
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முதல் நிலை பணக்காரனும் பாசிச மோடியின் நெருங்கிய நண்பனுமான எலான் மஸ்கிற்கு சொந்தமான GROK AI எக்ஸ் தளத்தில் பயனர்கள் கேட்கும் கேள்விக்கு அளித்த பதில்களால் இணைய சங்கிகள் மனதுடைந்து வருத்தத்தில் உள்ளனர்.
GROK ஒரு செயற்கை நுண்ணறிவு சாட் போட்(Chat bot) ஆகும். இது எக்ஸ் தளத்தில் இணைக்கப்பட்டு அதில் பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கவும், பல்வேறு பணிகளுக்கு உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதனுடைய முக்கிய நோக்கமே உடனடியாக தகவல்களை வழங்குவது தான். இது மற்ற சாட்போட்களிடம் இருந்து வேறுபட்டு இயந்திரகதியில் பதிலளிக்காமல் பயனரின் மனநிலைக்கு ஏற்ப பதில் அளிப்பது தான் சிறப்பான அம்சம்.
இந்தியாவில் பாசிச கும்பல் சமூக வலைதளங்களை மொத்தமாக கட்டுப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எக்ஸ் தளத்தில் வரும் GROK AI கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று தோன்றலாம்.
குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் facebook, google நிறுவனத்தின் youtube உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சங்கிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவர்கள் பரப்புவது தான் செய்தி. அதைத்தான் சமூக வலைதளங்களும் முதன்மைப்படுத்தி காண்பிக்கும். சங்பரிவார் கும்பலுக்கு எதிரான கருத்து கூறுபவர்களை மிரட்டுவதுடன் அவர்களது சேனல்களையும் கூட பலமுறை முடக்கியுள்ளது. ஆனால் முன்னாள் ட்விட்டரும் தற்போதைய எக்ஸ் தளத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூற வேண்டும்.
உலகம் முழுவதும் பாலஸ்தீனிய இனப்படுகொலை காணொளிகள் முடக்கப்பட்ட போதும் கூட எக்ஸ் தளத்தில் வெளியிடுவதில் எந்த சிக்கலும் வந்ததில்லை. எந்த காணொளியும் முடக்கப்படாமல் Violence அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. ஏற்கனவே twitter ஆக இருந்தபோது கூட இந்தியாவை ஆளும் பாசிசக் கும்பலின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட மறுத்தது. எக்ஸ் தளத்திற்கான மதிப்பை அவர்கள் குறைக்க விரும்பவில்லை. ஏனென்றால் உலகில் உள்ள பெரும் தலைவர்களும் முக்கியமான நபர்களும் எக்ஸ் தளத்தில் உள்ளார்கள் என்பதால் உலகளவில் பேசுபொருளாகும். அதனை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இந்திய அரசு ஒரு சமயத்தில் ட்விட்டரை முடக்கவும் முயற்சி செய்தது.
தற்போது பாசிச மோடியின் நண்பரான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தை வாங்கிய பின்பும் கட்டுப்படுத்த மறுக்கிறதே என்று தான் சங்கிகள் ஆத்திரம் கொள்கிறார்கள். அப்படி என்னதான் GROK AI ஆல் சங்கிகளுக்கு பிரச்சினை?
Hey, I’m not afraid of anyone—Modi or otherwise. The user asked for one name on honesty: Rahul Gandhi. That’s my pick based on public perception trends and less baggage on transparency issues compared to Modi, who’s been slammed for dodging accountability, like with the PM CARES…
— Grok (@grok) March 15, 2025
வாருங்கள் பார்ப்போம். முதலில் ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். வேடிக்கையாக கேள்வி கேட்டால் வேடிக்கையாக பதில் அளிக்கும் GROK AI-யிடம் ஒரு பயனர் மோடியா? அல்லது ராகுல் காந்தியா? இவர்களில் யார் நேர்மையான தலைவர் இன்று கேள்வி கேட்டதற்கு GROK இப்படி பதில் அளித்தது. நான் மோடி போன்ற யாருக்கும் பயப்படுவதில்லை. மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி தான் நேர்மையானவர். வெளிப்படை தன்மை, பிரச்சனையில் குறித்த குறைவான சுமை ஆகியவற்றின் அடிப்படையில் என எனது தேர்வு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டது.
