புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 6

சமூக ஜனநாயகக் கட்சியை ஒன்றிணைத்து வலுப்படுத்த உதவக்கூடிய அரசியல் செய்தித்தாள் ஒன்றை ரசியாவுக்கு வெளியே பதிப்பிக்கும் கருத்தைப் பீட்டர்ஸ்பர்க் வேலையில் அவருடைய முதிய தோழர்கள் இஸ்க்ரா செய்தித்தாளைத் தொடங்கியவர்கள் -அவருடன் கலந்து ஆலோசித்தார்கள்.

0

கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தின் பணி கிராமத்திலோ அல்லது தன் வட்டாரத்திலோ -ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் கொள்கி றேன் – துப்புரவுக்கு வகை செய்வதில் அல்லது உணவுப் பண்டங் களை வினியோகிப்பதில் உதவிக்கு ஏற்பாடு செய்வதாகும். பழைய முதலாளித்துவ சமூகத்தில் இது எவ்வாறு செய்யப் பட்டது? ஒவ்வொருவனும் தனக்காக மட்டுமே வேலை செய்தான். அங்கே முதியவர்களும் நோயாளிகளும் இருக்கிறார்களே! என்று எவனும் கவனிக்கவில்லை. அல்லது எல்லா வேலையும் மாதர்களின் தோள்கள் மீது சுமத்தப்பட்டது. இந்தக் காரணத்தால் மாதர்கள் நசுக்கவும் அடிமையாக்கவும்பட்ட நிலைமையில் இருந்தார்கள். இதற்கு எதிராக யார் போராட வேண்டும்? இளைஞர் கழகங்கள்தாம். அவை பின்வருமாறு கூற வேண்டும்: நாங்கள் இதை மாற்றுவோம். நாங்கள் இளைஞர் பிரிவுகளை ஒழுங்கமைப் போம். இவைதுப்புரவுக்கு வகை செய்வதிலும், உணவுப் பண்டங் களை வினியோகிப்பதிலும் உதவும். முறையாக வீடுகளைச் சுற்றி வரும். சமூகம் முழுவதன் நன்மைக்காகவும் இவை ஒழுங்கமைந்த முறையில் செயலாற்றும். சக்திகளைச் சரியாகப் பயன்படுத்துவதன் வாயிலாக, உழைப்பு ஒழுங்கமைந்த உழைப்பாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டும்.

எதன் பிரதிநிதிகளுக்கு இப்போது கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆகிறதோ அந்தத் தலைமுறை கம்யூனிச சமூகத்தைக் காணலாம் என்று எண்ண முடியாது. அதற்குள் இந்தத் தலைமுறை மடிந்து விடும். இப்போது பதினைந்து வயதான தலைமுறை கம்யூனிச சமூ கத்தைக் காணும், தானே அதைக் கட்டி அமைக்கும். தன் வாழ்க் கைப் பணி அனைத்தும் இந்த சமூகத்தை நிறுவுவதுதான் என்று இந்தத் தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய சமூ கத்தில் உழைப்பு தனிக் குடும்பத்தால் நடத்தப்பட்டது. திரளான மக்களைச் சுரண்டிவந்த நிலப்பிரபுக்களும், முதலாளி களும் தவிர வேறு எவரும் உழைப்பை ஒன்றுபடுத்தவில்லை. எல்லா வகையான உழைப்பையும், அது எவ்வளவுதான் அழுக்கும் சிரமமும் உள்ளதாய் இருந்தாலும், ஒவ்வொரு தொழிலாளியும் விவசாயியும் தன்னைப் பற்றிப் பின்வருமாறு எண்ணும் வகையில்

நாம் அமைக்க வேண்டும்: “நான் கட்டற்ற உழைப்பின் மாபெரும் சேனையின் பகுதி ஆவேன். நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் இல்லாமல் என் வாழ்க்கையை நானே நிறுவ வல்லவன். கம்யூனிச ஒழுங்குமுறையை நிலைநாட்ட என்னால் முடியும்..

