திருப்பரங்குன்றம் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு: அநீதிக்கு மேல் அநீதி!
மலை மீது உள்ள தர்காவில் ஆடு பலியிடுகிறார்கள் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்று தான் இந்த பிரச்சனையை தொடங்கினார்கள். அது இப்போது வளர்ந்து தீபம் ஏற்றுவதில் வந்து நிற்கிறது. நாளை எங்கு செல்லும் என்பதை பாபர் மசூதி நமக்கு நினைவுபடுத்துகிறது.

திருப்பரங்குன்றம் வழக்கில் சங் பரிவார் சொல்லும் (சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள) ‘தீபத்தூணில்’ தீபம் ஏற்ற வேண்டும் என ஜனவரி 6 அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன் கே.கே.ராமச்சந்திரன் அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு செல்லும் எனவும் கூறியுள்ளனர். ‘தீபத்தூணில்’ தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியான, தமிழ்நாட்டு மக்களின் சமய நல்லிணக்கத்திற்கு எதிரான தீர்ப்பை விமர்சித்து எழுதுவதற்கு கூட உரிமை இல்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது. தீபம் அதற்காக நாம் அமைதியாக இருந்து விட்டால் கலவர கும்பல் தமிழ்நாட்டை சுடுகாடாக்கிவிடும்.

இந்த தீர்ப்பு சங்பரிவார் கும்பலுக்கு சாதகமாக வரும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். அதற்கான காரணம் ‘தீபத்தூண்’ என சங்கிகளால் அழைக்கப்படும் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் இருக்கக்கூடிய நில அளவைகள் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பது சங்பரிவார் கும்பலின் திட்டம். இதை வைத்து தமிழ்நாட்டில் மத அரசியல் செய்யலாம். அதன் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் செல்வாக்கு பெறலாம் என பாஜக ஆர் எஸ் எஸ் கும்பல் கனவு காண்கிறது.

நீதித்துறையின் விசாரணையும் தீர்ப்பும் சந்தேகத்திற்குரியவையாகவே உள்ளது. நூறு ஆண்டுகளாக ஒரு இடத்தில் கோவில் நிர்வாகத்தால் தீபம் ஏற்றப்படுகிறது. அதில் பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நீதிமன்றம் என்ன சொல்கிறது ராம ரவிக்குமார் உள்ளிட்ட சங்கிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமாம்.

முருக பக்தர்களின் மீது நீதிமன்றத்திற்கு அக்கறை ஒன்றும் இல்லை. மோடி பக்தர் மீதுள்ள அக்கறையால் தான் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற தீர்ப்பை வழங்கினார். சரி, அதே கார்த்திகை தீபத் திருநாளில் பிள்ளையார்பட்டியில் உள்ள குன்றின் மீது தீபம் ஏற்றப்பட்டது அது செல்லுமா? செல்லாதா? என்பதையும் நீதிபதிகள் கூற வேண்டும்.

நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாடு மட்டுமல்ல, மதுரையில் உள்ள சிலருக்கும் ஒரு சந்தேகம் வந்துள்ளது. இதுவரை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படவில்லையோ என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளார்கள் சங்பரிவார் கூட்டுக் கும்பல்.

ஒரு தீபம் ஏற்றுவது தானே அதில் என்ன பிரச்சனை? என அரை சங்கி சீமான் போன்றவர்கள் கேள்வி எழுப்பலாம். ஏன் தமிழ்நாடு அரசும் மதுரை மக்களும் ஏற்ற விடாமல் அடம்பிடிக்கிறார்கள். இப்படி கேட்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்துவது அவசியம் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு அங்கு குழந்தை இராமர் சிலை வைக்கப்பட்டது. அதன் பின்பே பாபர் மசூதி, ரத யாத்திரை நடத்தி இடிக்கப்பட்டது.

