போதனையும், பயிற்சியும் கல்வியும் பள்ளியில் மட்டுமே புகட்டப் பெற்று, கொந்தளிப்புள்ள வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப் பெற்றிருந்தால் நாம் அதை நம்ப மாட்டோம். தொழி லாளர்களும் விவசாயிகளும் நிலப்பிரபுக்களாலும் முதலாளிகளா லும் ஒடுக்கப்பட்டு வரும் வரையில், பள்ளிக் கூடங்கள் நிலப் பிரபுக்களின் முதலாளிகளின் கைகளில் இருந்து வரும் வரையில் இளைஞர் தலைமுறை குருடாகவும் இருளில் ஆழ்ந்ததாகவும் இருந்து வரும். ஆனால் நமது பள்ளி இளைஞர்களுக்கு அறிவியல் களின் அடிப்படைகளையும் கம்யூனிசக் கருத்தோட்டங்களைத் தாமே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனையும் அளிக்க வேண்டும். அவர்களைக் கல்வித் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக்க வேண்டும். மனிதர்சள் கல்வி பயிலும் காலத்தில் நமது பள்ளி அவர்களைச் சுரண்டுவோரிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் பங்காற்றுபவர்கள் ஆக்க வேண்டும்.

கம்யூனிஸ்டு இளைஞர் கழகம் தனது போதனை, பயிற்சி, கல்வி ஆகியவற்றின் ஒவ்வோர் அடியையும் சுரண்டுவோருக்கு எதிராக எல்லா உழைப்பாளிகளையும் பொதுப் போராட்டத்தில் பங்கு கொள்வதுடன் இணைத்தால்தான் அது தன் பெயரை, தான் கம்யூனிஸ்டு இளம் தலைமுறையினரின் கழகம் என்பதை மெய்ப்பிக்கும். ஏனெனில் ஒரு விசயத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதாவது, ரசியா தன்னந்தனித் தொழிலாளர் குடியரசாக இருக்க, எஞ்சிய உலகு அனைத்திலும் பழைய முதலா ளித்துவ அமைப்பு முறை நிலவும் வரை நாம் அவற்றைவிட பலம் குறைந்தவர்கள். ஒவ்வொரு தடவையும் புதிய தாக்குதல் நடக்கும் அபாயம் நமக்கு எதிர்ப்படும். நாம் ஒற்றுமையாகவும், ஒருமனதாக வும் இருக்கக் கற்றால்தான் அடுத்துவரும் போராட்டத்தில் நாம் வெல்வோம். இவ்வாறு உரமேற்றிக் கொண்டபின் உண்மையி லேயே பிறரால் வெல்ல முடியாதவர்கள் ஆகிவிடுவோம். எனவே, கம்யூனிஸ்டாக இருப்பது என்றால் இளம் தலைமுறையினர் எல்லோரையும் ஒழுங்கமைத்து ஒன்று சேர்ப்பதும் இந்தப் போராட்டத்தில் பயிற்சிக்கும் கட்டுப்பாட்டுக்கும் உதாரணம் காட்டுவதும் ஆகும். அப்போது நீங்கள் கம்யூனிச சமூகம் என்னும் கட்டிடத்தின் கட்டுமானத்தைத் தொடங்கவும், முடிவுவரை நடத்திச் செல்லவும் வல்லவர் ஆவீர்கள்.

இந்த விசயத்தை உங்களுக்கு இன்னும் தெளிவுபடுத்தும் பொருட்டு ஓர் உதாரணம் காட்டுகிறேன். நாம் நம்மைக் கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்கிறோம்.

கம்யூனிஸ்டு என்பவன் யார்? கம்யூனிஸ்டு என்பது இலத்தீன் சொல். கம்யூனிசம் என்றால் பொதுவான என்று அர்த்தம். கம்யூனிச சமூகம் என்றால், நிலம், தொழிற்சாலைகள் எல்லாம் பொதுவானவை, உழைப்பு பொதுவானது என்று பொருள். இதுதான் கம்யூனிசம்.

