பாகம் – 3

என்ன நடந்திருக்கும் ஜாஃப்ரிக்கு? முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆதாரம் வெளிவந்தது.

ஆஷிஷ் கேத்தான்- இளைய பத்திரிக்கையாளர், துணிச்சல் மிக்கவர். இன அழிப்புக்கும்  எரிப்புக்கும் பிறகு பல இந்துத்துவா தலைவர்கள், தொண்டர்களை போய் சந்தித்தார்; தான் இந்துத்துவ லட்சிய ஆதரவு கொண்ட எழுத்தாளர் என்று உருவம் எடுத்து உள்ளே இறங்கினார். அதில் முக்கிய மூன்று விஹெச்பி ஆட்கள் மாக்கிலால் ஜெயின், பிரகலாத் ஜி அசோரி, மதன்லால் ராவல். அவர்கள் குல்பர்க் குடியிருப்பில் நடந்தபடியே விளக்கினர். இவற்றை ஆசிஷ் முழுதாக பதிவு செய்தார்- அத்தனையும் ரகசியமாக.

அவர்கள் வெற்றிக் களிப்பில் பேசினார்கள்; கேத்தானிடம் விவரித்த போது அவர்களிடம் பெருமிதம் இருந்தது. இவ்வளவு கொடும் பாதகங்களை செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வின் சாயலும் இல்லை; ஜாஃப்ரி போலீஸ் அதிகாரிகளுக்கு,  தலைவர்களுக்கு எல்லாம் பேசினார்; எதுவும் பலன் தராத போது கும்பல் மீது ஜாஃப்ரி சுட்டார்; சிலர் காயம் அடைந்தார்கள். செய்வதறியாது ஜாஃப்ரி, அதுவும் பலன் தராத போது உள்ளே நுழைந்த கும்பல் வெட்டிக் கொன்றும், கற்பழித்தும் பற்ற வைத்த கோணிகளை வீடுகளுக்குள்ளே எறிந்து கொண்டும், கட்டுப்படுத்த முடியாத நிலையில் “காசு தருகிறேன் குல்பர்க்வாசிகளையும் என்னையும் விட்டு விடுங்கள்” எனக் கெஞ்சினார்.

இதை கேத்தானிடம் விவரித்தவர் சொன்னார். -காசோடு வெளியே வா என்று கூச்சலிட்டது கும்பல். கொண்டு வந்த பணத்தை கீழே வாசலில் போட்டு விட்டு உள்ளே போக முயன்றவரை கும்பல் பாய்ந்து பிடித்தது; ஐந்து ஆறு பேர் முரட்டுத்தனமாக இழுத்துப் பிடிக்க ஒரு ஆள் கத்தியால் வெட்டினான், கைகளை துண்டாக்கினான், கால்களை வெட்டினான், அப்புறம் ஒவ்வொரு உறுப்பாக துண்டுகளாக வெட்டிய பிறகு குவித்து வைத்த கட்டைகளின் மேல் வீசி தீ வைத்தும் கொளுத்தினார்கள்; உயிரோடு கொளுத்தினார்கள்; ஜாஃப்ரிக்கு அடுத்து, பயந்து நடுங்கி ஜாஃப்ரி வீட்டில் ஒளிந்திருந்தவர்களை, அங்கிருந்து ஓடிவிட முயன்றவர்களை வெட்டினார்கள். அவர்களையும் கொளுத்தினார்கள்.

