
பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தூக்கில் தொங்கிய பகத்சிங்கின் நினைவு தினம் இன்று.
“நம்நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு போர்க்குனமிக்க போராட்டங்களால் குலைநடுக்கத்தை ஏற்படுத்தியவர் பகத்சிங். இருட்டில் தவித்த நம் நாட்டிற்கு இவர் ஒரு விடிவெள்ளி. ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது, 11 வயதே நிரம்பிய பகத்சிங் தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணைப் பார்த்து தன்னை உணர்வூட்டிக் கொண்டார். நாட்டு விடுதலையை லட்சியமாக வரித்துக் கொண்டார். அன்றிலிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியானார் பகத்சிங்.
புரட்சியை நேசித்தவர்களை ஒன்றிணைக்க லாகூரிலிருந்து கல்கத்தா வரை பகத்சிங்கின் கால்படாத கல்லூரிகளோ, விடுதிகளோ இல்லை. இந்த வேலையின் போது, பல நாள் பட்டினி கிடக்க வேண்டி வந்தது. ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக துன்பங்களைத் தாங்கிக் கொண்டார். பகத்சிங்கின் அயராத உழைப்பால், 1928-ல் இந்துஸ்தான் சோசலிச குடியரசு ராணுவம் என்ற புரட்சிகர கட்சி உருவாக்கப்படது.
இன்று கார்ப்பரேட் முதலாளிகள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையைப்போல் குமுறிக்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒருகோடி வேலைவாய்ப்பைப் உருவாக்குவேன் என்று வாய்ச்சவடால் அடித்த மோடி இன்று வேலையில்லா இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறார். தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமான தமிழகத்தின் டெல்டாவை பாலைவனமாக்க காவிரி உரிமை பறிப்பு, மீத்தேன், ஷேல் கேஸ், சாகர்மாலா என பல நாசகாரத்திட்டங்கள்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பகத்சிங் நினைவு நாளில் முழங்கியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற எமது மாணவர் அமைப்பு.
இன்று அதே நாளில் மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டதைக் கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு மாணவர்களுக்கு கல்விக்காக கொடுக்க வேண்டிய தொகையை மறுக்கின்ற பாசிச ஒடுக்கு முறையை எதிர்த்தும், “ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களே! உங்களின் பாசிச சர்வாதிகாரத்திற்கு அடிபணியாது தமிழ்நாடு” என்ற முழக்கத்தின் கீழ் களத்தில் நிற்கிறது அதே மாணவர் அமைப்பு.
புரட்சி என்ற சொல் மலினப்பட்டதைப் போல உலகில் வேறு எந்த சொல்லும் மலினப்பட்டது கிடையாது என்று எதிரிகளே பார்த்து கைக்கொட்டி சிரிக்கின்ற வகையில் போலியாகவும், உதட்டளவிலும் புரட்சி பேசுகின்ற பல்வேறு வகையான நடைமுறை கொண்டவர்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடித்து பேசுகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை கொண்டவன் காலில் இடித்துக் கொண்டாலும், காலன் தன் கழுத்தை நெரித்தாலும் சங்கரா, சங்கரா என்று புலம்புவதைப் போல பகத்சிங்கின் பெயரை வைத்துக் கொண்டு துணிச்சலாக பிழைப்பு நடத்துகிறார்கள் பல வண்ணத் திரிபுவாதிகள்.
நாட்டை பிரிட்டன் காலனி ஆதிக்கம் கைப்பற்றி வைத்துக் கொண்டிருந்தபோது சாத்வீக முறையில் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முன் வைத்து மக்களை ஏய்த்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சிகர எழுச்சியின் மூலம் தான் நாட்டின் விடுதலையை சாதிக்க முடியும் என்று துணிச்சலாக முன்வைத்து போராடியவர் பகத்சிங்.
தான் முன்வைக்கும் கொள்கைகளுக்கு ஏற்ப எதிர் விளைவு ஏற்படும் என்பதையும் புரிந்துக் கொண்டுதான் தனது சோசலிசக் கனவை லட்சியமாகக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் இறக்கின்ற தருணம் வரை போராடினார் பகத்சிங்.
அவரது வாழ்க்கையிலிருந்து அந்த லட்சிய வேட்கையை மனதில் இருத்திக் கொள்வதற்கு இன்னமும் இந்தியாவின் மாணவர்கள் – இளைஞர்கள் பட்டாளம் துடித்துக் கொண்டுதான் உள்ளது.
ஆனால் பகத்சிங்கை காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்த கயவர்கள் முதல் பகத்சிங்கை வயிற்றுப் பிழைப்புக்காக பயன்படுத்திக் கொண்டு சுற்றித் திரியும் எத்தர்கள் வரை பகத்சிங், பகத் சிங் என்று கூச்சலிட்டு கொண்டுள்ளனர்.
வானத்தில் நட்சத்திரமாய் இந்த ஏமாற்றுப் பேர் வழிகளை பார்த்து சிரித்துக் கொண்டுள்ளார் பகத்சிங்.
நாட்டை ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மறுகாலனியாக்குகின்ற நிகழ்ச்சி போக்கு தீவிரமடைந்துள்ளது. அதற்கு ஏற்பவே அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை தீர்மானித்து கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதிகள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.
