சிகள் கூறியபோது  கண்டிப்பாக விவாதம் நடத்த வேண்டும் ஆனால் பிரதமர் பேசமாட்டார். மணிப்பூர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை என்று எதிர்க்கட்சிகள் மீதே தட்டை திருப்பிப்போடும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவமானப்படமாட்டார்.

எந்த ஒரு கலவரத்தையும் 48 மணி நேரத்தில் கட்டுக்குக் கொண்டுவரக்கூடிய திறன் இருந்தும் மூன்று மாதமாக ஒரு கலவரம் நடக்கும் என்றால் அது முற்றிலும் அரசால் திட்டமிட்டு நடத்தப்படுவது. அதற்கு பொறுப்பேற்க வேண்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமானப்படமாட்டார்.

எதிர்க்கட்சியில் ஆளும் மாநிலத்தில் போட்டி அரசாங்கம் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர்கள்  மத்தியில் தனது மாநிலத்தில் மூன்று மாதமாக நடக்கும் கலவரம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் தராத ஆளுநர் அவமானப்படமாட்டார்.

தன் சகமனிதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை என்று உணராமல் “அவர்கள் பர்மாவில் இருந்து வந்தவர்கள், கஞ்சா வளர்ப்பவர்கள்” என்று கதைக்கும்; பக்கத்து மாநிலத்தில் இருப்பவனெல்லாம் சும்மா இருக்கிறான் நீங்க ஏண்டா குதிக்கிறீர்கள்” என்றும் ஏகடியம் பேசும் அறிவுஜீவி சங்கிகள் அவமானப்படமாட்டார்கள்.

ரயிலுக்கு கொடியசைக்க மாநிலம் மாநிலமாகவும், கட்சியின் புரவலர்களுக்கு புரோக்கர் வேலை செய்ய நாடுநாடாகவும் சுற்றும் “விசுவகுரு” எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பயந்து பத்திரிகையாளர்களைக் கூட்டி நாடகமாடுவதற்காக அவமானப்படமாட்டார்.

இதையும் படியுங்கள்: மணிப்பூர் பாலியல் வன்முறை! ஆர்எஸ்எஸ் பாஜக காரனை நடமாட விடாதே!

ஒரு பழங்குடியின பெண்ணாக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்தும் தன் சகபழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டும் காணாததுபோல் கள்ளமௌனம் காக்கும் ஜனாதிபதி அவமானப்படமாட்டார்.

பழங்குடியின ஆண்மீது ஒரு பிராமணன் மூத்திரம் பெய்யக்கூட சுதந்திரம் இல்லையா? என்று இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை இழிபிறவிகளாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் நடத்தும் இந்துமதத்தின் காவலர்கள் அவமானப்படமாட்டார்கள்.

இறுதியாக  மனிதகுல விரோதிகளான பா.ஜ.க.-வுக்கு ஓட்டுப்போட்டு பாசிஸ்டுகளை பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் மதத்தால் மூளை மழுங்கிய மூடர்கள் அவமானப்படமாட்டார்கள்.

அனைத்துக்கும் மேலாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் உட்கார்ந்து கொண்டு  மண்ணின் மைந்தர்கள் மீதான இத்தகைய கொடூரங்களை நிறுத்தி நிதானமாக எந்த தகவலும் வெளியே கசியாமல் ரசித்து ரசித்து அரங்கேற்றும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் அவமானப்படாது.

இதையும் படியுங்கள்: மணிப்பூர் கலவரம்: பாசிஸ்டுகளுக்கு வாய்ப்பளித்ததால் வந்த வினை!

ஆனால் 140 கோடி இந்தியர்களுக்கும் அவமானம் என்று உன் பாசிச கும்பலின் ஜென்ம விரோதிகளான எங்களையும் ஏன் உன்னோடு சேர்த்துக் கொள்கிறாய்?

மனிதகுல விரோதிகளான உங்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே நாள்தோறும் சிந்தித்து செயல்பட்டுவரும் எங்களையும் எப்படி உன்னோடு கூட்டுசேர்த்துவாய்?

உன் கும்பலின் கதை முடிக்கக்காத்திருக்கும் நாங்கள் ஏன் நீ செய்த பாவங்களுக்கு சிலுவை சுமக்க வேண்டும்?

உன் நாடகத்தை பார்த்து உலகமே உன் முகத்தில் காரித்துப்பும்போது நாங்களும் ஏன் துடைத்துக் கொள்ள வேண்டும்?

சரி அதெல்லாம் இருக்கட்டும், மானமுள்ளவன் அவமானத்தை பற்றி பேசலாம் மானமற்றவன் பேசலாமா?

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here