கோர்ட்டுகளில் பிழைத்தவர்கள் சொன்ன வாக்குமூலங்களோடு அவை ஒத்துப் போயின. விஹெச்பி கதவடைப்பு அறிவித்த அன்று காலை ஏராளமான விஹெச்பி தொண்டர்கள், காலிகள், குண்டர்கள், திரட்டப்பட்டார்கள். கார்களில் கம்புகள், சுத்தியல் பெல்டுகளில் திரிசூலங்களுடன்:, முஸ்லிம் ஒருவரின் கடையை கொளுத்திக் துவங்கினார்கள். அவரது குடும்பம் இருந்த குல்பர்க் குடியிருப்புக்குள் நுழைந்தது கூட்டம். அருகே இருந்த ஏழை குடிசைப் பகுதிகள், குல்பர்க் வளாகம் என்று எல்லா இடங்களுக்கும் நெருப்பு போல் படர்ந்து வந்தார்கள்; அவர்கள் ஆட்கள் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்ததையும் சொன்னார்கள். குல்பர்க் வளாகத்தின் முன் பின் பக்கங்களில் அணி வரிசையில் நிற்பது போல நின்றார்கள். பிறகு தீ வைத்தது கும்பல். படார் படார் என்று சிலிண்டர் வெடி காதை பிளந்தது; சுவர்கள் நொறுக்கப்பட்டன.

போலீஸ் கலவரக்காரர்களுக்குத் தூபம் போட்டது, தூண்டி விட்டது. கயிறுகள் போட்டு, சுவர்களை தாண்டி குதித்தது கும்பல். மேகானின் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே ஜி எர்தா கலவரக்காரர்களிடம்,   “சாவகாசமாக மூன்று நான்கு மணி நேரம் இருக்குது கொன்று போடுங்கள்.” என்றே சொல்லியிருக்கிறார்; அந்த நேரத்தில் போலிஸ் வன்முறையை தடுக்க எதுவும் செய்யவில்லை. 4.30 மணி போலவே கூடுதல் போலீஸ் வந்து கும்பலை கலைத்தது.

ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி P.B. தேசாய்,  தெகல்கா செய்தியாளர் ஆசிஷ் ரகசியமாக பதிவு செய்த உரையாடல்களை சாட்சியமாக ஏற்க மறுத்து விட்டார். காரணம் சுருக்கமானது – விஹச்பி பஜ்ரங்தள் ஆட்களின் உரையாடல்கள் ஆட்கள் திரட்ட அதற்காக பேச, கருவி கொடுத்து ஆயுதபாணியாக்க திட்டமிட்டு செய்ய நடந்த முயற்சியை விவரித்தன. கொடூரமான ரத்தப் படுகொலையை திட்டமிட்டதை விவரித்தன. இதை அவர் ஏற்கவில்லை.

அதே நீதிபதி ஒன்றைக் குறிப்பிட்டார். “அப்படிப்பட்ட சிக்கவைக்கும் பதிவுகளை வைத்து ஒருவரை கைது செய்ய முடியாது என்றாலும், அவை ஒப்பீட்டு ஆவணங்களாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டார். மேலும் இந்த வீடியோ ஆதாரங்கள் போலி என்று அவர் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு குழு இதை நிராகரித்தன என்பதால் அவரும் நிராகரித்தார். காரணம்- விசாரணை ஆழமாக இல்லையாம்!  போதிய சாட்சிகளாக இப்பதிவுகளை ஏற்க முடியாது; இதன் மூலம் சதி நடந்து இருப்பதையும் நிச்சயமாக்க முடியாது என்றார் மேதகு நீதிபதி.

சாட்சிகளின் எல்லா அறிக்கைகள், குற்றம் சாட்டப்பட்டவர்களது அறிக்கைகள், எரியூட்டுதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர்களின் திரண்ட வாதங்கள் எல்லாவற்றையும் கேட்ட நீதிபதி தேசாய் எந்த யோசனையும், பரிசீலனையும் இல்லாமல்,  இவற்றுக்குப் பின்னால் திட்டமிட்ட சதி இருந்தது என்பதை ஏற்க  மறுத்தார்.

“சதிகளுக்குப் பின்னால் ஆதரவாக, மாநில தலைவர்களோ, அதிகாரிகளோ, போலீஸ் அதிகாரிகளோ நின்றார்கள் என்றோ, கோத்ரா ரயில் எரிப்புக்கு எதிராக கூட்டாக பழிவாங்க முனைந்தார்கள் என்றோ ஏற்க முடியாது” என்று கூறி மறுத்தார்.

