“…காதலிப்பது என்றால்
பகுத்தறிவைத் தள்ளு!”

இது உண்மைதானா? இப்படித்தான் காதலிக்க வேண்டுமா? தற்காலத்தில் இதற்குத் திருத்தம் தேவை என்று நினைக்கிறேன்…

என்னுடைய நம்பிக்கைகள், முயற்சிகள் ஆகியவற்றின் வட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் அளவுக்கு நாள் பகுத்தறிவை இழந்து விட வேண்டுமா? கூடாது!

காதல் எவ்வளவுதான் வலியதாய் இருந்தாலும் என்னுடைய கருத்தோட்டத்துக்குப் பொருந்த வேண்டும் என்று திட்டவட்டமாக உனக்குக் கூறி விடுகிறேன். இல்லாவிட்டால் நான் அதை என் நெஞ்சிலிருந்து பறித்து அகற்றிவிட வேண்டும் அல்லது மடிந்து விட வேண்டும். இந்த வரிகளைப் படித்ததும் ஒருவேளைத் இப்படிச் சொல்லலாம்: “ஒ, வீரம் பேசுகிறாயோ! அப்படியானால் பையா, உனக்கு ஏதோ சரியாய் இல்லை என்று அர்த்தமாகிறது.”

நீ நினைப்பது சரியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவு வைத்துக்கொள். காதலிக்கும் இருவரில் ஒருவர் மற்றவரின் செல்வாக்கிற்கு உள்ளாக வேண்டும். பிறகு இந்த நிலை மாறலாம், ஆனால் முழுமையான சமத்துவத் தைக் கடைப்பிடிப்பது அனேகமாக இயலாது. காதலுக்கு உரியவரின் செல்வாக்கிற்கு உள்ளாவது அவ்வளவு மோசமானதா என்ன? இல்லை என்றே சொல்ல வேண்டும்! ஆனால் காதலரின் கருத்தோட்டம் புரிவதாகவும் மதிப்புக்கு உரியதாகவும் இருக்கும் போதுதான் இது நியாயமாகும்.

வாழ்க்கையின் அர்த்தம் மனிதகுலத்தின் இன்பத்தில் அடங்கி இருக்கிறது சிறப்பாகக் கூர்மையான கோணங்கள் தேய்ந்து மென்மை ஆவது அப்போதுதான் தொடங்கும். சமூகத்தின் ஒடுக்குமுறை மட்டுமீறி வலியதாக இருந்தால் அதிலிருந்து என்று தனிநபரின் விடுதலை அப்போது நிகழும். இவை எல்லாவற்றிலும் நீ என்னுடன் இசைகிறாய் நினைக்கிறேன். ஆகவே, பிரச்சினை செயல் உத்தியை பற்றியது. உன் செயல் உத்தி எத்தகையது? எது முதலாவது, எது அடுத்தது? இப்போது எது மிக இன்றியமையாது செய்ய வேண்டியது என்று உனக்குத் தோன்றுகிறது? எந்த நடவடிக்கைகள் விரும்பத் தக்கவை என்று நினைக்கிறாய்? இவை எல்லாம் சமூக விவகாரங்கள். சொந்த விவகாரங்களோ? தாத்தூ, இந்தக் காலத்தில் சொந்த விவகாரங்கள் சில வேளைகளில் பொது நலனுக்கு அடிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவற்றை ஒரேடியாக விட்டு விடவும் முடியாது. அப்படிச் செய்வது தேவையும் இல்லை. ஏனெனில் தனிப்பட்ட முறையில் என்னைத் திருப்திப்படுத்திக் கொள்ளாமல் பொது நலத்துக்காகத் தேவையான வகையில் போராட என்னால் முடியாது. சொந்த நலத்தை நிறைவேற்றிக் கொள்வதும் பொது நலத்தைப் போராடிப் பெறுவதும் அறிவார்ந்த விதத்தில் ஒருங்கிசைவுடன் இணைக்கப் பட வேண்டும்… நிறைய எழுதுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இப்போதோ, உன்னுடன் முடிவின்றிப் பேசிக் கொண்டிருக்க ஆசையாய் இருக்கிறது. என்ன செய்வது? இந்த நாட்களில் என்னை எனக்கே அடையாளம் தெரியவில்லை! நான் சிந்தனை செய்வதும் கனவு காண்பதும் உன்னைப் பற்றித்தான். சாவைப் பற்றி நான் நினைப்பதே இல்லை, அது நிலவவே இல்லை போல. நம் அன்புக்கு உரிய ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்த பின் சாவது அவ்வளவு பயங்கரமாய் இல்லை. ஆனால் இவ்வாறு இல்லாவிட்டால் உள்ளத்தில் வெறுமையை உணர்ந்திருப்பேன்!…