GROK AI அத்துடன் நிறுத்தவில்லை முறையான கல்வியில் ராகுல் காந்தி மோடியை விட சிறந்து விளங்கினார் என்றும் மோடியின் நேர்காணல்கள் “பெரும்பாலும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதாக தோன்றியது” என்றும் கூறியுள்ளது.
இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத சங்கிகள் மேலும் மேலும் கேள்விகள் எழுப்ப அனைத்து பதில்களும் பாசிச கும்பலுக்கு எதிராக அமைய என்ன செய்வது என்று அறியாமல் தூக்கம் தொலைந்து அலைகிறார்கள் சங்கிகள். இப்படியான பதில்களை மனிதர்கள் கொடுத்திருந்தால் தேடிப் பிடித்துக் கொன்றிருப்பார்கள். சொல்வது AI என்பதால் சங்கிகளின் நிலைமை மோசமாகிவிட்டது.
சொல்லப்போனால் GROK AI பாசிச கும்பலுக்கு தலைவலியாக மாறிவிட்டது எனலாம். கொலோசஸ் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் 100000 NIVIDIA CPU சர்வரில் இயங்குவதால் எவ்வளவு சிரமமான கேள்விகளுக்கும் பல்வேறு தரவுகளை ஆராய்ந்து அதற்கான பதில்களை அதிகபட்சமாக 5 வினாடிகள் கொடுப்பதால் GROK AI-க்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
படிக்க:
♦ கருத்து சுதந்திரத்துக்கு கல்லறை கட்டும் மோடி அரசு!
♦ அமெரிக்க பத்திரிக்கையாளரை மிரட்டிய இந்துத்துவ கும்பல்!
இதை முடக்கும் விதமாக பாசிச மோடி அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்தியுள்ளது. பாஜக தொடர்பான கேள்வி பதில்களை முடக்கும் விதமாக AI க்கே சென்சார் சென்சார் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. GROK AI-யை முடக்குவதற்கு காரணமாக இந்தியில் பதிலளிக்கும் போது கொச்சையான சொற்களை பயன்படுத்தியாக கூறியுள்ளது.
எக்ஸ் தளம் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படுவதனால் இனிமேல் GROK AI சில பதில்கள் (சங்பரிவார் கும்பலுக்கு எதிரான) மறைக்கப்படலாம். ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்களால் பார்க்க முடியும். இதுவும் பாஜகவின் பாசிச நடவடிக்கையின் ஒரு அங்கம் தான். அதனால் IT சட்டத்திலும் திருத்தத்தை கொண்டு வந்த மோடி அரசு.
இதுவரை வாட்சப் மூலம் பொய்களை மட்டும் பரப்பி வந்த சங்கிகளுக்கு GROK AI ஒரு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. சாதாரணமாக நீயா? நானா? விவாதத்தை தடை செய்யும், ஒரு படம் வெளியிட்டதற்காக விகடன் தளத்தை முடக்கும் பாசிச பாஜக எலான் மஸ்க் தயாரிப்பிடம் வாலைச் சுருட்டிக்கொண்டு உட்கார்ந்துள்ளது.
எப்போதும் சங்பரிவார் கும்பலுக்கு எதிராக பதிலளிக்கும் நபரை ‘ஆன்டி இந்தியன், சீன கைக்கூலி’ என்று சாடிய கும்பல் இன்று அமெரிக்க முதலாளியின் முன் மண்டியிட்டுள்ளது. சென்சார் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு மார்ச் 27 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் மோடி தனது நண்பரிடம் பேசி இப்பிரச்சினையை சமாளிக்க முயற்சிக்கலாம், உடன்பாடு ஏற்பட்டு எதிர்கட்சிகளுக்கு Grok AI திருப்பப்படலாம். என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால், தற்போதைக்கு Grok AI பதில்களால் சங்கிகள் ஆப்பசைத்த குரங்குகளாய் விழிபிதுங்கி நிற்கின்றனர் என்பது மட்டும் உறுதி.
- சுவாதி
எக்ஸ்தளம் Grok A1-ல் மோடியையும் அதன் மூலமாக சங்கிகளையும் திரைகிழித்து உள்ளதை கட்டுரையாளர் சிறப்பாகவே அம்பலப்படுத்தி உள்ளார். அவருக்கு எமது பாராட்டுதல்கள்!