கம்யூனிஸ்டு இளைஞர் கழகம் உணர்வு பூர்வமான, ஒழுங்கமைந்த உழைப்புக்கு எல்லோரையும் இளம் பருவம் முதலே பயிற்றுவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் தற் போது எதிர் நிற்கும் பணிகள் நிறைவேற்றப்படும் என்று நம்மால் நம்ப முடியும். நாட்டை மின்சாரமயம் ஆக்குவதற்கும் நமது வறுமைப்பட்ட நிலம், தொழில் நுட்பத்தின் நவீன சாதனைகளின் படி பண்படுத்தப்படுவதற்கு வகை செய்வதற்கும் பத்து ஆண்டு களுக்குக் குறையாத காலம் தேவை என்று நாம் கணக்கிட வேண் டும். ஆகவே, தற்போது பதினைந்து வயதை எட்டியிருக்கும் தலை முறை, இன்னும் 10 – 20 ஆண்டுகளில் கம்யூனிச சமூகத்தில் வாழப் போகிற தலைமுறை, ஒவ்வொரு நாளும் எந்த கிராமத்திலும் எந்த நகரத்திலும் இளைஞர்கள் பொது உழைப்பின் ஏதேனும் ஒரு பணியை, அது யாவற்றிலும் சிறியதானாலும் சரி, எல்லாவற்றிலும் எளியதானாலும் சரி, நடைமுறையில் நிறைவேற்றும் வகையில் தனது போதனைப் பணிகள் அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும். எந்த அளவுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் இது நிகழுமோ, எந்த அளவுக்குக் கம்யூனிசமுறை வளர்ச்சி அடை யுமோ, தங்களால் தங்கள் உழைப்பை ஒன்றிணைக்க முடியும் என் பதை இளைஞர்கள் எந்த அளவுக்கு நிரூபிப்பார்களோ, அந்த அளவுக்குக் கம்யூனிச நிர்மாணத்தின் வெற்றி உறுதிப்படும். தன் ஒவ்வோர் அடிவைப்பையும் இந்தக் கட்டுமானத்தின் நோக்கு நிலையிலிருந்து பார்வையிடுவதன் மூலமே, ஒன்றிணைந்த உணர்வு பூர்வமான உழைப்பாளிகளாய் இருப்பதற்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டோமா என்று தன்னைக் கேட்டுக் கொள்வதன் மூலமே, கம்யூனிஸ்டு இளைஞர் கழகம் தனது ஐந்து இலட்சம் உறுப்பினர்களை ஒரே உழைப்புச் சேனையாக ஒன்றிணைக்கும், தன்னை எல்லோரும் மதிக்குமாறு செய்யும். (இடி முழக்கம் போன்ற கைத்தட்டல்கள்.)

-இவான்
வசீலியெவிச் பாபுஷ்கின் (மரணக் குறிப்பு)
வி.இ. லெனின்

நாம் சாபக்கேடான நிலைமைகளில் வாழ்கிறோம். இந்தக் காலத்தில் பின்வருவது போன்ற விசயம் நடக்கக் கூடியதுதான்; பெரிய கட்சி ஊழியர், கட்சிக்குப் பெருமை அளிப்பவர், வாழ்நாள் முழுவதையும் தன்னலம் இன்றித் தொழிலாளர்களின் நலன் களுக்கே அர்ப்பணித்து விட்டவர், தகவல் இல்லாமல் மறைந்து விடுவார். அவருக்கு என்ன ஆயிற்று, அவர் எங்கேனும் கடுங் காவல் சிறைக் குடியிருப்பில் உழல்கிறாரா, ஏதேனும் சிறைச் சாலையில் மடிந்து போனாரா அல்லது பகைவர்களுடன் போரில் வீரமரணம் அடைந்தாரா என்பது தாயும் மனைவியும் போன்று மிக மிக நெருங்கியவர்களுக் கும், மிகவும் உற்ற தோழர்களுக்கும் பல ஆண்டுகள் வரை தெரியாது. இவான் வசீலியெவிச்சுக்கு இப்படி நேர்ந்தது. அவர் ரென்னென்காம்ஃபினால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவருடைய மரணம் பற்றிய சேதியை மிக அண்மையில் தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