…ஹார்க்கவ் நம்மவர் வசம் ஆகிவிட்டது. எக்கத்தெரீனஸ் லாவை மீண்டும் கைப்பற்றுவதற்காகச் செஞ்சேனை போரிட்டுக் கொண்டிருக்கிறது. அஷ்ஹாபாத் நம் கைக்கு வந்துவிட்டது. நம்மவர் கிராஸ்னவோத்ஸ்க் நகரை நோக்கித் தாக்கி முன்னேறுகி றார்கள். எங்கும் முறியடிக்கப்பட்ட எதிர்ப்புரட்சி ஜெனரல் கல்ச்சாக்கின் படைகள் தாறுமாறாகப் பின்வாங்கி ஓடுகின்றன. சிறைப்படக் கூடாது என்பதற்காகக் கல்ச்சாக் சுட்டுக் கொண்டு இறந்து விட்டதாகக் கூட வதந்தி உலாவுகிறது. நம்மவர்கள் ஸ்லத்தவூஸ்தை நெருங்கி விட்டார்கள். இத்தாலியிலும் பிரான்சி லும் புரட்சி இயக்கம் தொடங்கிவிட்டது. நம்முடைய, ரசியாவினு டைய விவகாரங்களில் தலையிடுவதை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் உறுதியாக எதிர்த்திருக்கிறார்கள். இவ்வளவுக்குப் பின் மகிழ்ச்சி கொண்டாடாமல் இருப்பது எப்படி?

அருமைத் தாத்தூ, சிறையிலிருந்து வெளியேறிச் சுதந்திரமாக இடைவிடாது உழைக்க எவ்வளவு ஆவலாய் இருக்கிறது, தெரி யுமா? இத்தகைய மாபெரும் கணத்தில் நிகழ்ச்சிகளிலிருந்து தொலைவில் இருப்பது எவ்வளவு படுமோசம்!

இப்படி நீண்டகாலம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ஒன்று வெற்றி, இல்லாவிட்டால் வீழ்ச்சி. இந்தக் கல்மூட்டையி லிருந்து தப்பி வெளியேற எல்லா முயற்சிகளையும் செய்வேன். சில ஏற்பாடுகள் இப்போதே செய்து கொண்டிருக்கிறோம்: துப்பாக்கி, அரம் முதலியவை சேகரித்து விட்டோம். எங்கள் அறைக்குத் தனிக்காவல் போடப்பட்டிருக்கிறது. இது பெருத்த இடைஞ்சலாய் இருக்கிறது…

சிறையில் அடைபட்டிருந்தாலும் நான் உலகிலேயே எல்லாரிலும் செல்வன் என்று இப்போது உணர்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று சூரியர்களின் கதிர்கள் என்னை முழுக் காட்டுகின்றன: எல்லோருக்கும் பொதுவான சூரியன், சோவியத் ஆட்சி. முடிவில் நீ, இவையே என் சூரியர்கள், நீ எனது கதிரவள்…