பதிலாக, 10,000இல் இருந்து 15,000 பேர், அவர்களில் பலரும் ஆயுதம் கொண்டு வராதவர்கள்; அவரவர் தனி முடிவில் வந்தார்கள்; அது கூட்டாக திட்டமிட்டதல்ல” என்றார் நீதிபதி.

மேலும், அன்று போலீஸ் கடமையை முழுதும் செய்தார்கள்; கொலைகள்,  தீ எரிப்பு ஆகியவற்றுக்கான சதிக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது மட்டுமல்ல! மாபெரும் கொலை பாதகத்தை செய்யும் நோக்கத்தோடு அந்த கூட்டம்  வரவே இல்லை! என்று தான் நம்புவதாக கணம் நீதிபதி சொன்னார். இஷான் ஜாஃப்ரி கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு தூண்டிய பிறகு, கூட்டத்துக்குள்ளே கோபம் திரண்டது. அதுவே வெட்டிக்கொல்லும் அளவு ஒரு விபத்துக்குள் தள்ளியது என்றும் அவர் சொன்னார்.

சதிக்கருத்தை அவர் மறுத்துச் சொன்ன காரணம் இது- அன்று மதியம் 1:30 வரை கூட்டம் சொந்தமாக சேர்ந்தது; சில முஸ்லிம்களை தாக்கியது, அவர்களின் வீடுகளை வாகனங்களை கொளுத்தியது; குல்பர்க் குடியிருப்புக்குள் கற்கள் வீசியது, எரியும் கோணிப்பைகளை வீசியெறிந்தது. ஆனால், காலை 9 முதல் 1.30 வரை படுகொலை செய்யவில்லை.

இப்படி படுகொலை நடத்த கும்பல் சேர்ந்தது என்றால் போலீசு தடுக்காதிருக்கும் என்றோ, அவர்களை மறித்து உள்ளே புகுந்து படுகொலை நடத்தும் என்றோ எடுத்துக் கொண்டால் காலையிலேயே செய்திருக்கும் அல்லவா? என்ற எதிர் தரப்பின் வாதங்களை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

பல மணி நேரம் கழித்து காவல் அதிகாரிகள் வந்தார்கள் என்பதற்கும், கூடுதல் படை அனுப்பியதே தாமதம் என்பதற்கும், குல்பர்க் குடியிருப்பில்  இருந்தவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு தாமதமாக்கியது என்பதற்கும் மிகச் சுருக்கமான பத்தியில் கணம் நீதிபதி விளக்கம் தந்தார்-தீர்ப்பில்.!!!

நீதிபதி 1300 பக்கங்கள் விரிவாக ஓடிய தீர்ப்பில் ஒரே ஒரு ரத்தினச் சுருக்கும் கொண்ட அந்த பத்தியின், அர்ப்பணம் அற்புதமானது!   அது இதோ,” என் கருத்தில் மறுபடி மறுபடி பலமுறை நிறைய புழுதி கிளம்பி விட்டார்கள். எல்லா கோர்ட்டுகளிலும் பல தலங்களிலும் பல விவாதங்களும் முடிந்துவிட்டன.  மறுபடியும் இதே அம்சம் குறித்து மேலும் விவாதம் எழுப்புவது பாதுகாப்பானது அல்ல! நியாயமானதும் அல்ல! இந்த சச்சரவு என் கருத்தளவில் நிறைந்து விட்டது. அதற்குரிய புதைக்கும் சடங்கை முடித்து வைப்பதே நல்லது!

நீதிபதி 1.30 க்கு பிறகு திடீரென்று ஏன் நிலைமை மோசமாகிவிட்டது என்ற கேள்விக்கு ஏனோ தேவையில்லாமல் மறுபடி வந்தார். ஏதோ ஒரு குழாய் திறக்கப்பட்டதால் தண்ணீர் ஓடி  வெள்ளம் ஏற்பட்டதுடன் இனக் கொலைகளும் தூண்டி விடப்பட்டதோ?

தொடரும்…

  • இராசவேல்

முந்தைய பதிவுகள்:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here