என்ன நடந்திருக்கும் ஜாஃப்ரிக்கு? முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆதாரம் வெளிவந்தது – பாகம் 4

நீதிபதி தேசாயின் விசித்திரமான முடிவு மற்றுமொன்று. "போலீஸ்காரர்களும் கொலையில் கூட்டுகளவாணிகள்" என்பதையும் சேர்த்து ‘புதைத்துவிட’ கூறினார்.

0
54

பாகம் – 3ன் தொடர்ச்சி..

பாகம் 4

P.B.தேசாய் அவரது கோர்ட்டுக்கு சாட்சிகள் வைக்கப்பட்டபடி முடிவான அறுதியிடலுக்கு இட்டுச் சென்றது. அதாவது கல் எறிந்து முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதப்படுத்திக் கொண்டிருந்த ஒரு கும்பல்  ‘திடீரென்று ரத்தப் படுகொலை செய்கின்ற கோரகும்பலாக மாறியது’. எதனால்? இஷான் ஜாஃப்ரி தனது உரிமம் பெற்ற துப்பாக்கியில் இருந்து (Private firing) கும்பலை நோக்கி சுட எடுத்த முடிவு மிக மோசமாகி தூண்டப்பட்டு நடந்தது. ஜாஃப்ரியின்  (எச்சரிக்கை சூடு) ஒரு சாவில் முடிந்தது. நீதிபதி இதை சாட்சிகளின் செலெக்ட்டிவ் அம்னீசியா என்கிறார். (அச்சாட்சிகள் தப்பி பிழைத்தவர்கள் என்பதை உணரவும்- மொ.பெ) கனம் நீதிபதி போலீஸ் அதிகாரிகளின் சாட்சிகளையே முழுதும் நம்பினார். அந்த அதிகாரிகள் ஒரே குரலில் ஜாஃப்ரியின் துப்பாக்கிச் சூடே கும்பல் வெறி கொண்டதற்கு காரணம் என்றார்கள்.

அந்த ‘அறிஞர்’ நீதிபதியோ ரொம்பவும் மொட்டையாக பிரதிவாதி வழக்கறிஞர் மற்றும் போலீஸ் தரப்பு சொன்ன எல்லா சாட்சிகளையும் மட்டுமே ஒப்புக்கொண்டுவிட்டார். ஜாஃப்ரி படுகொலைக்கு முக்கிய காரணம் – அதுபோலவே அவரோடு தஞ்சம் புகுந்திருந்த மக்களின் கொலைகளுக்கும் காரணம்– ஜாஃப்ரியே தான். அவர் சுடவில்லை என்றால் பத்தாயிரம், பதினைந்தாயிரம் பேர் கொண்ட கும்பல் ஒரு சில அட்டூழியக் கொள்ளை நடத்திவிட்டு கலைந்து போயிருக்கும் என்பது மேதகு நீதிபதி தேசாயின் முடிவு. ஜாஃப்ரி அப்படி செய்ததே கும்பலை தூண்டி அவரையும், குல்பர்க் வளாகத்தில் அவருடன் இருந்த 70 பேரையும் கொலை செய்ய இட்டுச் சென்றது. இதற்கு துணை நின்றவையே SIT மற்றும் முதலமைச்சர் மோடிக்கு மிக இணக்கமான அதிகாரிகளின் வாதங்கள்.

நீதிபதி P.B. தேசாய் மற்றும் மோடியின் முடிவுகள் தெரிவிப்பது என்ன? 28-02-2002 அன்று குல்பர்க் குடியிருப்பில் என்ன நடந்தது? அது எப்படி பலவித கொலை, கற்பழிப்பு, சூறைகள் மற்றும் கலவரங்களை தொடர்ந்து பல வாரங்களுக்கும் கொண்டு சென்றது? என்கிற கேள்விகளுக்கு,அவற்றின் பதில்விவரங்கள் நாட்டில் மதவெறி எப்படி நடக்கிறது என்பதற்கான பொதுவான விவரங்களாக கட்டமைக்கப்பட்டு உள்ளதை உணர்த்துகிறது. (மத வெறியால் தீவிரமாக உருவேற்றப்பட்ட சூழல் என்று நான் கருதுகிறேன் – ஹர்ஷ் மந்தேர்)

குஜராத் இனப்படுகொலை: இஷான் ஜாஃப்ரிக்கு என்ன‌ நடந்தது? | பாகம் – 1                                      ஜாஃப்ரிக்கு என்ன நடந்தது? பாகம்- 2                                                                                                                    என்ன நடந்திருக்கும் ஜாஃப்ரிக்கு? முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆதாரம் வெளிவந்தது  பாகம் – 3 

