விரைவில் வெயில்
அடிக்கும்…

“விரைவில் வெயில் அடிக்கும்.
மொக்குகள் மலரும். பனிக் காலத்தின் கடைசிச்
சுவடுகளை வாழ்க்கையே துடைப்பம்
போலத் துடைத்து ஒழித்துவிடும்.”

அனயீதாவுக்குக் கடிதம்

9 மே 1917

….அன்பார்ந்த அனயீதா,

மனம் சோர்ந்திருக்கும் போதுதான் நான் வழக்கமாக உனக்கு எழுதுகிறேன். இப்போதும் என் மனம் சோர்ந்திருக்கிறது. ஆயினும், வேலை எனக்கு மிகப் பெரிய மன நிறைவு அளிப்பது, ஆறுதல் அளிக்கும் மருந்து. நான் மிக நிறைய வேலை செய்கி றேன் – பிரச்சாரம் என்ற அர்த்தத்தில். பண்படாத பொருள் என்னுடைய கைகளின் உதவியால் உணர்வுள்ள தொழிலாளியாக உருவாகும் போது, அவனுக்குள் வர்க்கத் தன்னுணர்வை நான் தூண்டி எழுப்பும் போது… எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது என் ஆற்றல்கள் அதிகரிக்கின்றன. அப்போது நான் உயிருள்ள நபர். என் மனச் சோர்வு அகன்று விடுகிறது. நான் உற்சாகமாக வேலையில் முனைகிறேன். நிறையப் படிக்கவும், வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ளவும். (இது இல்லா விட்டால் வேலை சரியாக வாய்ப்பதில்லை), என் தோழர் களுடன் உல்லாசமாக அளவளாவுவதை விட்டுவிட்டு ஆழ்ந்து கற்கவும் இந்த உணர்வு எனக்கு உதவுகிறது. இரகசிய நட வடிக்கைக் காலத்திலேயே என் வேலை பயன்பட்டது. இப் போது நான் தேர்ச்சி பெற்று விட்டேன், என்னால் இப்போது வேலை செய்ய முடியும் என்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது, தெரியுமா! ”நமக்கு”, போல்ஷ்விக்குகளுக்கு எதிராய் இருக்கும் எல்லோருடனும் நிறையப் போராட வேண்டி இருக்கிறது…இப்போது போய் இரண்டு தொழிற்சாலைகளுக்கு வேண்டிய நூல்களின் பட்டியல்கள் தயாரித்து விலைக்கு வாங்கு வேன். பின்பு வீட்டுக்கு வந்து சமூக – ஜனநாயகவாத மாதரின் வகுப்பு வேலையில் ஈடுபடுவேன்… அனயீதா, தொழிலாளர்களிடம் எவ்வளவு ஆற்றலும் திறமைகளும் மறைந்திருக்கின் றன?… எல்லாக் கல்லூரி மாணவிகளையும் போல நான் மன நெகிழ்ச்சிக்கு ஆளாகி விட்டேன் என்றும் ”ஏழைத் தொழிலாளர் கள் பற்றிக் கண்களில் நீர் மல்கப் பேசுகிறேன் என்றும் நீ நினைக்கிறாய் போலும். இல்லை, எனக்கும் இதற்கும் வெகு தூரம். முன்பே, வேலையில் அவர்களை நான் அறிந்திருந்தேன். இப்போது அவர்களை நன்றாக அறிவேன். தொழிலாளி வர்க்கம் வருங்காலத்தை உரிமையாகப் பெற்றுள்ள வர்க்கம். இப்போது தான் வளர்ச்சி பெறத் தொடங்கி இருக்கும் வர்க்கம். அதன் ஆற்றல்கள் விழிப்படைந்து வருகின்றன. இந்த வர்க்கத்தின் மேம்பாட்டை அவர்கள் (தொழிலாளர்கள்) பெற்றிருக்கிறார்கள்.

… என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நான் உறுதி யுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். எனக்குள் நிறைய மாறு தல்கள் நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. பரவாயில்லை. இன்னும் நிறைய மாற வேண்டி இருக்கும். இப்போது மிகக் கடுங்குளிரில் வெளியே போக வேண்டும்… ஆலங் கட்டிகள் ஜன்னலில் படபடக்கின்றன. கண்ணாடியில் அடித்து ஏக்க முள்ள, காட்டுத்தனமான, ஆனால் உயிரோட்டம் நிறைந்த பாட்டை இசைக்கின்றன. சாம்பல் நிற வானம் இரங்கத்தக்கதாக, தனிமையானதாகத் தோற்றம் அளிக்கிறது. ஆனால் விரைவில் வெயில் அடிக்கும். மொக்குகள் மலரும். பனிக்காலத்தின் கடைசிச் சுவடுகளை வாழ்க்கையே துடைப்பம் போலத் துடைத்து ஒழித்து விடும். உன்னை ஆரத் தழுதி முத்தம் இடுகிறேன்.

லியூஸிக்

                    அனயீதா, நான் நிறை வாழ்வு வாழ்கிறேன் என்பதை நினைவில் இருத்திக் கொள்.

முற்றும்.

அன்பான வாசகர்களே! கடந்த 10 நாட்களாக புரட்சியில் இளைஞர்கள் நூல் தொடராக வெளிவந்துள்ளது. இன்றோடு நிறைவடைகிறது.
புரட்சி சமூக மாற்றம் என்பதை ஒரு கனவாக கொண்டு செயல்படும் அல்லது செயல்பட முன்வரும் இளம் கம்யூனிஸ்டுகளுக்கு இந்த நூல் ஓர் சிறந்த முன்மாதிரி வாழ்க்கையில் ஏற்படும் அற்ப காரணங்களுக்காக தனது லட்சியத்தை கைவிட்டு புறமுதுகு காட்டும் குட்டி முதலாளித்துவ அற்ப வாதிகளின் பலவிதமான ஊசலாட்டங்களை இடித்துரைக்கிறது இந்த நூல்.

அந்த வகையில் தங்களுக்கு எங்ஙனம் பயனுள்ளதாய் இருந்தது என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கருத்துகளாய் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

முழுவதுமாக படிக்க கீழே உள்ள நிங்கை கிளிக் செய்யவும்:

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 1

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 2

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 3

புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 4

புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 5

புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 6

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 7

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 8

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here