பத்திரிகை செய்தி
நாள் – 08.11.2026
தமிழ்நாடே ஒன்றுபடு!
மாநில தன்னாட்சியை வென்றெடு!
மாநில உரிமைகளை காவு கொடுக்கும் பாசிச பாஜகவின் B டீம் விஜய் ஆட்சி!
இந்திய ஒன்றியமானது பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கி துப்பாக்கி முனையில் ஒற்றுமையை உருவாக்கி வைத்துள்ள நாடாகும்.
பல்வேறு தேசிய இனங்கள் தனது உரிமைகளுக்காக போராடினாலோ அல்லது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை பற்றி பேசினாலோ அது இந்திய தேசியத்திற்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் பிரிவினைவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டங்களின் கீழ் அடக்குமுறை ஏவப்படுகிறது.
நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டபோது அதிகாரங்களை ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல், ஒத்திசைவு பட்டியல் என பிரித்ததுடன் பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை சட்டப்படியே அங்கீகரிப்பதாக கூறிக்கொண்டு மாநிலங்களுக்கு சில அம்சங்களை கையாள்வதற்கான உரிமையும் மத்திய அதாவது ஒன்றிய அரசுக்கு சில அம்சங்களை கையாளுவதற்கான உரிமையும் கொண்ட கூட்டாட்சி முறையை முன்வைத்தது. ஆனால் அரை கூட்டச்சியாகவே செயல்பட துவங்கியது.
இந்நிலையில் படிப்படியாக மாநில பட்டியலில் உள்ள கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு சென்றது. ஏற்கனவே இந்தியாவை பல ஆண்டு காலம் ஆண்டு வந்த பாசிச இந்திராவின் ஆட்சி. 2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை கைப்பற்றிய பாசிச பாஜக ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே கட்சி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை அதாவது மாநிலங்களின் உரிமைகளை அனைத்தையும் பறித்துக் கொண்டு இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தின் கீழ் உரிமைகளற்ற மாகாணங்களைப் போல அல்லது மாவட்டங்களைப் போல கையாள துவங்கியது.
இதனை காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து போராடின. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி உரிமையை முன்வைத்து போராடிய அனுபவம் கொண்ட திராவிட இயக்கங்களில் ஒன்றான திமுக குறிப்பாக மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கு குரியன் ஜோசப் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது.
படிக்க: நீதிபதி குரியன் தலைமையிலான உயர்நிலைக் குழுவை கலைத்ததன் பின்னணி
மாநிலத்திற்கும், ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள அதிகார பகிர்வு உள்ளிட்ட உறவுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை முன்வைத்து குரியன் ஜோசப் அளித்த முதல் கட்ட அறிக்கை இன்னமும் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது..
இந்த சூழலில் பாசிச பாஜகவின் திட்டத்தை அமல்படுத்துகின்ற வகையில் அதன் பினாமி கும்பலான பாசிச கோமாளி விஜய் ஆட்சி குரியன் ஜோசப் தலைமையிலான ஆணையத்தை கலைத்துள்ளது என்பது மட்டுமின்றி அது சட்டவிரோதமானது என்று புதிய வியாக்கியானங்களை முன்வைக்கின்றது.
இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பது மட்டுமின்றி பல்வேறு தேசிய இனங்கள் தனது உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு ஒன்றியமாக ஒன்றிணைந்து செயல்படுவது தான் பல காலங்களுக்கு நீடிக்கின்ற அறிவியல் பூர்வமான வழிமுறையாகும். அதற்கு மாறாக ஒற்றை தேசிய கண்ணோட்டத்தில் அதாவது இந்து இந்தி இந்தியா என்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் அணுகுமுறையின் கீழ் மாநிலங்களில் உரிமையை பறிக்கின்ற முயற்சியானது பல்வேறு எதிர் விளைவுகளை உருவாக்கும் என்று எச்சரிக்கின்றோம்.
மாநிலத் தன்னாட்சி என்பதே நமது முழக்கமாக ஒலிக்கட்டும் தன்னாட்சி உரிமை பெற்ற மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய ஒன்றியத்தின் கீழ் ஒரு நாடாக செயல்படுவது தான் பாசிச கும்பலுக்கு சரியான பதிலடி ஆகும். இத்தகைய கண்ணோட்டத்தில் குரியன் ஜோசப் தலைமையிலான ஆணையத்தை கலைத்ததை வன்மையாக கண்டிப்போம்!
குரியன் ஜோசப் ஆணையம் கொடுத்த முதல் பாகத்தை உடனடியாக அமல்படுத்தவும் அடுத்த பாகத்தை வெளியிடவும் வேண்டும்!
பாசிச பாஜகவின் B டீமாக செயல்படுகின்ற பாசிச கோமாளி விஜய் ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற வகையில் தமிழகம் ஒன்றுபட்டு எழுந்து நிற்கட்டும்!.
அறைகூவல் விடுக்கும்,
தோழர் திருச்சி செழியன்,
மாநில பொதுச் செயலாளர்.
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை
போன் – 9597138959