ஒவ்வொருவரும் தனித் துண்டு நிலத்தில் தன் விவசாயத்தை நடத்தினால் உழைப்பு பொதுவானதாக இருக்க முடியுமா? பொது உழைப்பை எடுத்த எடுப்பில் உண்டாக்கி விட முடியாது. இது நடக்காத காரியம். இது ஆகாயத்திலிருந்து விழுந்து விடாது. இதற்கு முயற்சி செய்ய வேண்டும், பாடுபட வேண்டும், இதை உருவாக்க வேண்டும். போராட்டத்தின் போக்கில் இது உருவாகும். இது பழைய புத்தகம் அல்ல – புத்தகத்தை எவனும் நம்ப மாட்டான். இது சொந்த வாழ்க்கை அனுபவம். கல்சாக்கும் தினீக் கினும் சைபீரியாவிலிருந்தும் தெற்கிலிருந்தும் படை எடுத்து வந்த போது விவசாயிகள் அவர்கள் தரப்பில் இருந்தார்கள். போல்சவியம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால் போல்சவிக்குகள் நிலையான விலைக்கு தானியத்தை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் சைபீரியாவிலும் உக்ரைனிலும் கல்சாக்கினதும் தினீக்கினதும் ஆட்சியை விவசாயிகள் அனுபவித்ததால் விவசா யிக்கு இரண்டில் ஒன்று தவிரத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேறு எதுவும் இல்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்: ஒன்று, அவன் முதலாளியின் தரப்பில் சேர வேண்டும். முதலாளி அவனை நிலப்பிரபுவிடம் அடிமையாக ஒப்படைப்பான். இல்லாவிட்டால், தொழிலாளியை ஆதரிக்க வேண்டும். தொழி லாளி தேனாறும் பாலாறும் பெருகும் என்று ஆசை காட்டுவ தில்லை. எஃகுக் கட்டுப்பாட்டையும் கடினமான போராட்டத்தில் உறுதியையும் அவன் கோருகிறான். ஆனால் முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அடிமையாயிருக்கும் நிலையிலிருந்து அவன் விவசாயியை விடுவித்து விடுவான். அரசியல் அறிவற்ற விவசாயிகள் கூடச் சொந்த அனுபவத்தின் மூலம் இதைப் புரிந்து கொண்டு நேரில் கண்டதும் அவர்கள் துன்பகரமான படிப்பினை வாயிலாக அரசியல் உணர்வு பெற்று, கம்யூனிசத்தின் ஆதரவாளர் கள் ஆனார்கள். கம்யூனிஸ்டு இளைஞர் கழகம் இத்தகைய அனுபவத்தையே தன் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

நாம் என்ன கற்க வேண்டும், பழைய பள்ளியிலிருந்தும் பழைய அறிவியலிலிருந்தும் நாம் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்விகளுக்கு நான் விடை அளித்தேன். இதை எப்படிக் கற்க வேண்டும் என்னும் கேள்விக்கும் பதில் சொல்ல முயல்கிறேன். பள்ளி நடவடிக்கையின் ஒவ்வோர் அடியையும், பயிற்சிக்கும், கல்விக்கும், போதனைக்கும் உரிய ஒவ்வோர் அடியையும் சுரண்டு வோருக்கு எதிராக எல்லா உழைப்பாளிகளுடைய போராட்டத் துடன் பிரிக்க முடியாதவாறு இணைப்பதன் மூலமே கற்க வேண்டும்.

இந்தக் கம்யூனிசப் பயிற்சி எப்படி நடக்க வேண்டும் என்பதை ஏதேனும் ஓர் இளைஞர் நிறுவனத்தின் அனுபவத்திலிருந்து எடுத்த உதாரணங்களைக் கொண்டு உங்களுக்குக் கண்கூடாகக் காட்டு கிறேன். எழுத்தறிவின்மையை அகற்றுவது பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். எழுத்தறிவு இல்லாத நாட்டில் கம்யூனிசத்தைக் கட்டி அமைப்பது முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். சோவியத் ஆட்சி உத்தரவு இடுவதோ, கட்சி குறித்த முழக்கத்தைக் கிளப்புவதோ, சிறந்த ஊழியர்களின் ஒரு பகுதியை இந்த வேலை யில் ஈடுபடுத்துவதோ போதாது. இளைஞர் கழக உறுப்பினர் களான வாலிபர்கள், இது நம் வேலை, நாம் ஒன்று சேர்ந்து நாட்டுப்புறம் செல்வோம், எழுத்தறிவின்மையை அகற்றுவோம், நமது வளரும் தலைமுறையில் எழுத்தறிவற்றவர்கள் இல்லாத வாறு செய்வோம் என்று சொல்லும்படி செய்வதே கம்யூனிசம் ஆகும். வளரும் இளைஞர்களின் செயல்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்படுவதற்கு நாம் முயல்கிறோம். எழுத்தறிவின்மை யால் இருண்ட ரசியாவை, எழுத்தறிவு பெற்ற நாடாக விரைவில் மாற்றுவது முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இளைஞர் கழகம் இந்த வேலையை மேற்கொண்டால், இளைஞர் கள் அனைவரும் எல்லோருடைய நன்மைக்காகவும் பாடுபட்டால் 4,00,000 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கழ கம், கம்யூனிஸ்டு இளைஞர் கழகம் என்று அழைக்கப்பட உரிமை உள்ளதாகும். குறித்த அறிவியல்களில் தேர்ச்சி பெற்ற பின், எழுத் தறிவின்மை இருளிலிருந்து தாமே விடுதலை பெற முடியாத இளைஞர்களுக்கு உதவுவதும் கழகத்தின் பணி ஆகும். இளைஞர் கழக உறுப்பினராய் இருப்பதன் அர்த்தம், தனது வேலையையும் தன் சக்திகளையும் பொது நோக்கத்துக்கு வழங்கும் வகையில் பணிகளை நடத்துவது ஆகும். கம்யூனிசப் பயிற்சி இதில்தான் அடங்கி இருக்கிறது. இம்மாதிரி வேலைகளில்தான் இளைஞன் அல்லது இளம் பெண் உண்மையான கம்யூனிஸ்டாக மாறுவர். இந்த வேலையால் அவர்கள் நடைமுறை வெற்றிகள் பெற முடிந்தால்தான் அவர்கள் கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.

