பழைய பள்ளி பாடப்பயிற்சிப் பள்ளியாக இருந்தது. தேவை யற்ற, பயனற்ற,உயிரற்ற அறிவியல் திரள்களைக் கற்கும்படி அது மாணவர்களைக் கட்டாயப்படுத்தியது. இவை மூளையில் வலுவா கத் திணிக்கப்பட்டன. இளந்தலை முறையினரைப் பொது அச்சில் வார்க்கப்பட்ட அலுவலர்களாக இவை மாற்றின. ஆனால் மனித அறிவியல்களில் சேமிக்கப்பட்டுள்ளவற்றைக் கற்றுத் தேராமல் கம்யூனிஸ்டு ஆகிவிட முடியும் என்று முடிவு செய்ய நீங்கள் முயன்றால் மிகப் பெரிய தவறு செய்வீர்கள். எந்த அறிவியல்களின் விளைவாகக் கம்யூனிசம் தோன்றியுள்ளதோ அவற்றின் தொகுப் பைக் கற்றுத் தேர்ச்சி பெறாமல் கம்யூனிஸ்டு முழக்கங்களையும் கம்யூனிச அறிவியல்களின் முடிவுகளையும் கற்றுத் தெரிந்து கொண்டால் போதும் என்று நினைப்பது தவறு ஆகும். மனித அறிவியல்களின் தொகுப்பிலிருந்து கம்யூனிசம் தோன்றியதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது மார்க்சியம்.

முதன்மையாக மார்க்சினால் உருவாக்கப்பட்ட கம்யூனிச சித்தாந்தம், கம்யூனிச அறிவியல், இந்த மார்க்சிய போதனை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சோசலிஸ்டின் அவர் எவ்வளவுதான் மேதை வாய்ந்தவர் என்றாலும் – படைப் பாக இருந்து விடவில்லை என்பதையும், முதலாளித்துவத்துக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் இந்த போதனையைக் கையாண்ட, உலகனைத்திலும் உள்ள இலட்சோபலட்சம், கோடானுகோடிப் பாட்டாளி மக்களின் போதனை ஆகிவிட்டது என்பதையும் நீங்கள் படித்தும் கேட்டும் இருப்பீர்கள். எல்லா வற்றிலும் புரட்சிகரமான வர்க்கத்தைச் சேர்ந்த இலட்சோபலட்சம், கோடானுகோடி இதயங்களை ஆட்கொள்ள மார்க்சின் போதனை யால் எப்படி முடிந்தது என்ற கேள்வியை நீங்கள் எழுப்பினால் அதற்கு நீங்கள் ஒரே விடையைத்தான் பெற முடியும்: இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம், முதலாளித்துவத்தின் போது திரட்டப் பட்ட மனித அறிவியல்களின் நிலையான அடித்தளத்தை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டிருந்ததாகும். மனித சமூக வளர்ச்சி விதி களைக் கற்றுத்தேர்ந்த மார்க்ஸ் முதலாளித் துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதையும் அது கம்யூனிசத்துக்கு இட்டுச் செல்லும் என்பதையும் புரிந்து கொண்டார். முக்கியமானது என்னவென்றால், இந்த முதலாளித்துவ சமூகத்தின் மிக மிகத் துல்லியமான, மிக மிக விவரமான, மிக மிக ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இதை எல்லாம் அவர் நிரூபித்தார்.

முந்தைய அறிவியல் தந்தவை யாவற்றையும் முழுமையாகக் கற்றது இவ்வாறு செய்ய அவருக்கு உதவியது என்பதே. மனித சமூகத்தால் உருவாக்கப்பட்டிருந்தவை அனைத்தையும், ஒரு விவரத்தைக் கூடக் கவனிக்காது விடாமல், அவர் விமர்சன நோக்குடன் மாற்றி அமைத்தார். மனித சிந்தனையால் உருவாக்கப்பட்டிருந்தவை எல்லாவற்றையும் அவர் புரிந்து தெளிந்தார், விமர்சனத்துக்கு உள்ளாக்கினார், தொழிலாளர் இயக்க அனுபவத் தைக் கொண்டு சரி பார்த்தார். முதலாளித்துவ வரம்புச் சட்டங்களால் குறுக்கப் பட்டிருந்த, முதலாளித்துவ காழ்ப்புக்களுடன் இணைந்திருந்த மனிதர்கள் செய்திருக்க முடியாத முடிவுகளைச் செய்தார்.