எத்தனையோ சமூக ஜனநாயகவாதிகளுக்கு இவான் வசீலியெவிச் பாபுஷ்கினின் பெயர் அன்புக்கும் மதிப்புக்கும் உரியது. அவரை அறிந்தவர்கள் எல்லோரும் அவரது ஊக்கம், வெற்றுச் சொற்கள் இன்மை, ஆழ்ந்த நிலையுறுதி கொண்ட புரட்சித் தன்மை, குறிக்கோளில் ஆர்வம் பொங்கும் ஈடுபாடு ஆகியவற்றுக்காக அவரை நேசித்துப் போற்றினார்கள். அவர் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளி. 1895-ஆம் ஆண்டில், அரசியல் உணர்வு பெற்ற மற்ற தோழர்களின் குழுவோடு சேர்ந்து, நேவ்ஸ்கி எல்லை நிலையத்துக்கு அப்பால் இருந்த செம்யானிக்கோவ்ஸ்கி, அலெக்சாந்திரோவ்ஸ்கி தொழிற்சாலைகள்,கண்ணாடி தொழிற்சாலை ஆகியவற்றின் தொழிலாளர்களிடையே அவர் ஊக்கத்துடன் வேலை செய்தார். வட்டங்கள் அமைத்தார். நூலகங்கள் நிறுவினார், தாமும் இடைவிடாமல் ஆர்வத்துடன்பயின்றார்.

அவருடைய எண்ணங்கள் எல்லாம் வேலையை விரிவாக்குவ திலேயே முனைந்திருந்தன. 1894-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் பீட்டர்ஸ்பர்க்கில் வெளியிடப்பட்ட முதலாவது கிளர்ச்சித் துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதில் அவர் செயல் முறைப் பங்கு எடுத்துக் கொண்டார், தாமே வினியோகித்தார். தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடும் கழகம்’ பீட்டர்ஸ்பர்க்கில் அமைக்கப்பட்டதும் இவான் வசீலியெவிச் அதன் செயலூக்கம் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ஆனார். கைது செய்யப்படும் வரை அவர் அதில் வேலை செய்தார்.

சமூக ஜனநாயகக் கட்சியை ஒன்றிணைத்து வலுப்படுத்த உதவக்கூடிய அரசியல் செய்தித்தாள் ஒன்றை ரசியாவுக்கு வெளியே பதிப்பிக்கும் கருத்தைப் பீட்டர்ஸ்பர்க் வேலையில் அவருடைய முதிய தோழர்கள் இஸ்க்ரா செய்தித்தாளைத் தொடங்கியவர்கள் -அவருடன் கலந்து ஆலோசித்தார்கள். இந்தக் கருத்தை அவர் மிக உற்சாகமாக ஆதரித்தார். இவான் வசீலியெவிச் சுதந்திரமாய் இருந்த வரை இஸ்க்ராவுக்குத் உண்மையான தொழிலாளர் செய்தி விவரங்கள் கிடைப்பதில் பற்றாக்குறையே ஏற்படவில்லை. இஸ்க்ராவின் முதல் இருபது இதழ்களைப் படித்துப் பாருங்கள். ஷூயா, இவானவோ – வஸ்னிஸேன்ஸ்க், அரேஹவோ – ஸூயெவோ ஆகியவற்றிலிருந்தும் மைய ரசியாவைச் சேர்ந்த மற்ற இடங்களிலிருந்தும் வந்துள்ள அனேகமாக எல்லாச் செய்திக் கடிதங்களும் இவான் வஸீலியெவிச்சின் மூலமாகவே கிடைத்தன. இஸ்க்ராவுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு ஏற்படுத்த அவர் முயன்று வந்தார். இவான் வசீலியெவிச் பாபுஷ்கின் இஸ்க்ரா செய்தித்தாளின் மிக ஆர்வமுள்ள நிருபராகவும் அதன் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார்.தயை மையப் பிரதேசத்திலிருந்து பாபுஷ்கின் தெற்கே எக்கத்தெரீனஸ் லாவுக்கு வந்தார். அங்கே அவர் கைது செய்யப்பட்டு அலெக்சாந்திரவஸ்க் சிறையில் இடப்பட்டார். சிறைச்சாலை ஜன்னல் அரண்கம்பிகளை அரத்தால் அறுத்து துண்டித்து, மற்றத் தோழர்களுடன் அவர் தப்பி ஓடினார். அயல் மொழி ஒன்று கூட அறியாமல் அவர் இலண்டன் போய்ச் சேர்ந்தார். இஸ்க்ரா செய்தித்தாளின் அலுவலகம் அப்போது இலண்டனில் இருந்தது.

