கொரோனா கால பேரிடரிலும் கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையையும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது பாசிச பாஜக கும்பல். இதனால் வேலை இழப்பு, வருவாய் இழப்பு, போன்றவைக்கிடையே உழைக்கும் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலும், அவலமும் உருவாகி ஆட்கொன்டிருந்தது.
இந்த சூழலில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் விலை உயர்வு உழைப்பாளி மக்களை மட்டுமின்றி, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்தது.
நீருபூத்த நெருப்பாக இருந்த கடுமையான வாழ்க்கை பிரச்சினைகளை இந்த சிலிண்டர் உயர்வு மிகவும் கொடுமையான வாழ்க்கைக்கு தள்ளியது. கார்ப்பரேட்டுகளின் கொள்ளைகளுக்கு எமது மக்களின் வாழ்வை சூறையாடாதே என்ற போர் குரலை எழுப்பும் என்ற வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது.
சமையல் கேஸ் விலையை பாதியாக குறை என்ற பிரச்சாரம் உழைக்கும் மக்களிடையே பெரும் வரவேற் பையும், ஆதரவையும் பெற்றது.
தமிழகத்தில் பாசிச பாஜக கும்பல், பாலியல் ஜனதா பார்ட்டியாக நாறுவதற்கு உதவிய அதன் உயர்மட்ட பிரமுகர் கே.டி.ராகவனின் கிருஷ்ண லீலைகளில் அம்பலமாகி மக்களிடம் முகம் கொடுக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
இந்த கேடுகெட்ட ஆபாச வக்கிர செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களை கண்டு மனதில் பொருமலுடன் இருந்த மக்களிடையே மக்கள் அதிகாரம் தோழர்களின் வீச்சான பிரச்சாரம் புதிய நம்பிக்கையை ஊட்டியது. மக்கள் நமக்கான பிரச்சனையை பேசுகிறார்களே! என்ற அங்கீகாரத்தை வழங்கி துண்டு பிரசுரங்களை வாங்கி படித்ததுடன் மற்ற விளம்பர பிரசுரங்களை போல் தூக்கி வீசாமல் பத்திரமாக வைத்ததை காண முடிந்தது. அந்த வகையில் தமிழகமெங்கும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பேசும் சூழலை உருவாக்கியது. மக்கள்பிரச்சனைகளை நிகழ்ச்சிரலுக்கு கொண்டு வருவதற்கும் ஒரு போராட்டம் தேவை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது. கொரோனா பரவல் என்று மக்களை அச்சுறுத்தி மக்கள் மீது பாசிச அடக்குமுறைகளை எந்தவித தடையும் இன்றி அமுல்படுத்தி வந்த அரசுக்கு இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தடை கல்லாக என்று கருதக்கூடிய வகையில் மக்களின் ஆதரவு அமைந்தது.

தன்னுடைய குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் இவ்வளவு விசயங்கள் எங்களுக்காக பேசுவது முன்கூட்டியே அறிந்திருந்தால் என்னுடைய அப்பார்ட்மெண்ட் முழுக்க உள்ள பெண்களை கலந்துகொள்ளச் செய்திருப்பேன் என்று ஆதங்கப்பட்டதில் இருந்து போராடாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வில்லை என்று உணர்ந்த இருப்பதை கண்கூடான உதாரணமாக அமைந்திருந்தது.
கொரோனா ஊரடங்கால் முடங்கிய மக்கள் போராட்டங்களை மக்கள் அதிகாரத்தின் ஆர்ப்பாட்டம் போராடும் மக்களுக்கு, ஜனநாயக உரிமைகளுக்கு போராடும் பிற அமைப்புக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை.

போராட்டம் குறித்து செய்திதாள்களில் வந்த புகைப்படங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here