புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 4

0

பொதுவாகவே வர்க்கங்கள் என்பவை எவை? சமூகத்தின் ஒரு பகுதி மறு பகுதியின் உழைப்பைத் தனக்கு உரித்தாக்கிக் கொள்ள உதவுபவை இவை. சமூகத்தின் ஒரு பகுதி நிலம் அனைத்தையும் தனக்கு உரித்தாக்கிக் கொண்டால், நிலப்பிரபுக்கள், விவசாயிகள் என்னும் வர்க்கங்கள் தோன்றுகின்றன. சமூகத்தின் ஒரு பகுதி தொழிற்சாலைகளையும், ஆலைகளையும் சொந்தமாகக் கொண்டு, பங்குப் பத்திரங்களையும் மூலதனங்களையும் உடைமையாகக் கொண்டிருந்து, மறு பகுதி இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்தால், முதலாளிகள், பாட்டாளிகள் என்ற வர்க்கங்கள் ஏற்படுகின்றன.

ஜாரை விரட்டி அடிப்பது கடினமாய் இல்லை. இதற்குச் சில நாட்களே தேவைப்பட்டன. நிலப்பிரபுக்களை விரட்டி அடிப்பதும் மிகக் கடினமாய் இல்லை. இதைச் சில மாதங்களில் செய்ய முடிந்தது. முதலாளிகளையும் விரட்டி அடிப்பது மிகக் கடினமாய் இல்லை, ஆனால் வர்க்கங்களை ஒழிப்பது ஒப்பிட முடியாத அளவு அதிகக் கடினமானது. தொழிலாளர்கள், விவசாயிகள் என்ற பிரிவு இன்னமும் எஞ்சி இருக்கிறது. விவசாயி தனிப்பட்ட துண்டு நிலத்தில் அமர்ந்து கொண்டு அதிகப்படி தானியத்தை, அதாவது தனக்கோ தன் கால்நடைகளுக்கோ தேவை இல்லாத தானியத்தை கைப்பற்றிக் கொண்டால், மற்றவர்கள் எல்லோரும் தானியம் இல்லாதிருந்து விட்டால், அப்போது விவசாயி சுரண்டுபவனாக மாறிவிடுகிறான். அவன் தனக்கு எவ்வளவு அதிக தானியம் வைத்துக் கொள்கிறோனோ, அவனுக்கு அவ்வளவு இலாபம். மற்றவர்கள் பட்டினி கிடந்தால் கிடக்கட்டும்: “இவர்கள் எவ்வளவு அதிகம் பட்டினி கிடப்பார்களோ அவ்வளவு அதிக விலைக்கு இந்த தானியத்தை விற்பேன்” என்று அவன் எண்ணுவான். எல்லோரும் பொது நிலத்திலும் பொதுத் தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் ஒரே பொதுத் திட்டப்படி, பொது ஒழுங்கு முறைக்கு இணங்க வேலை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது எளிதா?

ஜாரையும் நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் விரட்டு வது போன்று எளிதாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இதற்குப் பாட்டாளி வர்க்கம் விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு மறு பயிற்சி அளிக்க வேண்டும். புதிதாகக் கற்பிக்க வேண்டும். கூலி- ஏழை விவசாயிகளாய் இருப்பவர்களைத் தயார்படுத்தி, பணக்காரர்களும் மற்றவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி இலாபம் திரட்டுபவர்களுமான விவசாயிகளின் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும். ஆகவே, நாம் ஜாரைக் கவிழ்த்து விட்டோம், நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் அகற்றி விட் டோம் என்பதால் நமது பணி நிறைவேறிவிடவில்லை. நாம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என அழைக்கும் அமைப்பின் பணி இதிலேயே அடங்கி இருக்கிறது.

வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அது தன் வடிவங்களை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறது. பழைய சுரண்டுவோர் திரும்பி வந்துவிடக்கூடாது, அரசியல் அறிவற்றுத் துண்டுகளாகச் சிதறி இருக்கும் விவசாயிகள் ஒரே கூட்டாக ஒன்றுபட வேண்டும் என்பதற்காக நடக்கிறது பாட்டாளிகளின் இந்த வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. எல்லா நலன்களையும் இந்தப் போராட்டத்துக்கு அடிப்படுத்துவது நம் பணி. நமது கம்யூனிஸ்டு நீதிநெறியையும் நாம் இந்தப் பணிக்கே அடிப்படுத்துகிறோம். நாம் சொல்லுகி றோம்: பழைய சுரண்டுவோர் சமூகத்தை அழிக்கவும், கம்யூனிஸ்டு களின் புதிய சமூத்தை அமைத்துவரும் பாட்டாளி வர்க்கத்தை மையமாகக் கொண்டு எல்லா உழைப்பாளிகளையும் ஒன்று திரட்டவும் உதவுவதே இந்த நீதிநெறி.