அங்கே பல விசயங்கள் பற்றிப் பேச்சுவார்த்தை நடந்தது. பல பிரச்சினைகள் சேர்ந்து விவாதிக்கப்பட்டன… ஆனால் கட்சியின் இரண்டாவது பேராயத்தில் கலந்து கொள்ள இவான் வசீலியெவிச் பாபுஷ்கினுக்கு முடியவில்லை. சிறைச்சாலையும் சைபீரியச் சிறைக் குடியிருப்பும் அவரை நீண்ட காலத்துக்கு வேலை செய்ய விடவில்லை. ஏற்றத்தில் இருந்த புரட்சி அலை புதிய ஊழியர்களையும் புதிய கட்சித் தலைவர்களையும் முன்னணிக்குக் கொண்டு வந்தது. பாபுஷ்கினோ அந்தக் காலத்தில் தொலைதூர வடக்கில், வெர்ஹயான்ஸ்கில் வசித்து வந்தார். கட்சி வாழ்க்கை யிலிருந்து அவர் அறவே துண்டிக்கப்பட்டிருந்தார். நேரத்தை அவர் வீணாக்கவில்லை. கற்றார், போராட்டத்துக்கு முன்னேற்பாடுகள் செய்தார், சிறைக்குடியிருப்புத் தோழர்களான தொழிலாளர் களுக்குப் பயிற்சி அளித்தார். அவர்களை அரசியல் உணர்வு பெற்ற சமூக ஜனநாயகவாதிகளாக போல்ஷ்விக்குகளாக ஆக்க முயன்றார்.

1905-இல் பொதுக் குற்ற மன்னிப்பு வழங்கப்பட்டதும் பாபுஷ்கின் ரசியாவுக்கு

புறப்பட்டார். ஆனால் சைபீரியாவிலும் அந்தக் காலத்தில் போராட்டம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. எனவே பாபுஷ்கின் போன்றவர்கள் அங்கேயும் தேவைப்பட்டார். கள். அவர் இர்க்கூத்ஸ்க் கமிட்டியில் சேர்ந்து முழு மூச்சாக வேலையில் முனைந்தார். அவர் கூட்டங்களில் பேசவும் சமூக – ஜனநாயகக் கிளர்ச்சிப் பிரசாரம் நடத்தவும் எழுச்சிக்கு ஏற்பாடு செய்யவும் வேண்டி இருந்தது. இன்னும் ஐந்து தோழர்களுடன் அவர்களுடைய பெயர்கள் நமக்குத் தெரிய வரவில்லை பாபுஷ்கின் ரயில் வண்டிப் பெட்டி ஒன்று நிறைய ஆயுதங்கள் ஏற்றிக் கொண்டு காட்டின் உள் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது ரென்னென்கம்ஃபின் தண்டனைப் படைப்பிரிவு ரெயில் வண்டியைப் பிடித்துக் கொண்டது. ஆறுபேரும் எவ்வித விசார ணையும் இல்லாமல், அவசரமாகத் தோண்டப்பட்ட பொதுப் புதை குழியின் விளிம்பில் நிறுத்தப்பட்டு உடனே சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அவர்கள் வீர மரணம் அடைந்தார்கள். நிகழ்ச்சியை நேரில் கண்ட படையினரும் அதே ரெயில் வண்டியில் இருந்த இருப்புப் பாதைத் தொழிலாளர்களும் அவர்களுடைய சாவு பற்றி விவரித்தார்கள்.

பாபுஷ்கின் ஜாரின் தனிப்படையினது மிருகத்தனமான தண்டனை நடவடிக்கைக்குப் பலி ஆகிவிட்டார். ஆனால் எந்த வேலைகளுக்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாரோ அந்த பணிகள் மடியாது என்றும், பதினாயிரக்கணக்கான, நூறாயிரக் கணக்கான, பத்து இலட்சக் கணக்கான பிற கரங்கள் அதைச் செய்யும் என்றும், இந்தச் செயலுக்காக வேறு தொழிலாளித் தோழர்கள் உயிர் வழங்குவார்கள் என்றும், வெற்றி பெறும்வரை அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்றும் அவர் அறிந்திருந்தார்.

-தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here