அந்த பதிப்பின்படி எவற்றை மத கலவரங்கள் என்று பொதுப்படையாக சொல்கிறார்களோ அந்த சம்பவங்களில் எல்லாம் முஸ்லிம்களே; அதிகம் பேர் உயிரை இழந்தார்கள்; சொத்துக்களை இழந்தார்கள்; பாலியல் வன்முறைகளை சந்தித்தார்கள் என்பதே உண்மை.! ஆனால் அது சொல்ல வருகின்ற மற்றொரு பொய் – இந்துக்களை தூண்டுவதே முஸ்லிம்களின் செயல்கள் தான்! இவ்வளவு ரத்தப் பலி, எரியூட்டு எல்லாம் அவர்களின் தேவையற்ற தூண்டப்படாத வன்முறை துரோகங்களால் தான். இந்து கோயில்கள், பெண்கள், மற்றும் பிரச்சாரத்திற்கு எதிராக கோத்ரா !!    – குல்பர்க் வளாகத்தை போல, மிக அடிப்படையாக அமைதியை நேசிக்கின்ற இந்து மக்களுக்கு எதிராக அவர்கள் செய்த துரோகங்கள் தான்!?

குல்பர்க் இனப்படுகொலையை பொறுத்தவரை படிப்பாளி நீதிபதி, SIT சொல்ல வருவது இதுதான் 10,000 -15,000 பேர் கொண்ட கும்பல் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிற வீட்டு வளாகத்தில் வெளியே தன்னெழுச்சியாக திரண்டார்கள். யாரும் கொலைகளை திட்டமிடவில்லை; எவருமே அவர்களுக்கு கொலை கருவிகளை, கத்திகளை, குத்துவாள்களை, அமிலக் குண்டுகளை, துப்பாக்கிகளை, பெட்ரோல் டப்பாக்களை, கிராசின் டப்பாக்களை, ஏராளமான கேஸ் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து தரவில்லை; அத்தனை பேர் கூட்டமாக திரண்டாலும் முஸ்லிம்களை கொல் என்று வெறிகொண்ட முழக்கங்களை கொடுத்தனர். ஆனால், அவை அறிவாளி நீதிபதிக்கு – அந்த கும்பல் திரண்டது முஸ்லிம்களை உண்மையாகவே கொல்வதற்கானதல்ல. அவர்களின் ஒரு சில சொத்துக்களை கொளுத்தி விட்டு தங்கள் வீடுகளுக்கு அமைதியாக திரும்பி விடுவதற்காக – வினோதமான புரிதல் உள்ள நபர்தான்!!

அன்றும் – தொடர்ந்த வாரங்களிலும் வெட்டுக் கொலைகள்; முஸ்லிம் குழந்தைகள், பெண்களை கற்பழிக்க, ஆண்களைக் கொல்ல, அகமதாபாத் முழுவதும் மட்டுமல்ல ; குஜராத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் பரவிய கலவரம் எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் நீதிபதி தேசாய் கூற்றே வேறு! குல்பர்க்கில் திரண்ட கும்பல், கூட்டம் வேறு மாதிரி. அவர்கள் கொல்ல வரவில்லை; கற்பழிக்க வரவில்லை; அவர்கள் மீது ஜாஃப்ரி சுட்டதற்கு பிறகு, மறுபடி தன்னெழுச்சியாக மட்டுமே பலரக வன்முறை ஆயுதங்களை திரட்டி சேகரித்தனர்; கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோல், கெரோசின் போன்ற எரிபொருள்கள் சேகரித்தனர்; குல்பர்க் குடியிருப்பு வளாகவாசிகளுக்கு எதிராக கலவரமும் கொடூர கொலைகளும் கற்பழிப்பும் செய்தனர்.

நீதிபதி தேசாயின் விசித்திரமான முடிவு மற்றுமொன்று. “போலீஸ்காரர்களும் கொலையில் கூட்டுகளவாணிகள்” என்பதையும் சேர்த்து ‘புதைத்துவிட’ கூறினார்.  இந்த குற்றச்சாட்டில் சாட்சியத்தையோ அதற்கே உரியதான நியாயத்தையோ அவர் சற்றும் பொருட்படுத்தவில்லை. குல்பர்க் வளாகம் மத்திய அகமதாபாத்தில் உள்ள சாமான்புராவில் தான் உள்ளது. காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு மட்டுமே, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் மட்டுமே. இந்த குல்பர்க் வளாகத்தில் அதிகம் முஸ்லிம்கள் வாழ்ந்தனர்; நகரத்தில் இந்துக்கள் அதிகம் இருந்த பகுதியில் இருந்த வளாகம் இது ஒன்றுதான்; நகரின் இப்பகுதி தான் “இந்து !முஸ்லிம்! “என்று கூர்மையாக பிரிந்திருந்த பகுதி; மிக மிக அடிப்படையான காவல் விதி நடைமுறைப்படி பார்த்தாலும், அதிலும் அத்தகைய மதவெறிக் கலவரச் சூழலில், கணிசமான போலீஸ் படை குல்பர்க் குடியிருப்பை பாதுகாக்க முன்கூட்டியே அங்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