இந்தப் போராட்டத்தில் எது பயன்படுகிறதோ, எல்லா வகை யான சுரண்டலுக்கும் எதிராகவும், எல்லா வகையான சிறு உடை மைக்கும் எதிராகவும் உழைப்பாளிகளை எது ஒன்று சேர்க்கிறதோ அதுவே கம்யூனிஸ்டு நீதிநெறி. ஏனெனில் சமூகம் அனைத்தினதும் உழைப்பினால் உருவாக்கப்பட்டதைச் சிறு உடைமை ஒரு நபரின் கைகளில் கொடுக்கிறது. நமது சமூகத்தில் நிலம் பொது உடைமையாகக் கருதப்படுகிறது.

இந்தப் பொது உடைமையிலிருந்து ஒரு குறித்த துண்டை நான் எடுத்துக் கொண்டு எனக்குத் தேவையானதைப் போல இரு மடங்கு அதிக தானியத்தை அதில் விளைவித்து, உபரி தானியத்தைக் கொண்டு கள்ள வியாபாரம் செய்கிறேன் என்றால்? பசித்தவர்கள் எத்தனை அதிகமோ அத்தனை அதிக விலை தருவார்கள் என்று நான் கணக்கிட்டால்? அப்போது நான் கம்யூனிஸ்டாக நடந்து கொள்கிறேனா என்ன? இல்லை, சுரண்டுபவனாக, தனி உடைமை யாளனாக நான் நடந்து கொள்கிறேன். இதை எதிர்த்துப் போராட வேண்டும். இதை இப்படியே இருக்க விட்டால், முந்தைய புரட்சிகளில் பலமுறை நடந்தது போல எல்லாம் பின்னுக்கு, முதலாளிகளின் ஆட்சிக்கு, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்குச் செல்லும். முதலாளிகளினதும் சிறு முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஆட்சி மீண்டும் நிலைபெற விடாது தடுப்பதற்குச் சில்லறை வர்த்தகத்துக்கு இடம் தரக்கூடாது, தனி நபர்கள் மற்றவர்களைச் சுரண்டி இலாபம் சம்பாதிக்காதிருப்பது இதற்கு அவசியம். உழைப்பாளிகள் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து கம்யூனிஸ்டு சமூகமாக அமைவது இதற்குத் தேவை. கம்யூனிஸ்டு இளைஞர்களின் ஐக்கியத்தினதும் நிறுவனத்தினதும் முக்கியப் பணியாக விளங்கும் முதன்மையான தனிச் சிறப்பு இதுவே ஆகும்.

ஒன்று நீ மற்றவனைக் கொள்ளை அடிப்பாய், இல்லாவிட்டால் மற்றவன் உன்னைக் கொள்ளை அடிப்பான், ஒன்று நீ மற்றவனுக் காக வேலை செய்வாய்,

இல்லாவிட்டால் அவன் உனக்காக வேலை செய்வான். ஒன்று நீ அடிமைச் சொந்தக்காரன், இல்லா விட்டால் நீ அடிமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் பழைய சமூகம் அமைந்திருந்தது. அந்த சமூகத்தில் போதித்துப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஒரு வகையில் சொன்னால் தாய்ப் பாலுடனேயே உளப்பாங்கு களையும் வழக்கத்தையும் கருது கோளையும் – ஒன்று அடிமைச் சொந்தக்காரன், இல்லாவிட்டால் அடிமை, அல்லது சிறு உடைமையாளன், சிறு பணியாளன், சிறு அலுவலன், அறிவு ஜீவி என்ற கருதுகோளையும் – கிரகித்துக் கொள்கிறார்கள். சுருங்கக் கூறின் தனக்கு வேண்டியதைப் பெறுவதில் மட்டுமே அக்கறை கொள்பவனாக, மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைப்பவனாக ஒவ்வொரு வனும் பயிற்றுவிக்கப்படுகிறான்.

நான் இந்த நிலப் பகுதியில் வரவு செலவு செய்கிறேன் என்றால் வேறு பகுதி பற்றி அக்கறை இல்லை. மற்றவன் பட்டினி கிடப்பான் என்றால் இன்னும் நல்லது. நான் என் தானியத்தை