ஒருமுறை நான் மாஸ்கோ செல்லப் புறப்பட்டபோது உன் தாயாரும் நீயும் என்னை வழியனுப்ப வந்தீர்களே, நினைவு இருக்கிறதா? அப்போது நான் உன் நினைவாகவே மாஸ்கோ சென்றேன். மாஸ்கோவில் இருந்தபோது நான் உன்னை நினைக்காத நாள் ஒன்று கூட இல்லை. நீ அழகிய, இனிய சிறுமி (இது ) நடந்தது 1915-இல் என்று நினைக்கிறேன்). பின்னர் புரட்சியின் தொடக்கத்தில் நான் உங்கள் வீட்டில் வசித்த போது அனேகமாகக் கோடைகாலம் முழுவதும் நோயுற்ற நிலையில் இருந்தேன். எனக்கு மிகக் கெடுதலாய் இருந்த மாஸ்கோ பனிக்காலத்தின் விளைவு இது. அப்போது நான் சதா என்னையே எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தேன். உனக்கு அதிகத்திலும் அதிகமான இன்பம் அளிக்கக்கூடிய மனிதன் நான் அல்ல என்ற முடிவுக்கு வந்தேன். இது என்னை நிலைகுலையச் செய்யும் முடிவு… எனக்கு நினைவு இருக்கிறது, ஒரு முறை நி.யுடன் பொதுவாக, எவர் பெயரையும் குறிப்பிடாமல், கவர்ச்சியையும் காதலையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். நான் இன்பத்துக்கு

ஏற்றவன் அல்ல, காதலிக்கு இன்பம் அளிக்க வல்லவன் அல்ல என்று தெரிந்தால் விலகிப் போய்விடுவேன், போய்விட வேண்டும் என்று அப்போதும் கருத்து தெரிவித்தேன். தவிர இந்த விசயமும் மிக முக்கியமானது: உனக்கும் எனக்கும் இடையே சமத்துவம் ஒரு போதும் இருக்க வில்லை. நான் போதனை ஆசிரியன் போலவும் நீ மாணவி போலவும் எப்போதும் இருந்து வந்தோம். அட இந்தப் பேச்சுப் போதும்! தாத்தூ, என் காதல் எனது உணர்வுப் பெட்டகத்திலும் எனது உலகக் கண்ணோட்டத்திலும் மாற வேண்டும் என்று எண்ணுகிறேன், ஏனென்றால் என் காதலி என் நண்பனின் இடத்தையும் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்… என் கருத்துப்படி இது எல்லாவற்றிலும் முக்கியமானது. நீயே என் காதலி, நீயே என் நண்பன்!

அன்புள்ள தாத்தூ!
இதைப் பெத்ரோகிராதில் எழுதுகிறேன்.
இரயில் நிலையத்தில், பெட்டியில் இருந்தபடி. நான் சுட்டுக் கொல்லப்படலாம்.
எனக்குச் சிறிதும் அச்சம் இல்லை. நான் உங்களைக் காதலிக்கிறேன்.

உல்லுபீ.

குறிப்பு:

1919. ஆகஸ்டு 16-ந் தேதி இரவு, தண்டனை விதிக்கப் பெற்றவர்கள் சுடுகளத்துக்கு இட்டுச் செல்லப்பட்ட போது உ. புய்னாக்ஸ்கி தனது காதலி தாத்தூ புலாச்சுக்குக் கடைசிக் கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினார், “என் வாழ்க்கையின் புலர் போதில் என் நண்பன் உல்லுபீ புய்னாக்ஸ்கிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முழு மூச்சாகப் பாடுபட்டு வருகிறேன். “கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை மக்களுக்குத் தொண்டு செய்வேன்” என்பது அந்த வாக்குறுதி” என்ற தாத்தூ புலாச் பிற்காலத்தில் கூறினார். தாகிஸ்தானின் முதல் இளங் கம்யூனிஸ்டும், கம்யூனிஸ்டுமான தாத்தூ இளங் கம்யூனிஸ்டுகள் கழக மாவட்டக் கமிட்டித் தலைவியாகவும் கம்யூனிஸ்டுக் கட்சி மாவட்டக் கமிட்டியின் முதலாவது மாதர் பிரிவின் தலைவியாகவும் பணி ஆற்றினார். / 920-இல், பாக்கூ நகரில் இருந்த கீழை நாட்டு இளைஞர் மன்றத்தின் செயலாளராகத் தாத்தூ புலாச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here