படுகொலை நடந்த குல்பர்க் சொசைட்டி

மூத்த போலீஸ் அதிகாரிகள், அதிலும் விவாதத்துக்குரிய போலீஸ் கமிஷனர் பி.சி. பாண்டே காலை 10:30 மணிக்கு அந்த பகுதிக்கு வந்து சென்று இருக்கிறார். யாரும் இதை மறுக்கவில்லை; வெறி கொண்ட கூட்டம் திரள்வதையும் பார்த்தார்கள்; அவர்களோடு ஆயுதம் தாங்கிய தாக்குதல் படை வந்தது. ஆனால் குறிப்பிட்ட வளாகத்தை சுற்றி பாதுகாப்பு போடவில்லை.

குல்பர்க் வளாகத்தின் அருகே காலை 9 மணிக்கு திரண்ட கணிசமான காவல் படை; கும்பலை விரட்ட, உயிர் பிழைத்தவரை காப்பாற்றச் சென்ற நேரமான 4.30 பிற்பகலுக்கும் இடையே, முழு எட்டரை மணி நேரம் கடந்து விட்டது என்பதையும் யாரும் மறுக்கவில்லை; காலையிலேயே போதிய படை பாதுகாப்பு கொடுத்திருந்தால், தேவையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தால் அத்தனை எண்ணிக்கையில் அந்த வெறி கும்பல் கூடியிருக்கவே சாத்தியம் இல்லை.

நீதிபதி தேசாய்! அவருக்கு முன்னால் கோர்ட்டுகளில், சட்ட கமிஷன்களில் மற்றும் பலர் என்ன செய்தார்களோ ?அதையே செய்துள்ளார்.

ஒரு வழியாக கணக்கு காட்டி அனுப்பப்பட்ட போலீஸ் 3 அல்லது 4 மணி நேரம் முன்பே அனுப்பப்பட்டிருந்தால் 70 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்; கற்பழிப்புகள் தடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் மாலை 4.30 வரை 24 போலீசாரே போடப்பட்டிருந்தார்கள். கும்பலை அவர்களால் ஏதும் செய்திருக்க முடியாது. இந்த 24 போலீசாரின் அறிக்கைகளை அறிவாளி தேசாய் நம்பினார். அது போலவே ஜாஃப்ரி தான் வெறிகொண்டு, படுகொலை நடத்தப்பட காரணம் என்று முடிவும் செய்தார். மாவட்ட ஆட்சியராக 1984 க்கும் 1989 க்கும் இடையே பெரிய மதவெறி படுகொலை சம்பவங்களை கையாண்டு இருக்கிறேன். சமீபத்திய பத்தாண்டுகளில் நடந்த மதவெறி படுகொலைகளை ஆராய்ந்து இருக்கிறேன். போலீசு, நிர்வாகம் மிகப்பெரிய மதவெறிச் செயல்களை தடுக்க உறுதி எடுத்தால் ஒரு சில மணிக்குள்ளாக தடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் நிறுத்திக் கொண்டது ஏன்? கிரிமினல் குற்ற நடவடிக்கை கையாள்வதில் திறமை இல்லாதது அல்லது  மதவெறி அரசியலின் வழிகாட்டுதலோடு கிரிமினல் கூட்டு சேர்ந்திருப்பது; மேல்மட்டத்தில் இருந்து அத்தகைய அழுத்தம்  இருக்கவே, நிச்சயமாக அதிக வாய்ப்பு உள்ளது. மதவெறி ரத்தம் பெருக்கெடுத்து வளர இதுவே காரணம். நீதிபதி தேசாய்! அவருக்கு முன்னால் கோர்ட்டுகளில், சட்ட கமிஷன்களில் மற்றும் பலர் என்ன செய்தார்களோ ?அதையே செய்துள்ளார். போலீஸ் தரப்பு அறிக்கையை விமர்சனம் எதுவும் இல்லாமல் அப்படியே ஏற்பது, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல், இருக்கும் கிரிமினல் அநீதிக்கு துணை போனது, எந்த அரசியல் தலைமை இவற்றை செய்ய வழிகாட்டுகிறதோ, அதற்காக வலிய தொண்டூழியம் செய்யும் போலீசின் கிரிமினல் கூட்டை காணாமல் முகம் திருப்பிக் கொள்வது என்பதே தீர்ப்பில் அம்பலமாகி உள்ளது.!.

(தொடரும்…)

  • இராசவேல்

முந்தைய பதிவுகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here