அதிக விலைக்கு விற்பேன். நான் மருத்துவன், பொறியாளன், பள்ளி ஆசிரியன், அலுவலன் என்ற முறையில் எனக்கு உரிய இடத்தைப் பெற்றிருக்கிறேன் என்றால் மற்றவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உடைமையாளர்களின் ஆட்சிக்கு ஒத்துப் போவதனால், அவர்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வதால் நான் என் இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியலாம். ஒருவேளை நான் முன்னேறவும் முதலாளியாகவும் கூட முடியலாம். இத்தகைய மனப்பாங்கும் இத்தகைய மனநிலை யும் கம்யூனிஸ்டிடம் இருக்க முடியாது. நாம் சொந்த பலம் கொண்டு நம்மைக் காத்துக் கொள்ளவும் புதிய சமூகத்தைக் கட்டி அமைக்கவும் வல்லவர்கள் என்று தொழிலாளர்களும் விவசாயி களும் நிரூபித்த போது புதிய கம்யூனிசப் பயிற்சி அக்கணமே தொடங்கி விட்டது. இது சுரண்டுவோருக்கு எதிரான போராட்டத் தில் பயிற்சி, தன்னலமிகளுக்கும் சிறு உடைமையாளர்களுக்கும் எதிராக, நான் என் சொந்த இலாபத்தை முயன்று பெறுகிறேன், மற்ற விசயங்களில் எனக்கு எவ்வித அக்கறையும் கிடையாது என்று சொல்லும் மனப் பாங்குக்கும் வழக்கங்களுக்கும் எதிராகப் பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டு ஏற்படுத்துவதற்கான பயிற்சி.

வளர்ந்து வரும் இளம் தலைமுறை கம்யூனிசத்தை எப்படிக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இதில் அடங்கி இருக்கிறது.

தனது போதனையின், பயிற்சியின், கல்வியின் ஒவ்வோர் அடியையும் பழைய சுரண்டுவோர் சமூகத்துக்கு எதிராகப் பாட்டா ளிகளதும் உழைப்பாளிகளதும் இடையறாத போராட்டத்துடன் இணைப்பதன் வாயிலாக மட்டுமே இந்தத் தலைமுறை கம்யூனிசத் தைக் கற்க முடியும். நீதிநெறி பற்றி நம்மிடம் கூறப்படும்போது நாம் பின்வருமாறு சொல்லுகிறோம்: கம்யூனிஸ்டுக்கு நீதிநெறி முழுவதும் இந்த ஒன்றிணைந்த, ஒருமைப்பாடு உள்ள கட்டுப் பாட்டிலும் சுரண்டுவோருக்கு எதிராக உணர்வுபூர்வமான மக்கள் திரள் போராட்டத்திலுமே இருக்கிறது. நிலையான நீதிநெறியில் நமக்கு நம்பிக்கை கிடையாது. நீதிநெறி பற்றிய எல்லா வகைக் கதைகளிலும் உள்ள வஞ்சகத்தை நாம் அம்பலப்படுத்துகிறோம். மனித சமூகத்தை உயர்த்தவும் உழைப்பைச் சுரண்டலிலிருந்து விடுவிக்கவுமே நீதிநெறி பயன்படுகிறது.

இதைச் செயல்படுத்துவதற்கு, முதலாளித்துவ வர்க்கத்துடன் கட்டுப்பாடுள்ள துணிந்த போராட்டத்தின் சூழ்நிலையில் அரசியல் உணர்வு பெற்றவர்களாக மாறத் தொடங்கிய இளைஞர்களின்தலை முறை தேவை. இந்தப் போராட்டத்தில் அது உண்மையான கம்யூ னிஸ்டுகளைப் பயிற்றுவிக்கும். அது தனது போதனையிலும் கல்வி யிலும் பயிற்சியிலும் ஒவ்வோர் அடியையும் இந்தப் போராட்டத் துக்கு அடிப்படுத்தவும் இதனுடன் இணைக்கவும் வேண்டும். கம்யூனிஸ்டு இளைஞர்களின் பயிற்சி நீதிநெறி பற்றிய எல்லா வகையான இனிப்பூட்டும் பேச்சுக்களையும் விதிகளையும் அவர்களுக்கு முன் வைப்பதில் அடங்கி இருக்கக் கூடாது. பயிற்சி இதில் அடங்கி இருக்கவில்லை. தங்கள் தாய் தந்தையர் நிலப் பிரபுக்களதும் முதலாளிகளதும் ஒடுக்குமுறையின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மக்கள் கண்டபோது, சுரண்டுவோருக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியவர்கள் மீது பொழிந்த சித்திர வதைகளை மக்கள் தாங்களே அனுபவித்தபோது, வென்றவற்றைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு எத்தகைய தியாகங்கள் புரிய வேண்டி இருந்தது என்பதையும் நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் எத்தகைய வெறி கொண்ட பகைவர்கள் என்பதையும் அவர்கள் கண்டபோது, இந்த மனிதர்கள் இந்தச் சூழ்நிலையில் கம்யூனிஸ் டுகளாகப் பயிற்சி பெற்றார்கள். கம்யூனிசத்தை உறுதிப்படுத்து வதற்கும் நிறைவேற்றுவதற்குமான போராட்டம் கம்யூனிச நீதிநெறி யின் அடிப்படையாக விளங்குகிறது. கம்யூனிசப் பயிற்சி, கல்வி, போதனை ஆகியவற்றின் ஆதாரமும் இதுவே. கம்யூனிசத்தை எப்படிக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இதில்தான் அடங்கி இருக்கிறது.

தொடரும்…
புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 1
புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 2
புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here