ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் பதிலடி கொடுப்போம்!

அகிம்சை வழிப் போராட்டங்களும், சட்டபூர்வமான வழிமுறைகளின் மூலம் பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஒருபோதும் நடக்காது.

0

இதுதான் இன்றைய இந்தியா!

ர்நாடகத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள ஆர் எஸ் எஸ் மதவெறியர்கள் தனக்கு எதிராக விமர்சிப்பவர்களை சனாதன் சன்ஸ்தா மூலம் தீர்த்துக் கட்டுகிறது.
சட்டரீதியாக போராடுபவர்களை குண்டர் படை நேரடியாக களத்தில் இறங்கி அடித்து துவைக்கிறது.

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னால் அமைதியானவர்களைப்போல பல்வேறு கவர்ச்சி வாத வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைக் கைப்பற்றுவது, அதன்பிறகு தனது நிழல் படை கொண்டு எதிர்ப்பாளர்களை கொன்று குவிப்பது அல்லது நசுக்குவது என்றே கையாள்கிறது.

இதன் அனுபவத்தில் நாம் உணர வேண்டியது என்ன? அகிம்சை வழிப் போராட்டங்களும், சட்டபூர்வமான வழிமுறைகளின் மூலம் பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஒருபோதும் நடக்காது. அவர்களுக்கு புரிகின்ற மொழியில் பதிலடி கொடுப்பது மட்டும் தான் தீர்வு என்பதையே நமக்கு உணர்த்துகிறது.

இன்னமும் நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாகவும், பாசிசம் அதிகாரத்திற்கு வரவில்லை என்பதாகாவுகவும், அரசியல் சட்டத்தின் துணைகொண்டு பாசிசத்தை ஒழித்துவிடலாம் என்பவர்கள் ஒரு புறமாகவும் இதையெல்லாம் கால் தூசுக்கு போட்டு துவைத்து தனது பயங்கரவாத நடைமுறைகளை கையாளுகின்ற ஆர்எஸ்எஸ் மறுபுறம் பீடுநடை போடுகிறது என்ற நிலைமையையும் கொண்டது தான் இன்றைய இந்தியாவாக உள்ளது.

  • இரா கபிலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here