நாம், உதாரணமாக, பாட்டாளி வர்க்கப் பண்பாடு பற்றி உரை யாடும் போது இந்த விசயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். மனித குலத்தின் வளர்ச்சி அனைத்திலும் உருவாக்கப்பட்ட பண் பாட்டை சரியாகத் தெரிந்து கொள்வதன் வாயிலாகவே, அதை மாற்றி அமைப்பதன் வாயிலாகவே பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை நிறுவ முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளா மல், இத்தகைய புரிதல் இல்லாமல் நம்மால் இந்தப் பணியை நிறைவேற்ற இயலாது. பாட்டாளி வர்க்கப் பண்பாடு என்பது எங்கிருந்தோ திடீரென்று வந்து குதித்துவிடவில்லை. பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு விசயத்தில் தனித் தேர்ச்சி பெற்றவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் மனிதர்களின் கற்பனை அல்ல இது. இத்தகையவர்கள் சொல்லுவது வெறும் வெட்டிப் பேச்சு. முதலாளித்துவ சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், அதிகார வர்க்க சமூகம் ஆகியவற்றின் ஒடுக்குமுறையில் மனித குலம் திரட்டிச் சேர்த்த அறிவியல்களின் சேமிப்புக்களது விதிமுறைக்கு ஒத்த வளர்ச்சியாக விளங்க வேண்டும் பாட்டாளி வர்க்கப் பண்பாடு. இந்த எல்லாப் பாதைகளும் வழிகளும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுக்கு இட்டுச் சென்றன, இட்டுச் செல்கின்றன, தொடர்ந்து இட்டுச்செல்லும். மார்க்சினால் செப்பம் செய்யப்பட்ட அரசியல் பொருளாதாரம் மனித சமுதாயம் எதற்கு வந்து சேர வேண்டும் என்று எப்படிக் காட்டியதோ, வர்க்கப் போராட்டத் துக்கு, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பரிணமிப்பை எப்படிக் சுட்டிக் காட்டியதோ அப்படியேதான் இதுவும்.

இளைஞர் பிரதிநிதிகள் இடையிலும் புதிய கல்விமுறையின் சில காப்பாளர்கள் இடையிலும் பழைய பள்ளிமுறை பற்றிய தாக்குதல்களை, அது உருவேற்றும் பள்ளிமுறை என்ற குற்றச் சாட்டை, நாம் அடிக்கடி கேட்கிறோம். பழைய பள்ளிமுறையில் இருந்த நல்ல அம்சங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் அவர்களிடம் சொல்லுகின்றோம். பழைய பள்ளியில் சிறுவனின் மூளையில் அளவற்ற எண்ணிக்கையில் அறிவியல்கள் சுமத்தப்பட்டன. இவற்றில் பத்தில் ஒன்பது தேவை அற்றவை. பத்தில் ஒன்று திரிக்கப்பட்டவை. இந்த அம்சத்தைப் பழைய பள்ளியிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் நாம் கம்யூனிச முடிவுகளுடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றோ!” கம்யூனிஸ்டு முழக்கங்களை மட்டும் மனப்பாடம் செய்யலாம் என்றோ! இதற்கு அர்த்தம் அல்ல. இவற்றைக் கொண்டு கம்யூனிசத்தை அமைக்க முடியாது. மனிதகுலம் உருவாக்கியுள்ள அறிவுச் செல்வம் அனைத்தினாலும் நம் மனத்தை வளப்படுத்திக் கொள்ளும்போதுதான் நாம் கம்யூனிஸ்டு ஆக முடியும்.

உருவேற்றுவது நமக்குத் தேவையில்லை. ஆனால் சுல்வி பயிலும் ஒவ்வொருவரது நினைவு ஆற்றலையும் அடிப்படை மெய்விவரங்களின் அறிவால் வளர்ப்பதும் செம்மைப்படுத்து வதும் நமக்கு வேண்டும். ஏனெனில், பெறப்பட்ட எல்லா அறிவியல் களும் கம்யூனிஸ்டின் உணர்வால் தனதாக்கிக் கொள்ளப்படா விட்டால், கம்யூனிசம் வெற்றுச் சொல் ஆகி விடும், பொருளற்ற குறிப்பலகை ஆகி விடும், கம்யூனிஸ்டு வெறும் தற்பெருமைக் காரன் ஆகி விடுவான். நீங்கள் இந்த அறிவியல் களைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவற்றை விமர்சன நோக்குடன் அணுகும் வகையில் புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற கூளங்களை மனத்தில் அடைத்துக் கொள்ளாமல், எந்த மெய் விவரங்கள் இல்லாமல் தற்காலத்தில் ஒருவன் கற்றவன் ஆக முடியாதோ அவை எல்லாவற்றையும் பற்றிய அறிவால் மனத்தை வளப்படுத்திக் கொள்ளும் வகையில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்யூனிஸ்டு ஆழ்ந்த, மிகக் கடினமான, பெரிய வேலை செய்யாமல், எந்த மெய் விவரங்களை விமர்சன நோக்குடன் அணுக அவன் கடமைப்பட்டவனோ அவற்றை ஆய்ந்து தெளிந்து கொள் ளாமல், தனக்குக் கிடைத்த தயாரான முடிவுகளின் அடிப்படையில் கம்யூனிசத்தைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்ள நினைத்தால், அத்தகைய கம்யூனிஸ்டு பெரிதும் இரங்கத்தக்கவன். இம்மாதிரி மேலோட்டமான பார்வை நிச்சயமாக அழிவு விளைவிப்பதாகும். நான் அறிந்திருப்பது சொற்பம் என்று நான் அறிந்து கொண்டால் நிறையத் தெரிந்துக் கொள்ள முயல்வேன். ஆனால், தான் கம்யூனிஸ்டு என்றும் வேறு விசயம் எதையும் ஆழ்ந்து அறிவது தனக்குத் தேவை இல்லை என்றும் ஒருவன் சொன்னால், அவன் கம்யூனிஸ்டை எவ்வகையிலும் ஒத்தவன் ஆக மாட்டான்.

