தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் கூட்டணி நாளை , ஆகஸ்ட் 24 ஆம் திகதி Sri Lanka Foundation Institute, 100 Independence Square, கொழும்பு 7 யில் பிற்பகல் 2.30 மணிக்கு அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.

இதற்கு எதிர்த்தரப்பு கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், துறைசார்நிபுணர்கள், மதகுருமார்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல், கைதுகள், பாரிய அளவில் தடுப்புகளுக்கு எதிராக பொது முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களின் தொடக்க புள்ளியாக அமையும் என நம்புகிறோம்.

இக் கூட்டத்தில் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அரசுக்கு எதிரான கலகமாக சாயம்பூச முனையும் முயற்சிகளை பற்றி முக்கிய கவனம் செலுத்தப்படும்.

எனவே நாளைய கண்டன கூட்டத்தில் அனைவரும் பங்கு கொண்டு உங்கள் ஆதரவை வழங்குமாறு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் கூட்டணி அழைக்கின்றது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் கூட்டணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here