படிக்க:
♦ மாவீரன் பகத்சிங் நினைவு நாள் இன்று! (23-03-1931 23-03-2025)
♦ மார்ச் 23: ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்!
பாசிசம் தனது வீட்டு கதவை தட்டுகின்ற வரையில் பாசிச ஆட்சி இல்லை என்று ஏய்த்துப் பிழைக்கின்ற ‘கம்யூனிச பிழைப்புவாதிகள்’ முதல் பகத்சிங்கை பூஜையறை படமாக்கி மாலை போட்டு கோஷம் போடுகின்ற கழிசடைகள் வரை பகத்சிங் முன்வைத்துப் போராடிய லட்சியத்திற்கு துரோகமிழைக்கிறார்கள்.
பாசிசமா பாயாசமா என்று நக்கல் அடிக்கும் சினிமா கழிசடை விஜய்க்கும், பாசிசத்தின் பாதிப்புகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி அதற்கு எதிராக மக்களை திரட்ட போராட்டம் நடத்தாத அரசியல் பிழைப்பு வாதிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
போலீசு வீட்டு பக்கம் வராமலேயே புரட்சி செய்வது எப்படி என்று முகநூல் பக்கத்தில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்ற முகநூல் புரட்சியாளர்கள் பகத்சிங்கை பற்றி பல்வேறு கோணங்களில் எழுதி, ‘தானும் ஏதோ சமூகப் பொறுப்புள்ளவன்’ என்பதைப் போல காட்டிக் கொண்டு நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களும் பாசிசத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால் எந்த அமைப்பின் கீழும் நின்று செயல்பட மாட்டேன் என்று ‘தறுதலை ஜனநாயகத்தை’ முன் வைக்கிறார்கள்.
உண்மை உறங்கிக் கொண்டிருக்கும் போது பொய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதைப் போல பகத்சிங்கை நேசித்து அவரது லட்சியத்தை தொடர வேண்டும் என்று மனதில் நிறுத்திக் கொண்டு போராடுகின்ற போராளிகள் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் போதே மேற்கண்ட கழிசடைகள் பகத்சிங்கின் பெயரை உச்சரித்துக் கொண்டு உணர்ச்சிக் குழப்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.
எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், நண்பர்களுக்கும் இடையில் உள்ள எல்லைக் கோட்டை தெளிவாக வரையறுத்துக் கொள்ளாத ‘சித்தாந்த குழப்பவாதிகள்’ பகத்சிங்கின் பெயரை உச்சரிப்பது வெறும் சடங்குக்கு தானே ஒழிய அவரது லட்சியங்களை ஈடேற்றும் எண்ணத்தில் இருந்து கிடையாது.
நாம் பகத்சிங்கை கொண்டாடுவோம். அவரை தூக்கில் ஏற்றிய வெள்ளை ஏகாதிபத்தியத்தின் இன்றைய வடிவமாக இந்தியாவை ஏறித் தாக்கி வரும் பாசிச பயங்கரவாதத்தை, கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பகத்சிங்கை முன்னிறுத்தி போராட்டங்களை கட்டமைப்போம்.
இழப்பு, தியாகங்கள் இல்லாமல் புரட்சி ஒருபோதும் முன்னேறாது!
- ஆல்பர்ட்
போலி சித்தாந்தவாதிகளுக்கு இந்தக் கட்டுரை படித்தவுடன் உண்மை உரைத்திருக்கும். போலிகள் இனிதாவது மாற்றிக் கொள்வார்களா? பார்க்கலாம்
நேற்று ( 23-03-2925) மாவீரன் பகத்சிங் நினைவு நாளை ஒட்டி காலையில் எழுந்தவுடன் திடீரென எண்ணம் தோன்றி ஒரு சிறு பதிவாவது போட வேண்டுமே என்று “மாவீரன் பகத்சிங் நினைவு நாள் இன்று”
23-03-1931–23-03-2025 — என்ற ஒரு சிறு பதிவினை நான் பதிவிட்டிருந்தேன். அது மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வரும் என்று கூட எண்ணிப் பார்க்கவில்லை. முதல் நாளே திட்டமிட்டு நான் செயல்பட்டு இருப்பேன் ஆனால் கட்டுரையை இன்னும் செழுமையாகக் கொண்டு வந்திருக்கலாம்.
அவசரக் கதியில் அதனை நான் பதிவிட்டதால் சில முக்கிய தவறுகள் கூட இடம்பெற காரணமாய் விட்டது. அந்தக் குறைகளை எல்லாம் போக்கும் வகையில்,
கட்டுரையாளர் தோழர் ஆல்பர்ட் மாவீரன் பகத்சிங் பற்றி சிறப்பான படைப்பினை வெளியிட்டுள்ளார். போலித்தனமாக பகத்சிங் பெயரை உச்சரிக்கும் பலவண்ண திரிபுவாதிகளை-‘நடிகர்களை’ நன்றாகவே அம்பலப்படுத்தவும் செய்துள்ளார். நாடு இருக்கும் நிலையில் இன்று இளைஞர்களும் மக்களும் மாவீரன் பகத்சிங் வழியில் வீறு கொண்டு எழுந்து போராட வேண்டிய அவசியத்தினை காரண காரியங்களுடன் தோழர் விலைக்கு உள்ளார். அது மிகவும் சிறப்புடைத்து. தோழருக்கு எமது
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!