படிக்க:

 திருப்பரங்குன்றம் பிரச்சனை: டிசம்பர் 21 – மதுரையில் காவி(லி)களுக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய பொதுக்கூட்டம்:

 திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியின் ஆர்.எஸ்.எஸ். சார்பு

அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடக்காது என நீங்கள் கூறினால் அது உங்களது அறியாமை. திருப்பரங்குன்றம் பிரச்சினையை தொடக்கத்தில் இருந்து எடுத்துப் பார்த்தால் ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள முடியும். மலையில் தீபம் ஏற்றுவதற்காக ஆரம்பத்த பிரச்சினை இல்லை இது.

மலை மீது உள்ள தர்காவில் ஆடு பலியிடுகிறார்கள் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்று தான் இந்த பிரச்சனையை தொடங்கினார்கள். அது இப்போது வளர்ந்து தீபம் ஏற்றுவதில் வந்து நிற்கிறது. நாளை எங்கு செல்லும் என்பதை பாபர் மசூதி நமக்கு நினைவுபடுத்துகிறது.

அதற்கான வேலைகளிலும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் மதநல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்  தமிழ்நாட்டில் இடிக்கப்பட வேண்டிய தர்கா மற்றும் மசூதிகளின் பட்டியல் கொண்ட இணையதளத்தின் மீது நடவடிக்கை வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கேற்றவாறு தமிழ்நாட்டு சங்கிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக நம்பக்கூடிய வகையில் சிக்கந்தர் தர்காவில் உள்ள தூண்கள் இந்துக்களுடன் தொடர்புடையது என சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். அதுபோல அர்ஜுன் சம்பத், எச்.ராஜா போன்ற மதவெறியர்கள் நேரடியாகவே சிக்கந்தர் தர்காவை தாக்கி பேசினார்கள்.

இப்படியாக அவர்களது ஒவ்வொரு அசைவும் கலவரத்தை நோக்கியதாகவே இருக்கும் போது  நீதிபதியின் தீர்ப்பு அதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அமைந்துள்ளது.

நில அளவைக் கல்லை தீபத்தூண் என சங்கிகள் கூறுவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதை நீதிபதிகள் நன்கு அறிந்துள்ளார்கள். ஆனால், அதே நீதிபதிகள் தமிழக அரசு அந்த தூண் தீபத்தூண் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டுமா இது எந்த வகையிலும் நேர்மையான வாதம் அல்ல. அது தீபத்தூண்தான் என்பவர்கள் அதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.

வழக்கு தொடுத்த ராம ரவிக்குமார் என்பவன் பக்தனும் அல்ல, தனிநபரும் அல்ல. இந்து தமிழர் கட்சி எனும் ஆர்எஸ்எஸ் வகையறாவைச் சார்ந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர். இவை நீதிபதிக்கு தெரியாமல் இல்லை தெரிந்தே தான்நேசிக்கும் சித்தாந்தத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

நீதிபதிகளின் தீர்ப்பில், வரும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்கள். காலம் இருக்கிறது என தமிழக அரசு பிரச்சனையை ஆறப் போடாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இத்தீர்ப்புக்கு தடை உத்தரவை பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மதநல்லிணக்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். மதவாதிகள் பக்கம் அல்ல. ஆகையால், மதவெறிக் கும்பலை  மக்களிடம் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்வதன் மூலம் சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்துவோம். தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை நிலைநாட்டுவோம்.

  • நந்தன்

1 COMMENT

  1. திருப்பரங்குன்றம்” இரு நீதிபதி அமர்வு தீர்ப்பு !
    அநீதிக்கு மேல் அநீதி !

    ஜனவரி 6 ஆம் தேதி திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து இரு நீதிபதிகளுகள் ஜெ. ஜெயச்சந்திரன் கே கே ராமச்சந்திரன் அளித்த தீர்ப்பு நீதிபதி ஜி ஆர் சாமிநாதனை விட அநீதியான தீர்ப்பு அவர்கள் ஏன் திருப்பரங்குன்ற சம்பவத்தை அயோத்தியாக மாற்ற கையில் எடுத்திருக்கிறார்கள் ஆடு கோழி பலியிட கூறினார்கள் அடுத்தாக தீபம் ஏற்ற சொல்கிறார்கள் இறுதியாக சிக்கந்தர் தர்காவை இடிப்பார்கள் ஆசிரியர் நந்தன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை சிறப்பாக உள்ளது
    தோழருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here