பழைய பள்ளி முதலாளிகளுக்குத் தேவையாய் இருந்த ஏவலர்களைப் பயிற்றுவித்தது. பழைய பள்ளி அறிவியலாளர்களை முதலாளிகளுக்கு உவப்பான வகையில் எழுதவும் பேசவும் கடமைப்பட்டவர்கள் ஆக்கியது. எனவே, அதை நாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்று ஆகிறது. ஆனால், நாம் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால், நாம் அழிக்க வேண்டும் என்றால், மனிதகுலத்தால் திரட்டிச் சேர்க்கப்பட்டவையும் மனிதர்களுக்கு வேண்டியவையுமான எல்லாவற்றையும் நாம் அதிலிருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இதற்கு அர்த்தமா? முதலாளித் துவத்துக்குத் தேவையாய் இருந்தவற்றைக் கம்யூனிசத்துக்குத் தேவையாய் இருப்பவற்றிலிருந்து பிரித்து அறிய நாம் திறன் கொண்டிருக்கக் கூடாது என்று இதற்கு அர்த்தமா?

பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு எதிராக முதலாளித் துவ சமூகத்தில் நடத்தப்பட்ட பழைய உடற்பயிற்சிக் கூடத்தின் இடத்தில் தொழிலாளர்கள், விவசாயிகளின் உணர்வு பூர்வமான கட்டுப்பாட்டை நாம் வைப்போம். அவர்கள் பழைய சமூகத்தின் பால் வெறுப்பையும் இந்தப் போராட்டத்துக்காகச் சக்திகளை ஒன்று திரட்டி ஒழுங்கமைப்பதற்கான உறுதியையும் திறமை யையும் விருப்பத்தையும் ஒருங்கே கொண்டிருப்பார்கள். ஒருவரோடு ஒருவர் தொடர்பற்ற, துண்டுகளாகப் பிரிந்த, பிரமாண்டமான நாட்டின் பரப்பில் சிதறிக் கிடக்கிற பல லட்சக்கணக்கும் பல கோடிக் கணக்குமான மக்களின் விருப்பத் தைக் கொண்டு ஒன்றிணைந்த சக்தியை உருவாக்க அவர்கள் உறுதியும் திறமையும் விருப்பமும் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இத்தகைய ஒன்றிணைந்த சக்தி இல்லாவிட்டால் நாம் கட்டாயமாக நொறுக்கப்பட்டு விடுவோம். இந்த ஒற்றுமை இல்லாவிட்டால், தொழிலாளர்கள், விவசாயிகளின் இந்த உணர்வுபூர்வமான கட்டுப்பாடு இல்லாவிட்டால், நம் செயல்கள் நம்பிக்கைக்கு இடமற்றது ஆகிவிடும். இது இல்லாவிட்டால் உலகு அனைத்திலும் உள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களை யும் நம்மால் வெற்றி கொள்ள முடியாது.

நம்மால் அடித்தளத்தைக் கூட வலுப்படுத்த முடியாது. இந்த அடித்தளத்தின் மேல் புதிய, கம்யூனிச சமூகத்தை நிறுவுவது பற்றிய பேச்சுக்கே இடம் இருக்காது. இவ்வாறே பழைய பள்ளிமுறையை நிராகரித்து, இந்தப் பழைய பள்ளிமுறை மீது முற்றிலும் நியாயமான, அவசியமான வெறுப்புக் கொண்டு, பழைய பள்ளிமுறையைத் தகர்த்து விடும் விருப்பத்தை மதிக்கும் அதே சமயத்தில், பழைய பாடப்பயிற்சி, பழைய உருவேற்றல், பழைய உடற்பயிற்சி ஆகியவற்றின் இடத்தில் மனித அறிவியல்களின் தொகுப்பு அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் திறனை நாம் வைக்க வேண் டும். நம்முடைய கம்யூனிசம் மனப்பாடம் செய்தது போன்றதாக இல்லாமல் நாமாகவே சிந்தனை செய்து உருவாக்கியதாக தற்காலக் கல்வியின் நோக்கு நிலையில் தவிர்க்க முடியாதவையாக் விளங்கும் முடிவுகளைக் கொண்டதாக இருக்கும் விதத்தில் அறிவியல்களை எடுத்துக் கொள்ள நாம் திறன் பெற வேண்டும்.

தொடரும்…

தொடர் 1ஐ படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 1 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here