உதாரணத்துக்கு நகர்ப்புறக் காய்கறித் தோட்ட வேலையை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வேலை இல்லையா என்ன? இது கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தின் பணிகளில் ஒன்று. மக்கள் பட்டினி கிடக்கிறார்கள், தொழிற்சாலைகளிலும், ஆலைகளிலும் பட்டினி. பஞ்சத்திலிருந்து தப்புவதற்குக் காய்கறித் தோட்டங்களை விரிவாக்க வேண்டும். ஆனால் விவசாயம் பழைய முறையில் செய்யப்படுகிறது. அதிக உணர்வுள்ள நபர்கள் இந்த வேலையில் ஈடுபடுவது அவசியம். அப்போது காய்கறித் தோட்டங்கள் பெருகுவதையும் அவற்றின் பரப்பு விரிவடைவதையும் பலன்கள் மேம்படுவதையும் நீங்கள் காண்பீர்கள். இந்தக் பணியில் கம்யூ னிஸ்டு இளைஞர் கழகம் ஊக்கத்துடன் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கழகமும் அல்லது கழகத்தின் ஒவ்வொரு மையக் குழுவும் இந்த வேலையைத் தங்கள் வேலையாக கருதவேண்டும்.

கம்யூனிஸ்டு இளைஞர்கழகம் எல்லாவித வேலையிலும் உதவி அளிப்பதும் தனது முன்முயற்சியைக் காட்டுவதுமான முன்னணிக் குழுவாக இருக்க வேண்டும். எந்தத் தொழிலாளியும் கழகத்தைச் சேர்ந்தவர்களின் போதனையை ஒருக்கால் புரிந்து கொள்ளா விட்டாலும், அவர்களுடைய போதனையை உடனே ஒருவேளை நம்பாவிட்டாலும், அவர்களுடைய நேரடி வேலையில், அவர்களு டைய நடவடிக்கைகளில், தனக்கு சரியான வழிகாட்டுபவர்கள் இவர்களே என்பதை அவர் காணும்படியாகக் கழகம் இருக்க வேண்டும்.

கம்யூனிஸ்டு இளைஞர் கழகம் எல்லாத் துறைகளிலும் தன் வேலையை இம்மாதிரி அமைத்துக் கொள்ள முடியாவிட்டால் அது பழைய, முதலாளித்துவ வழியில் தடுமாறுகிறது என்று அர்த்த மாகும். கம்யூனிச போதனையிலிருந்து பெறப்படும் பணிகளை நிறைவேற்றுவதில் உழைப்பாளிகளுக்கு உதவும் பொருட்டு நமது பயற்சி சுரண்டுவோருக்கு எதிராக உழைப்பாளிகளின் போராட்டத்துடன் இணைய வேண்டும்.

கழக உறுப்பினர்கள் தங்கள் ஓய்வு நேரத்தின் ஒவ்வொரு மணியையும் காய்கறித் தோட்டத்தைச் சீர்படுத்துவதில் செலவிட வேண்டும், அல்லது ஏதேனும் தொழிற்சாலையிலோ ஆலை யிலோ இளைஞர்களுக்குப் போதனை அளிப்பது முதலியவற்றை ஒழுங்கமைக்க வேண்டும். வறுமையும் தாழ்வும் உள்ள நாடாக இருப்பதிலிருந்து ரசியாவைச் செல்வீ’வளம்மிக்க நாடாக மாற்ற நாம் விரும்புகிறோம். கம்யூனிஸ்டு இளைஞர் கழகம் தனது கல்வியையும் தனது போதனையையும் தனது பயிற்சியையும் தொழிலாளர், விவசாயிகளின் உழைப்புடன் இணைக்க வேண்டும். அது தன் பள்ளியில் அடைபட்டு இருக்கக் கூடாது. கம்யூனிச நூல்களையும் சிற்றேடுகளையும் படிப்பதோடு அது நின்றுவிடக் கூடாது. தொழிலாளர்களோடும் விவசாயிகளோடும் சேர்ந்து உழைப்பதனால்தான் உண்மையான கம்யூனிஸ்டு ஆக முடியும். இளைஞர் கழகத்தில் சேர்ந்தவர் ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெற்றவர், அதோடு உழைக்கவும் வல்லவர் என்பதை எல்லோரும் காண வேண்டும். நாம் பழைய பள்ளியிலிருந்து பழைய குருகுல முறையை அகற்றிவிட்டு அதன் இடத்தில் உணர்வுபூர்வமான கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதையும் ஒவ்வொரு இளைஞனும் சனிக்கிழமை இலவசப் பொது உழைப்பில் பங்கு கொள்வதையும், மக்களுக்கு உதவும் பொருட்டு இளைஞர்கள் ஒவ்வொரு நகர்ப்புறப் பண்ணையையும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், மக்கள் எல்லோரும் காணும் போது உழைப்பை முன்பு பார்த்தது போல் இன்றி வேறுவிதமாகப் பார்ப்பார்கள்.

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 1

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 2

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 3

புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 4

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here